ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் வகையிலான மேம்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான RV1 மற்றும் RV1+ அறிமுகத்தின் பொழுது அப்டேட் செய்யப்பட்ட ஆர்வி400 பைக் புதிய லூனார் க்ரீன் நிறத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டுள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 0-100% பெறுவதற்கு 1 மணி நேரம் 30 நிமிடங்களில் சார்ஜ் (முன்பாக 0-80% 1 மணி நேரம் 20 நிமிடங்கள்) செய்து கொள்ளலாம். கூடுதலாக ரிவர்ஸ் பார்க்கிங் உதவி, தெளிவான புதிய டிஸ்பிளே கிளஸ்ட்டரில் ப்ளூடூத் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளது. 3.24 kWh பேட்டரி பேக்கை 3 kW பவர் வழங்கும் மிட் டிரைவ் மோட்டார் மூலம் இயக்கப்படும் RV400 ஈக்கோ மோடில் 160 கிலோ மீட்டர் வரையிலான ரேஞ்ச் வெளிப்படுத்தும். முந்தைய மாடல் 150…
Author: MR.Durai
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300 முதல் 350 சிசி சந்தையில் உள்ள CB300F, CB300R, CB350, H’ness CB350 மற்றும் CB350RS போன்ற மாடல்களுக்கு ரீகால் அழைப்பு விடுத்துள்ளது. அக்டோபர் 2020 முதல் ஏப்ரல் 2024 வரை தயாரிக்கப்பட்ட மாடல்களில் ஏற்பட்டுள்ள வீல் ஸ்பீடு சென்சார் கோளாறின் காரணமாக பிழையான வேகம், தவறான வகையில் ஏபிஎஸ் இயக்கம் மற்றும் டிராக்சன் கண்ட்ரோல் போன்ற செயல்பாடுகளுக்கு சிறப்பான வகையில் இயங்காமல் சிக்கல்களை ஏற்படுத்த காரணமாக இதனுடைய வடிவமைப்பு அமைந்திருக்கின்றது இந்த வடிவமைப்பினால் இந்த சென்சார்களில் நீர் தேங்குவது பெரிய பிரச்சினையாக இருப்பதினால் இந்த பிரச்சனைக்காக திரும்ப அழைக்கப்பட்டுள்ள CB300F, CB300R, CB350, H’ness CB350 மற்றும் CB350RS போன்ற மாடல்களுக்கு முற்றிலும் இலவசமாக மாற்றி தரப்பட உள்ளது. அடுத்த மிக முக்கியமாக கேம் ஷாஃப்டில் உற்பத்தி குறைபாடுடன்…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது புதுப்பிக்கப்பட்டு வந்துள்ள 2024 ஸ்பீடு 400 என இரண்டு மாடல்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் மற்றும் ஒற்றுமைகள் என்ன மேலும் எவ்வாறு விலை குறைப்பு சாத்தியமானது உள்ளிட்ட பல்வேறு விபரங்களை பார்க்கலாம் வாருங்கள். இரு மாடல்களுக்கான விலை வித்தியாசம் ரூபாய் 41 ஆயிரம் வரை அமைந்திருக்கின்றது. Triumph Speed T4 Vs Speed 400 அடிப்படையான டிசைன் அம்சங்கள் இரண்டு மாடல்களுக்கும் ஒரே மாதிரியாக அமைந்து இருந்தாலும் கூட வித்தியாசத்தை வெளிப்படுத்தும் வகையில் சில மாற்றங்கள் இருக்கின்றன. குறிப்பாக பாடி கிராபிக்ஸ் மற்றும் நிறங்கள் சற்று வேறுபடுகின்றன. வட்ட வடிவமான LED ஹெட்லைட், ஒரே மாதிரியான 13 லிட்டர் கொள்ளளவு பெற்ற டேங்க் வடிவமைப்பு மற்றும் மெல்லிய டெயில் பகுதி, டேக்கோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர் உள்ளிட்ட பிற அடிப்படைத் தகவல்களை…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகை ஆக ரூபாய் 84,990 ஆக துவங்குகின்றது. தினசரி பயன்பாடுகளுக்கு ஏற்ற கம்யூட்டர் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய மாடல்கள் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டு மிக சிறப்பான வகையிலான ரேஞ்ச் மற்றும் குறைவான பராமரிப்பு செலவு கொண்டதாக விளங்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. Revolt RV1 & RV1+ இரு மாடல்களும் பொதுவாகவே அடிப்படையான டிசைன் அம்சங்களில் பெரிதாக மாற்றங்கள் இல்லை. மற்றபடி பேட்டரி மற்றும் வசதிகளில் சற்று வித்தியாசப்படுகின்றது. இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டமானது கொண்டிருக்கின்றது. முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர் பின்புறத்தில் ட்வின் சாக் அப்சார்பர் கொண்டுள்ள இந்த மாடலில் கருப்பு மிட்நைட் புளூ, காஸ்மிக் பிளாக் ரெட், டைட்டன் ரெட் சில்வர்,…
டிரையம்ப் வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 பைக் மாடலில் பல்வேறு வசதிகள் ஸ்பீடு 400 மாடலை விட குறைவான விலையில் வழங்கும் நோக்கில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்த எஞ்சின் பவர் முதல் டெலிஸ்கோபிக் ஃபோர்க் என பல மாற்றங்கள் உள்ளன. Triumph Speed 400 T4 தோற்ற அமைப்பில் ஸ்பீடு 400 போலவே அமைந்தாலும் டிரையம்ப் ஸ்பீடு T4 பைக்கில் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டு, பின்புறத்தில் 130 மிமீ பயணக்கின்ற மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் ஆனது ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜஸ்டர் உள்ளது. இந்த மாடலில் 110/80 R17 மற்றும் 140/70 R17 டயர் எம்ஆர்எஃப் Zapper FX2 வழங்கப்பட உள்ளது. முன்பக்கத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 230 மிமீ டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. முழுமையான எல்இடி விளக்குகள், மற்றும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்களுடன் கிடைக்கின்றது. TR சீரிஸ்…
பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் வெளியான ஸ்பீடு 400 பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதிதாக 4 நிறங்களை பெற்று சிறிய அளவிலான மேம்பாடுகளுடன் ரூ.2.40 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. முந்தைய மாடலை விட கூடுதலான சொகுசு தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அதிகப்படியான ஃபோம் பெற்ற இருக்கை மேம்படுத்தப்பட்டுள்ளது. 2024 Triumph Speed 400 டிரையம்ப் ஸ்பீடு 400-ல் 10 மிமீ வரை கூடுதல் ஃபோம் பெற்ற இருக்கை, அதிக புராஃபைல் பெற்ற முன்பக்க 110/80 R17 மற்றும் 150/70 R17 இரண்டும் Vredestein ரேடியல் டயர், 5 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பிரேக் மற்றும் கிளட்ச் லிவர் ஆகியவற்றுடன் ரேசிங் மஞ்சள், மெட்டாலிக் வெள்ளை, ரேசிங் சிவப்பு, மற்றும் கருப்பு என நான்கு நிறங்களுடன் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் உள்ளது. தொடர்ந்து அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. 2025 மாடலில் தொடர்ந்து TR சீரிஸ் என்ஜின் 398.15cc…