இந்தியாவின் முதன்மையான மஹிந்திரா டிராக்டர் தயாரிப்பாளருடன் குஜராத் அரசு இணைந்து கூட்டாக தொடங்கப்பட்ட மஹிந்திரா குஜராத் டிராக்டர் நிறுவனத்தை குரோமேக்ஸ் அக்ரி எக்கியூப்மென்ட் (Gromax Agri Equipment) என்ற பெயிரில் மாற்றியமைத்துள்ளது. மஹிந்திரா டிராக்ஸ்டார் டிராக்டர் குரோமேக்ஸ் கூட்டு நிறுவனத்தில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 60 சதவீத மூலதனத்தையும், குஜராத் அரசு 40 சதவீத மூலதனத்தையும் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் முதல் டிராக்டர் மாடலை 30 முதல் 50 ஹெச்பி பிரிவில் டிராக்ஸ்டார் என்ற பிராண்டு பெயரில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. மஹிந்திரா டிராக்ஸ்டார் பிராண்டில் 31, 36, 40, 45, 50hp என மொத்தம் 5 விதமான குதிரை திறன் பெற்ற டிராக்டர்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. நவீன நுட்பங்களை பெற்றுள்ள இவ்வகை டிராக்டர்கள் சிறப்பான செயல்திறன் மிக்கதாகவும், பல்வேறு விதமான விவசாய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலும் அமைந்திருக்கும் என குரோமேக்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற 80 சதவிகித டிராக்டர்கள் 30…
Author: MR.Durai
உலகில் மிகவும் கடுமையான சவால்கள் நிறைந்த மோட்டார் சைக்கிள் சவாரி பந்தயங்களில் ஒன்றான டக்கார் ராலியில் இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் பிரிவின் 2018 ஆம் ஆண்டின் போட்டிக்கான பைக் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 2018 டக்கார் ராலி அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் நடைபெற உள்ள மிகவும் சவாலான டாக்கர் ரேலியில் இந்தியாவின் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இடம்பெற உள்ள 450சிசி எஞ்சின் பெற்ற பைக்கின் முதல் டீசர் படத்தின் மேற்பகுதி வெளியாகியுள்ளது. முந்தைய மாடலை விட தோற்ற மாற்ற அமைப்பில் சில மாறுதல்கள் பெற்றதாக வரவுள்ள இந்த பைக்கில் 54 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 450சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதுடன், முன்பக்க எல்இடி ஹெட்லேம்ப் தவிர பேனல்கள் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்களை பெற்றதாக இருக்கலாம். ஹீரோ மற்றும் ஸ்பீடுபிரெயின் கூட்டணியில் வடிவமைக்கப்பட்டுள்ள பைக்குகளை மிக கடுமையான சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயணிக்கும் வகையில் 9000 கிமீ தொலைவினை டாக்கர் ரேலி…
சீனாவில் ஆகஸ்ட் 25 முதல் நடைபெற்று வரும் செங்டு மோட்டார் ஷோவில் 2017 ஹூண்டாய் க்ரெட்டா (ix25) எஸ்யூவி கூடுதல் வசதிகள் மற்றும் தோற்ற மாறுபாடுகளை பெற்றதாக வெளியிடப்பட்டுள்ளது. 2017 ஹூண்டாய் க்ரெட்டா (ix25) எஸ்யூவி இந்தியாவில் பிரசத்தி பெற்ற விளங்கும் க்ரெட்டா எஸ்யூவி மாடல் சீனாவில் ix25 எஸ்யூவி என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல் தோற்ற அமைப்பின் முகப்பில் கிரில் அகலம் அதிகரிக்கப்பட்டு க்ரோம் பூச்சூடன் பனி விளக்கு மற்றும் பகல்நேர எல்இடி ரன்னிங் விளக்குகளுக்கு என தனியான அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ix25 எஸ்யூவி மாடலின் பக்கவாட்டு அமைப்பில் பெரிதாக மாற்றங்கள் இல்லாமல், புதிய வடிவம் பெற்ற அலாய் வீல் அம்சத்துடன், பின்புறத்தில் டெயில் விளக்கு மற்றும் எக்ஸ்ஹாஸ்ட் போன்றவற்றில் க்ரோம் இன்ஷர்ட்டுகளை பெற்றுள்ளது. சீன சந்தையில் ix25 எஸ்யூவி கார் 1.6 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்க உள்ளது. இந்தியாவில் க்ரெட்டா எஸ்யூவி மாடலின்…
