மிக வேகமாக வளர்ந்து வரும் 125சிசி மோட்டார் சைக்கிள் சந்தையில் புதிதாக பல்சர் N125 மாடலை பஜாஜ் ஆட்டோ வரும் அக்டோபர் 16 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளது. 125சிசி சந்தையில் ஏற்கனவே பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் 125 மற்றும் NS125 என இரண்டு பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது. கூடுதலாக வரவுள்ள மாடல் அனேகமாக ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற N150,N160, மற்றும் N250 போன்ற மாடல்களில் இருந்து பெறப்பட்ட வடிவமைப்பினை கொண்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. நாட்டின் 125சிசி சந்தையில் ஹோண்டா நிறுவனம் முன்னணியில் உள்ள நிலையில் ஹீரோ மற்றும் பஜாஜ் இடையை கடுமையான போட்டிகள் 125சிசி சந்தையில் நிலவி வருகின்றது. குறிப்பாக, தற்பொழுது வந்த எக்ஸ்ட்ரீம் 125R ஆனது 125சிசி சந்தையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாடலுக்கு போட்டியாகவும் அதே நேரத்தில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கிற்கு சவால் விடுக்கும் வகையிலும் இந்த புதிய மாடல்…
Author: MR.Durai
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள யமஹா நிறுவனத்தின் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலான R9 மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு தற்பொழுது விற்பனையில் உள்ள MT-09 நேக்டூ பைக்கில் இருந்து பெறப்பட்ட எஞ்சினை பெற்றிருக்கின்றது. Yamaha YZF-R9 புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபிரேம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய R9 பைக்கின் சேஸ் எடை 9.7 கிலோ மட்டுமே அமைந்துள்ள மிக வலுவான அலுமினியம் டெல்டா பாக்ஸ் ஃபிரேம் ஆகும். இந்த மாடலில் நீலம், கருப்பு மற்றும் சிவப்பு நிறத்துடன் வெள்ளை என மூன்று நிறங்கள் உள்ளது. யமஹாவின் பாரம்பரியமான ஃபேரிங் ஸ்டைல் R சீரிஸ்களில் இருந்து பெறப்பட்டுள்ள மிக நேர்த்தியான பேனல்கள் ஏரோ டைனமிக் அம்சத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் எல்இடி புராஜெக்டர் விளக்கு மற்றும் ரன்னிங் விளக்குடன் இணைக்கப்பட்டு மிக நேர்த்தியான ஃபேரிங் பேனல் எட்ஜ் கொடுக்கப்பட்டிருக்கின்றன. R9 பைக்கில் உள்ள 890cc, லிக்விட் கூல்டு 3-சிலிண்டர் என்ஜின் அதிகபட்ச குதிரைத்திறன் 117…
சமீபத்தில் மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரில் சிறப்பு டாமினியன் எடிசனை விற்பனைக்கு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனமும் சிறப்பு எடிசனை அர்பன் குரூஸர் ஹைரைடர் மாடலில் வெளியிட்டு இருக்கின்றது. இரு மாடல்களும் ஒரே பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்வதுடன் ஒரே மாதிரியான எஞ்சின் உட்பட அனைத்தும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றது. Hyryder Festival Limited Edition அர்பன் குரூஸர் ஹைரைடர் ஃபெஸ்டிவல் எடிசனில் மட் ஃபிலாப் டோர் வைசர், குரோம் கார்னிஷ் ஆனது முன்புற பம்பர் மற்றும் பின்புற பம்பர், ஹெட்லைட் ஃபெண்டர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இன்டீரியரில் 3d ஃப்ளோர் மேட் டேஸ் கேம் மற்றும் லெக் ஏரியாவிற்கு ஒளிரும் விளக்குகள் என மொத்தமாக சுமார் 13 ஆக்செஸரீஸ் கொடுக்கப்பட்டிருக்கின்ற இதனுடைய மதிப்பு ரூபாய் 50,817 ஆகும். மிட்-ஸ்பெக் G மற்றும் டாப்-ஸ்பெக் V என இரு டிரிம்களில் கிடைக்கின்ற சிறப்பு எடிசன் பண்டிகை காலத்தில் மட்டும்…
