டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரபலமான ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 2.2 kWh மற்றும் 3.4 kWh என இருவிதமான பேட்டரிக்கு மட்டும் சலுகை அறிவிக்கப்பட்டு டாப் 5.1 kWh பேட்டரிக்கு சலுகை வழங்கப்படவில்லை. ஐக்யூப் 2.2 kWh, ஐக்யூப் 3.4 kWh,மற்றும் ஐக்யூப் S 3.4 kWh என மூன்று மாடல்களுக்கும் ரூ.17,300 வரையும், ஐக்யூப் 3.4 kWh மாடலுக்கு ரூ.20,000 வரை சலுகை கிடைக்கும். கூடுதலாக ரூ.5,999 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி இலவசமாக 5 ஆண்டுகள் அல்லது 70,000 கிமீ வரை கிடைக்கின்றது. TVS iQube Price list iqube 09 (2.2Kwh) – ₹ 1,08,042 iqube 12 (3.4Kwh) – ₹ 1,37,363 iqube S (3.4Kwh) – ₹ 1,47,155 iqube ST 12 (3.4Kwh) – ₹ 1,56,290 iqube ST 17 (5.1Kwh)…
Author: MR.Durai
பண்டிகை காலத்தை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திஃ பிரசத்தி பெற்ற ‘Punch’ எஸ்யூவி மாடலில் கேமோ எடிசனை மற்ற மாடல்களை விட மாறுபட்ட நிறத்தில் கூடுதலான இன்டீரியர் மாறுபாடுடன் ரூ.15,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு ரூ.8.45 லட்சம் முதல் ரூ.10.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பச்சை நிறத்தில் (Seaweed Green) வெளியிடப்பட்டுள்ள மேற்கூரையில் வெள்ளை நிறத்தை பெற்று 16 அங்குல கிரே நிற அலாய் வீலும், இன்டீரியரில் முழுமையான கருப்பு உட்புறத்தை கொண்டு சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் டோர் பேட்களில் ‘கேமோ’ கிராபிக்ஸ் உள்ளது. மேலும் உட்புற கதவு கைப்பிடிகளும் கருப்பு நிறத்தில் உள்ளன. பஞ்ச் 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஓட்டுநருக்கு செமி டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ஆட்டோ ஏசி மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர். பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன. Tata…
சிறிய ரக டிரக் சந்தையில் மஹிந்திரா வெளியிட்டுள்ள புதிய ‘ZEO’ எலெக்ட்ரிக் மினி டிரக் மாடலின் ஆரம்ப விலை ரூ.7.52 லட்சம் முதல் ரூ.7.99 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Flat Side Deck (FSD) மற்றும் Delivery Van (DV) என இருவகையில் கிடைக்கின்றது. FSD V1 டிரக் ₹7.52 லட்சம் FSD V2 டிரக் ₹7.69 லட்சம் DV V1 டிரக் ₹7.82 லட்சம் DV V2 டிரக் ₹7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மஹிந்திராவின் ZEO டிரக்கில் இரண்டு விதமான லித்தியம் இரும்பு பாஸ்பேட் (LFP) பேட்டரியைக் கொண்டு V1 வேரியண்ட் 18.4 kWh பேட்டரியுடன் அதே நேரத்தில் V2 மாடல்கள் 21.3 kWh திறன் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களும் அதிகபட்சமாக 30KW பவர், 114 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. மணிக்கு 60 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 32% அதிகபட்ச கிரேடபிலிட்டியுடன், நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற…
390 டியூக் பைக்கில் இருந்து பெறப்பட்ட புதிய 5 அங்குல டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்டர் பெறுகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் 200 டியூக் மாடல் பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெறுகின்றது. இது தவிர எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை மற்றும் நிறங்களில் சிறிய அளவிலான பாடி கிராபிக்ஸ் மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் கேடிஎம் கனெக்ட் செயலியை ப்ளூடூத் மூலம் இணைத்து டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்புகளை பெறும் வசதி, சூப்பர் மோட்டோ ஏபிஎஸ் சார்ந்த அம்சங்கள் ஆகியவற்றை பெறுகின்றது. எலெக்ட்ரிக் ஆரஞ்சு, டார்க் கிளாவனோ, சில்வர் மெட்டாலிக் என மொத்தமாக மூன்று நிறங்களில் கிடைக்கின்ற 2024 மாடலில் தொடர்ந்து 199.5cc லிக்விட்-கூல்டு என்ஜினை பெறுகின்ற கேடிஎம் 200 டியூக் பைக் அதிகபட்சமாக 25 hp பவர் மற்றும் 19.3 Nm டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது.…
வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் புதுப்பிக்கப்பட்ட டிசைனை பெறுவதுடன் இன்டீரியர் மேம்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்பக்க பானெட் மாற்றப்பட்டு, அகலமான க்ரோம் பேனலுடன் கிரில் புதுப்பிக்கப்பட்டிருப்பதுடன் ஹெட்லைட் மேம்படுத்தப்பட்டு, எல்இடி ரன்னிங் விளக்குடன் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. பின்புறத்தில் புதிய டெயில் லைட், பம்பர் ஆகியவற்றை கொண்டுள்ளது. இன்டீயர் தொடர்பாக வெளியிடப்பட்ட டீசரில் உள்ளதை போன்றே பழுப்பு மற்றும் கருப்பு என இரட்டை கலவையை பெற்று கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் கிளஸ்ட்டர் என பலவற்றை கொண்டிருப்பதுடன், காற்று சுத்திகரிப்பான வசதி, வயர்லெஸ் சார்ஜிங், பின்புறத்தில் ஏசி வென்ட் ஆகியற்றை கொண்டிருக்கலாம். மற்றபடி, தொடர்ந்து 1.0 லிட்டர் NA எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவிதமான ஆப்ஷனில் கிடைக்க உள்ளது. புதிய…
இந்தியாவின் முன்னணி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது பிரபலமான ஸ்கூட்டர் வரிசைகளில் ஒன்றான ஆரம்ப நிலை S1X மாடலின் ரேஞ்ச் வெளிப்படுத்தும் 2kwh பேட்டரி கொண்டுள்ள மாடலை பண்டிகை காலத்தை முன்னிட்டு BOSS (Biggest Ola Season Sale) சிறப்பு விற்பனைச் சலுகையாக ரூபாய் 49,999 ஆக விலையை குறைத்துள்ளது ரூ.50,000 விலைக்குள் அமைந்துள்ள தற்காலிக விலை குறைப்பு ஸ்டாக் கையிருப்பில் உள்ளவரை மட்டுமே கிடைக்கும் என ஓலா நிறுவனம் குறிப்பிடுகின்றது.. 2kwh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் அதிகபட்சமாக 95 கிமீ ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 65-75 கிமீ வழங்கும் நிலையில் இந்த மாடலின் டாப் ஸ்பீடு 85 கிமீ ஆக உள்ளது. இன்று முதல் இந்த S1X இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.