வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் கார்னிவல் எம்பிவி மாடலுக்கான முன்பதிவு கட்டணமாக ரூபாய் 2 லட்சம் வசூலிக்கப்பட்டு செப்டம்பர் 16 முதல் முன்பதிவு துவங்குகின்றது. இந்தியாவில் வரவுள்ள புதிய கார்னிவல் மாடலில் இடம் பெற உள்ள எஞ்சின் விபரம் தற்பொழுதும் வெளியாகவில்லை என்றாலும் கூட இந்த மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச அளவில் கூடுதலாக 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 3.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் என்ஜின் ஆனது கிடைக்கின்றது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள (CBU) கார்னிவல் காரில் ஒற்றை வேரியண்ட் மட்டும் பெற்று முழுமையான பல்வேறு நவீன வசதிகள் கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் மூலம் இரண்டு சன்ரூஃப், 12.3 அங்குல தொடுதிரை…
Author: MR.Durai
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வரும் படங்கள் முதன்முறையாக இனையத்தில் கசிந்துள்ளது. HF100, HF டீலக்ஸ் என இரண்டு மாடல்களுக்கு அடுத்தப்படியாக பிரபலமான ஸ்ப்ளெண்டர் பிளஸ், ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec, மற்றும் ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec 2.0, இது தவிர பேஷன் பிளஸ் போன்ற மாடல்களில் உள்ள மிகவும் நம்பகமான 97.2cc என்ஜின் அதிகபட்சமாக 7.91hp பவர் மற்றும் 8.05Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது. சாலை சோதனை ஓட்டத்தில் உள்ள பைக்கில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்கு மற்றும் பின்புறத்தில் டூயல் ரியர் ஸ்பிரிங்ஸ், முன் மற்றும் பின்புற டிரம் பிரேக் மற்றும் அலாய் வீல் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து தனது பழைய மாடல்களை புதுப்பிக்கப்பட்டு மற்றும் பட்ஜெட் விலையில் இந்த மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கொண்டு வருவதற்கான…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி பேனல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வண்ண TFT டிஸ்ப்ளே பெற்றிருப்பதுடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் மியூசிக் சார்ந்த பயன்பாடுகளுக்கு வால்யூம் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. புளூடூத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போனை இணைத்த பிறகு, யமஹா Y-connect ஆப் பயன்படுத்தி பல்வேறு அம்சங்களை அணுகலாம். ஆர்15எம் பைக்கின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை. LC4V 155cc, லிக்யூடு கூல்டு SOHC நான்கு வால்வு, சிங்கிள் சிலிண்டர் VVA பெற்ற என்ஜின் 18.1 bhp மற்றும் 14.2 Nm வெளிப்படுத்துகின்றது. சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் உடன் வருகின்றது. முன்பக்கத்தில் அப் சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் உடன் 282 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் ரேடியல் டயருடன் 220 மிமீ டிஸ்க் உடன் யமஹா ஆர்15எம் பைக்கில்…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது சென்னை ஆலையில் உற்பத்தியை துவங்க உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக ஃபோர்டு இந்தியாவில் தயாரிக்க உள்ள மாடல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 3,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் லட்சியமான Ford+ growth திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உற்பத்தியில் கவனம் செலுத்தும் வசதியை மீண்டும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஃபோர்டு இன்டர்நேஷனல் மார்க்கெட்ஸ் குழுமத்தின் தலைவர் Kay Hart கூறுகையில், “சென்னை ஆலைக்கான பல்வேறு விருப்பங்களை நாங்கள் ஆராய்ந்ததில், தமிழ்நாடு அரசின் தற்போதைய ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். “இந்த நடவடிக்கையானது, புதிய உலகச் சந்தைகளுக்குச் சேவை செய்வதற்காக, தமிழ்நாட்டில் கிடைக்கும் உற்பத்தி நிபுணத்துவத்தைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளதால், இந்தியாவிற்கான நமது தற்போதைய உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக்…
ஹீரோவின் மிகவும் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் ஜூம் 125R சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ளது. முதன்முறையாக EICMA 2023 அரங்கில் காட்சிக்கு வந்த ஜூம் 125ஆரில் 14 அங்குல வீல் பெற்று எல்இடி ஹெட்லைட் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டிருக்கும். ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் சந்தையில் உள்ள டிவிஎஸ் மோட்டார் என்டார்க் 125, டியோ 125, ரேஇசட் ஆர், அவெனிஸ் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை ஜூம் 125 எதிர்கொள்ள உள்ளது. இந்த ஸ்கூட்டரில் சமீபத்தில் வந்த டெஸ்டினி 125 மாடலில் இருந்து பெறப்பட்ட எஞ்சின் பயன்படுத்தினாலும் மாறுபட்ட வகையில் எஞ்சின் ட்யூன் செய்யப்பட்டிருக்கலாம். எனவே, ஜூம் 125ஆர் ஸ்கூட்டரில் உள்ள 124.6cc என்ஜின் அதிகபட்சமாக 9.5hp பவர் மற்றும் 10.14Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் உடன் 14-இன்ச் அலாய் வீல் பெற்றிருக்கும். சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள மாடல் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட…
எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த பிறகு முதல் மாடலாக வின்ட்சர் இவி ரூ.9.99 லட்சம் மற்றும் ஒரு கிமீ பேட்டரி பயன்பாடுக்கு ரூ.3.5 கட்டனமாக வசூலிக்கப்படுகிறது. அக்டோபர் 3 முதல் முன்பதிவு துவங்கப்பட்டு அக்டோபர் 13ல் டெலிவரி வழங்கப்பட உள்ளது. மிகவும் ஆடம்பரமான வசதிகள் பல்வேறு டிஜிட்டல் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் என அதிநவீன அம்சங்களை புகுத்தியதாக விற்பனைக்கு வந்துள்ள இந்த ஐந்து இருக்கை கொண்ட மாடலில் மிகவும் தாராளமான இடவசதியை கொண்டு 2700 மிமீ வீல்பேஸ் கொடுக்கப்பட்டு பின் வரிசை இருக்கையில் அமருபவர்களுக்கும் மிகவும் தாராளமான இடவசதி கொண்டிருப்பதுடன் 135 டிகிரி கோணத்தில் சாய்க்கும் அளவில் ஏரோபிளேனில் உள்ளதை போன்றதாக வழங்கப்பட்டு பல்வேறு இணையம் சார்ந்த அம்சங்களை பயணிகள் பெறுவதற்கு ஏற்றதாக உள்ளது. வின்ட்சர் இவி டிசைன், இன்டிரியர் CUV எனப்படுகின்ற வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட எம்ஜி Windsor EV மாடல் முன்புறத்தில்…