புதுப்பிக்கப்பட்ட டிசைன் மற்றும் கூடுதலான சில பகுதிகளை பெற்று வந்துள்ள புதிய 2025 யமஹா R3 பைக் ஆனது விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட உள்ளதால் இந்திய சந்தையிலும் இந்த மாடல் விற்பனைக்கு வெளியாக உள்ளது. பெரும்பாலும் அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்கள் மற்றும் என்ஜின் சார்ந்தவற்றில் யமஹா ஆர்3 சிறிய அளவிலான மாறுதல்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. யமஹாவின் புதிய R9 பைக்கின் தோற்றத்தை தழுவிய சிறிய மாற்றங்கள் பெற்றும் சிறிய அளவிலான பின்புற வால் பகுதியானது புதுப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் அதே நேரத்தில் கூடுதலாக ஸ்லீப்பர் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டிருப்பதுடன் முன்புற பேனல்கள், எல்இடி ரன்னிங் விளக்குடன், புராஜெக்டர் எல்இடி ஹெட்லைட் மற்றும் ஏர் இன்டெக் பகுதிகள் சிறிய அளவிலான மாறுதல்களை சந்தித்துள்ளன. R3 பைக்கில் உள்ள 321cc பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய 10.750 rpm-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 40.4 bhp, மற்றும் 9.000…
டாடா குழுமத்தின் எமரிட்டஸ் தலைவர் திரு. ரத்தன் டாடா (28-12-1937 – 09-10-2024) அவர்கள் தனது 86 வயதில் உடல் நலக்குறைவால் மும்பையில் மருத்துவமனையில் மறைந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். உப்பு, டீத்தூள், மென்பொருள், ஆடம்பர கார்கள் என மிகப் பெரிய டாடா தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவராகவும், டாடா குழுமத்தின் 1991 முதல் 2012 வரை தலைவராக இருந்தார். குறிப்பாக ஆட்டோமொபைல் சந்தையில் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஜாகுவார் லேலண்ட் ரோவர் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இன்றைக்கு டாடாவின் இன்டிகா வர்த்தகரீதியான பயன்பாடுகளில் மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. ஆட்டோமொபைல் உலகின் தொழில்நுட்ப ஆச்சரியமாக அறியப்படுகின்ற டாடா நானோ கார் உருவாக்கியதில் முக்கிய பங்கு, விற்பனை செய்ய முடிவெடுத்த பயணிகள் வாகனப் பிரிவை இன்றைக்கு இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான பிராண்ட் மாடாலாக டாடா மோட்டார்ஸ் உருவாகுவதற்கு மிக முக்கியமானவர். இது குறித்து டாடா சன்ஸ்…
கேடிஎம் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான 250 டியூக் பைக்கில் TFT கிளஸ்ட்டருடன் புதுப்பிக்கப்பட்ட 390 டியூக் பைக்கில் உள்ளதை போன்றே பூம்ரெங் வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் எல்இடி ஹெட்லைட்டுடன் ரூ.2.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக சில மாதங்களுக்கு முன் புதிய நிறங்கள் மற்றும் டிசைன் மாற்றங்கள் பெற்றிருந்த டியூக் 250 தற்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு 5 அங்குல டிஎஃஎப்டி கிளஸ்டருடன் ப்ளூடூத் மூலம் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், டிஜிட்டல் கிளஸ்ட்டரில் புதிய கிராஃபிக்ஸ் கொண்டிருக்கின்றது. மற்றபடி, எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. 200 டியூக் மாடலும் இதே போன்ற மேம்பாட்டை பெற்றுள்ளது. 249சிசி என்ஜின் 9250rpm-ல் அதிகபட்சமாக 31PS பவர் மற்றும் 7250rpm-ல் 25Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு சிலிப்பர் உடன் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது. முன்புறத்தில் அப்சைடு டவுன்…