Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

புதிதாக யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய 250 சிசி ஃபேஸர் 25 பைக்கில் ஏபிஎஸ் ஆப்ஷனலாகவும் வழங்கப்படவில்லை என்பது பலருக்க ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏபிஎஸ் பிரேக் கட்டாயம் அடுத்த ஆண்டு முதல் 125 சிசி க்கு மேற்பட்ட ஏபிஎஸ் பிரேக் கட்டாயம் என்ற நடைமுறைக்கு வரவுள்ளதை தொடர்ந்தே ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்படும் என இந்தியா யமஹா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படுகின்ற உயர்ரக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பஜாஜ், டிவிஎஸ், சுசூகி போன்ற நிறுவனங்கள் 160 சிசி மற்றும் 200 சிசி பைக்குகளுக்கு ஏபிஎஸ் பிரேக்கினை ஆப்ஷனலாக வழங்கி வருகின்றது. ஆனால் சமீபத்தில் வெளியான நேக்டூ FZ25 பைக் அடிப்படையிலான ஃபேரிங் செய்யப்பட்ட ஃபேஸர் 250 பைக்கில் ஏபிஎஸ் வழங்கப்படவில்லை என்பது இங்கே குறிப்படதக்கதாகும். வரும் ஏப்ரல் 2018 முதல் 125 சிசிக்கு மேற்பட்ட அனைத்து…

Read More

முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட டிசைன் மற்றும் இன்டிரியர் உள்ளிட்ட அம்சங்களை பெற்ற 2017 ஹூண்டாய் வெர்னா கார் பற்றி இங்கே அறிந்து கொள்ளுங்கள். 2017 ஹூண்டாய் வெர்னா விற்பனையில் உள்ள மாடலை விட மாறுபட்ட தோற்ற அமைப்பினை பெற்று கூடுதலாக செயல்திறன் மிக்க காராக மாறியுள்ள வெர்னாவின் இன்டிரியர் அமைப்பிலும் கூடுதலான வசதிகள் மற்றும் தாரளமான இடவசதியை பெற்றதாக வந்துள்ளது. சர்வதேச அளவில் 66 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற வெர்னா இதுவரை 8.8 மில்லியன்க கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய சந்தையில் மட்டும் 3.17 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டிசைன் புதிய டிசைனிங் பெற்ற வெர்னா காரில் மிக நேர்த்தியான முகப்பு தோற்றத்தை பெற்று எலன்டாரா காரின் உந்துதலை பெற்றதாக வந்துள்ளது. K2 பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள வெர்னா மாடலில் எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்தாக எல்இடி முகப்பு புராஜெக்டர் விளக்குகளுடன் கூடிய இந்த காரில் பின்புறத்தில் எல்இடி…

Read More

ரூ. 10.75 லட்சம் ஆரம்ப விலையில் 2017 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான எஞ்சின் தேர்வுகளிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்க தொடங்கியுள்ளது. 2017 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கூடுதல் வசதிகள் மற்றும் நிறத்தை பெற்ற சிறப்பு  வேரியன்டில் தோற்ற அமைப்பில் கருப்பு நிறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கருப்பினை பெற்ற 16 அங்குல அலாய் வீல், மேற்கூறையில் கருப்பு பூச்சூ, முன்பக்க கிரில், டெயில்கேட் மற்றும் டிஃப்யூசஸர் போன்றவற்றில் கருப்பு நிறத்தை பெற்றுள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்க உள்ள மான்ட் கார்லோ மாடலின் இன்டிரியரில் கருப்பு நிறத்தை பெற்ற டேஸ்போர்டு மற்றும் இருக்கைகளுடன் 6.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் பாதுகாப்பு அம்சங்களான ஏபிஎஸ், இபிடி போன்றவ்வற்றுடன் முன்பக்கத்தில் இரட்டை காற்றுப்பை…

Read More

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நடைமுறையில் உள்ளதை தொடர்ந்து நாளைய அதாவது ஆகஸ்ட் 23, 2017 தேதிக்கான பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. பெட்ரோல் விலை 23.8.2017 23-08-2017 தேதிக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை விபரம் – சென்னை பெட்ரோல் விலை – ரூ. 71.22 சென்னை டீசல் விலை – ரூ. 60.05 புதுச்சேரி பெட்ரோல் விலை – ரூ. 67.72 புதுச்சேரி டீசல் விலை – ரூ. 59.01

Read More

வருகின்ற செப்டம்பர் 1ந் தேதி முதல் அசல் ஒட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டயாமாகும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். டிரைவிங் லைசென்ஸ் இது குறித்து போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் விதிமீறல் தொடர்பாக 9,500 லைசென்சுகள் தகுதி நீக்க செய்யப்பட்டுள்ளன. மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், சாலை விதிகளை மீறியவர்கள், இதில் அதிக பாரம் ஏற்றி சென்றவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் அதிகளவில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 1 முதல் அசல் டிரைவிங் லைசென்ஸ் ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் சாலை விபத்துகள் குறையும். வாகன விபத்துகளை குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் தமிழகத்தில் தான் சிறந்த சாலைகள் உள்ளன. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் சிறந்ததாக உள்ளன. சிறந்த சாலைகள் இருப்பதால் தான் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. போக்குவரத்து அமைச்சகத்தின் நடவடிக்கை மூலம்…

Read More

சர்வதேச அளவில் 2015 நியூயார்க் மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்ட புத்தம் புதிய மிட்ஷூபிசி அவுட்லேண்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வருவதனை மிட்ஷூபிசி இணையதளத்தில் டீசர் செய்யப்பட்டுள்ளது. மிட்ஷூபிசி அவுட்லேண்டர் எஸ்யூவி நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய சந்தையிலிருந்து நீக்கப்பட்ட அவுட்லேண்டர் எஸ்யூவி மாடல் மீண்டும் இந்திய சந்தைக்கு வருவதனை தனது அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் டீசர் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக எஸ்யூவி சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகின்ற சூழ்நிலையில் சமீபத்தில் வெளிவந்த ஜீப் காம்பஸ், ஹோண்டா சிஆர்-வி மற்றும் ஹூண்டாய் டூஸான் போன்றவற்றுக்கு எதிராக நிலை நிறுத்தப்படவும் எண்டேவர், ஃபார்ச்சூனர் மற்றும் டீகுவான் போன்றவற்றுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தோற்றம் முகப்பு தோற்றம் முற்றிலும் அழகான தோற்றத்தில் எக்ஸ் வடிவ கிரிலுடன் ஏரோடைனமிக்ஸ் அடிப்படையில் இரண்டு குரோம் பூச்சூ ஸ்லாட்களுக்கு மத்தியில் மிட்சுபிஷி இலச்சினை பதிக்கப்பட்டுள்ளது. முகப்பு பம்பர் மற்றும் பனி விளக்குகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. எல்இடி…

Read More