Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பிரபலமான ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் பைக்கில் தற்பொழுது ஸ்போக்டூ வீல் உடன் கூடிய ட்யூப்லெஸ் டயர் மாடல் ஆனது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் ரூபாய் 2.96 லட்சத்தில் துவஙகுகின்ற நிலையில் முந்தைய மாடலை விட ரூபாய் 11,000 கூடுதலாக அமைந்திருக்கின்றது. முன்பாக ஹிமாலயன் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.12,424 செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். Himalayan 450 Spoked Tubeless tyre திடீரென ஏற்படுகின்ற டியூப் டயர் பஞ்சர்களை சரி செய்ய சக்கரங்களை கழட்டி பின்பு டியூப் நீக்கி பஞ்சரை சரி செய்வதற்காக சிக்கல்களுக்கு மாற்றாக தான் டியூப்லெஸ் டயர்கள் அறிமுகம் செய்யப்பட்டன ஆனாலும் ஸ்போக்டூ வீல் பைக் மாடல்களில் பெரும்பாலும் டியூப்லெஸ் டயர்கள் தற்பொழுது வரை பரவலாக கொடுக்கப்படவில்லை, என்றாலும் கூட தற்பொழுது சில பிரீமியம் பைக்கில் ட்யூப்லெஸ் டயர்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு பிரிமியம் பைகளை மட்டுமே இடம்பெற்று இருக்கின்ற இந்த வசதியானது…

Read More

200 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் ஸ்டோர்ம் இவி எல்ஆர் (StromEV LR) மற்றும் 140 கிமீ ரேஞ்ச் வழங்கும் ஸ்டோர்ம் இவி T1250 என இரண்டு மாடல்களை ஆய்லர் மோட்டார்ஸ் (Euler Motors) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ரூபாய் 100 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்ட்ரோம் இவி மாடல் 4 சக்கர இலகுரக வர்த்தக வாகன பிரிவில் மிக சிறப்பான வசதிகளை வழங்குகிறது. 1250 கிலோ சுமைதாங்கும் பிரிவில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாக இரு நகரங்களுக்கு இடையே பயணிக்கும் திறனுடன் 200 கிமீ ரேஞ்ச் வழங்கும் வகையில் 30Kwh பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. குறைந்த விலை மாடல்கள் 19Kwh பேட்டரி ஆப்ஷனை பெற்று 140கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இலகுரக வர்த்தக வாகன சந்தையில் மிக சிறப்பான வகையில் ஓட்டுநரின் பாதுகாப்பினை உறுதி செய்ய ADAS (Adavanced Driver Assistance System) இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் முன்புற மோதலை தவிர்க்கும்…

Read More

பிரசத்தி பெற்ற ரெட்ரோ ஸ்டைல் கொண்ட டிவிஎஸ் ரோனின் பைக்கில் ஆரம்ப நிலை SS வேரியண்ட் ரூ.15,000 விலை குறைக்கப்பட்டிருப்பதுடன், பண்டிகை கால சிறப்பு எடிசனும் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. ஹண்டர் 350, W175 உட்பட பல்வேறு ரெட்ரோ தோற்றத்தை கொண்ட ஆரம்ப நிலை மோட்டார்சைக்கிள்களுக்கு சவால் விடுக்கின்ற ரோனின் 225 பைக்கில்  225.9 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 20.1 HP பவர் மற்றும் 19.93 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது. 17 அங்குல வீல் பொருத்தப்பட்டுள்ள இந்த மாடலில் யூஎஸ்டி ஃபோர்க் ( சில வேரியண்டுகளில் கோல்டு நிறத்தில்) மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. ரோனின் மாடலில் உள்ள (SS, DS என இரண்டிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்) டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் அர்பன் மற்றும் ரெயின் என இரண்டு மோட் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ ஸ்டைலை கொண்ட மாடலில் டிஜிட்டல் கிளஸ்ட்டர்…

Read More

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள Call of the Blue version 4.0 டீசரில் MT-09, R7, XSR 155, NMax 155 மற்றும் டெனீர் 700 என ஐந்து மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. குறிப்பாக எக்ஸ்எஸ்ஆர் 155 மாடலின்  மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து இந்திய சந்தையில் அதிகரித்து வந்தாலும் FZ-X என்ற மாடலை கொண்டு வந்தது. மிக நீண்ட காலமாக இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றான XSR 155 நியோ ரெட்ரோ மாடலான இந்த பைக்கில் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பு மற்றும் பல்வேறு ரெட்ரோ அம்சங்களை பெற்று விளங்குகிறது. இந்த பைக்கில் யமஹாவின் R15, MT-15 பைக்குகளில் உள்ள 155சிசி லிக்யூடு கூல்டூ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. MT-03, R3 போன்ற மாடல்களை தொடர்ந்து முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள MT-09, R7, டெனீர் 700 அட்வென்ச்சர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்த மாடல்களும் இந்திய சந்தைக்கு…

Read More

125சிசி ஸ்கூட்டர் சந்தையில் கிடைக்கின்ற யமஹா நிறுவனத்தின் ரே ZR ஸ்டீரிட் ரேலி 125Fi ஹைபிரிட் விற்பனைக்கு ரூ.99,910 விலையில அறிமுகமானது. ஸ்போர்ட்டிவான ஸ்டைல் கொண்ட ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் தற்பொழுது புதுப்பிக்கப்பட்ட எல்இடி ரன்னிங் விளக்கு பெற்றிருப்பதுடன் யமஹா Y-கனெக்ட்டிவ் சார்ந்த அம்சங்களில் ஆன்சர் பாக் (Answer Back) வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. முந்தைய மாடலை விட ரூபாய் 2000 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்ற இந்த மாடலில் புதிதாக சைபர் கிரீன் என்ற நிறம் சேர்க்கப்பட்டுள்ளது மற்றபடி மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த ஒரு மாற்றங்களும் கிடையாது. ஆன்சர் பேக் என்று அம்சம் அதிக வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ள பகுதியில் இலகுவாக வாகன இருப்பிடத்தை அறிவதற்காக யமஹா Y கனெக்ட் ஸ்மார்ட்போன் செயலி மூலம் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். ரே இசட் ஆர் 125 ஸ்கூட்டரில்  8.2 ஹெச்பி பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக…

Read More

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற ரைடர் 125சிசி மாடலில் குறைந்த விலை வேரியண்ட் டிரம் பிரேக் கொண்ட மாடல் ரூ.88,804 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு பக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்று கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஒற்றை இருக்கை ஆப்ஷனுடன் கருப்பு மற்றும் சிவப்பு என இரு நிறங்களை பெறுகின்ற ரைடர் 125 மாடலில் மற்றபடி மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் மற்ற வேரியண்டுகளைப் போலவே அமைந்திருக்கின்றது இந்த மாடலிலும் 125சிசி என்ஜின் தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 124.8cc சிங்கிள்-சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் செயல்திறன் 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி இந்த மாடலில் ஒற்றை இருக்கை டிஸ்க் பிரேக் கொண்ட…

Read More