ஐரோப்பா சந்தையில் க்ராஸ்ஓவர் எஸ்யூவி ரக பிரிவில் முன்னணி மாடலாக விளங்கும் ரெனோ கேப்டூர் (Captur) எஸ்யூவி இந்தியாவில் இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வருவதை பிரெஞ்சு நாட்டு தயாரிப்பாளர் அதிகார்ப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ரெனோ கேப்டூர் எஸ்யூவி வருகை ஐரோப்பியா மற்றும் ரஷ்யா சந்தையில் அமோகமான ஆதரவினை பெற்று விளங்கும் ரெனோ நிறுவனத்தின் கேப்டூர் M0 பிளாட்ஃபாரத்தில் டஸ்ட்டர் காருக்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ள இந்த எஸ்யூவி விற்பனையில் உள்ள க்ரெட்டா , காம்பஸ் , எஸ்யூவி 500 உள்ளிட்ட மாடல்களுக்கு மிகுந்த சவாலாக அமைந்துள்ளது. டஸ்ட்டர் மாடலில் உள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 106 hp பவர் மற்றும் 142 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 5 வேக மேனுவல் தவிர சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 110 hp பவர் மற்றும் 245 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 6 வேக மேனுவல்…
ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மூன்றாவது தொழிற்சாலை ரூ. 800 கோடி முதலீட்டில் சென்னை அருகே, வல்லம் வடகல் எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ராயல் என்பீல்டு தொழிற்சாலை 800 கோடி ரூபாய் முதலீட்டில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது ஆலையில் ஆண்டிற்கு 3,00,000 லட்சம் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற வாகனங்கள் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டில் மூன்றாவது தொழிற்சாலைக்கான இடத்தை தேர்வு செய்த என்பீல்டு நிறுவனம் 15 மாதங்களில் இந்த தொழிற்சாலையை கட்டி முடித்து பயன்பாட்டு கொண்டு வந்துள்ளதால் இந்நிறுவனத்தின் மொத்த உற்பத்தில் 17-18 ஆம் நிதி ஆண்டில் 8,25,000 வாகனங்களாக உயரக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2016-2017 ஆம் ஆண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் 6,67,135 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்துள்ளது.
முதன்முறையாக மாருதி சுசுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மாடலுக்கு அறிமுகம் செய்த தனிநபர் ஐ கிரியேட் கஸ்டமைஸ் அம்சங்கள் தற்போது பிரசத்தி பெற்ற மாருதி ஸ்விஃப்ட் காருக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாருதி ஸ்விஃப்ட் i Create அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள 2018 ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு வரவுள்ளதை தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஸ்விஃப்ட் காரின் இருப்பினை குறைக்கும் வகையில் கூடுதலான அம்சங்களை மாருதி சுசூகி வழங்க தொடங்கியுள்ளது. i Create கஸ்டமைஸ் வழியாக மாருதி 120 விதமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களை தோற்றம் மற்றும் இன்டிரியரில் வழங்குகின்றது. வாடிக்கையாளர் விரும்பும் வகையிலான கஸ்டைமைஸ் அம்சங்களை ஆன்லைன் மற்றும் டீலர்கள் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். காரின் வெளி தோற்ற அமைப்பில் பாடி கிராபிக்ஸ், மேற்கூறை நிறம், ஸ்பாய்லர், பம்பர் நிறங்கள் மற்றும் ஸ்டிக்கரிங் ,அலாய் வீர் உள்ளிட்ட மேலும் பல வசதிகளும், இன்டிரியரில் இருக்கை…