இந்தியாவின் தொடக்கநிலை கார் சந்தையில் மிக சவாலான மாடலாக விளங்குகின்ற ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் மாடலின் இரண்டு ஆண்டு நிறைவையொட்டி சிறப்பு ரெனோ க்விட் 02 அனிவெர்சரி எடிசன் 0.8 லி மற்றும் 1.0 லி என இரு எஞ்சினிலும் கிடைக்கின்றது. ரெனோ க்விட் 02 அனிவெர்சரி எடிசன் இந்தியாவின் முதன்மையான கார் மாடலாக விளங்கும் மாருதி சுசுகி ஆல்டோ காருக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்திய ரெனால்ட் க்விட் அமோகமான ஆதரவினை பெற்றதை தொடர்ந்து 0.8 லி, 1.0 லி மற்றும் ஏஎம்டி உள்ளிட்ட தேர்வுகளில் கிடைத்து வருகின்றது. சாதாரண RXL மற்றும் RXT வேரியண்டினை பின்னணியாக கொண்டு கூடுதலாக ஸ்போர்ட்டிங் பாடி கிராபிக்ஸ் அம்சத்துடன் , முன்பக்கத்தில் அமைந்துள்ள பானெட்டில் 02 பேட்ஜ் பதிக்கப்பட்டு வெள்ளை மற்றும் சிவப்புநிறங்களில் கிடைக்க உள்ளது. இரு வண்ண ஓஆர்விஎம் பெற்றதாக வந்துள்ள இந்த சிறப்பு பதிப்பில் 02 பேட்ஜ் பெற்ற அப்ஹோல்ஸ்ட்ரி, இரு வண்ண கியர்…
Author: MR.Durai
சமீபத்தில் அமேஸ் செடான் மாடலில் ப்ரீவிலேஜ் எடிசன் மாடலை போலவே ஹோண்டா ஜாஸ் ப்ரீவிலேஜ் எடிசன் ரூ. 7.36 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் சிவிடி ஆப்ஷனல்களில் கிடைக்கின்றது. ஹோண்டா ஜாஸ் ப்ரீவிலேஜ் ஹோண்டா ஜாஸ் காரின் ஜாஸ் V வேரியன்ட் மாடலின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள பிரீவிலேஜ் சிறப்பு பதிப்பு சாதாரண மாடலை விட ரூ. 5000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது. வெளி தோற்ற அமைப்பில் ப்ரீவிலேஜ் எடிசன் பேட்ஜ் போன்றவற்றுடன் இன்டிரியர் அமைப்பில் டிஜிபேட் 17.7-cm இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் செயற்கைகோள் தொடர்புடன் கூடிய 3D நேவிகேஷன், 1.5GB சேமிப்பு வசதியுடன் புளூடூத் மற்றும் யூஎஸ்பி ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது. எஞ்சினில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஜாஸ் காரில் 90பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 100என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி தானியங்கி கியர்பாக்சிலும் கிடைக்கும். ஜாஸ் டீசல் காரில்…
டிரையம்ப் ஸ்டீரிட் ட்வின் பைக் மாடலை அடிப்படையாக கொண்டு வடிமைக்கப்பட்டுள்ள கிளாசிக் தோற்ற உந்துதலை பெற்று வந்துள்ள ரூ. 8.1 லட்சத்தில் டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் கிடைக்க தொடங்கியுள்ளது. டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் டிரையம்ப் நிறுவனத்தின் போனிவில் பிரிவின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ள ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் மிக நேர்த்தியான பைக்கில் 900சிசி பேரலல் ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 54 bhp பவரை வெளிப்படுத்துவதுடன் 80 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ரைட் பை வயர், ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது. டெலஸ்கோபிக் ஃபிரெண்ட் ஃபோர்க்ஸ், டூயல் ரியர் ஷாக்ஸ், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், பேஷ் பிளேட், எல்.இ.டி டெயில் லேம்ப் போன்றவற்றுடன் மிக நேர்த்தியான இரட்டை புகைப்போக்கி அம்சத்தை கொண்டதாக வந்துள்ளது. இந்த பைக்கில் 150 க்கு மேற்பட்ட துனைக்கருவிகள் வழங்கப்பட்டுள்ள ஸ்டிரீட்…
கடந்த ஜூலை 2017 மாதந்திர விற்பனை முடிவில் முன்னணி வகித்து டாப் 10 பைக்குகள் மற்றும் ஸ்ட்டர்களை பற்றி இங்கே காணலாம். ராயல் என்ஃபீல்டு தொடர்ந்து 350 சிசி சந்தையில் சிறப்பான பங்களிப்பினை பெற்று விளங்குகின்றது. டாப் 10 பைக்குகள் – ஜூலை 2017 இந்திய சந்தையில் தொடர்ந்து ஸ்கூட்டர் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற நிலையில் ஆக்டிவா 292,669 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து நாட்டின் முதன்மையான இருசக்கர வாகனமாக விளங்குகின்றது. இரண்டாவது இடத்தில் முந்தைய முன்னணி இருசக்கர வாகனமாக விளங்கிய ஸ்பிளென்டர் விளங்குகின்றது. மிகவும் சவாலான ஸ்கூட்டர் சந்தையில் சிறப்பான பங்களிப்பினை ஜூபிடர் தொடர்ந்து வழங்கி வழங்குகின்றது. 125சிசி சந்தையில் ஷைன் மற்றும் கிளாமர் பைக்குகளுக்கு இடையே தொடரந்து கடுமையான போட்டி நிலவி வருகின்றது. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற 350சிசி சந்தையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 42,967 அலகுகள் விற்பனை செய்து 10வது இடத்தை பிடித்திருக்கின்றது.…
வருகின்ற 25ந் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6.5 அடி உயரத்தில் விநாயகர் சிலையை ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை கொண்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஆதரவுடன் மாதவி பிட்டி எனும் கலைஞர் மற்றும் நிஷாந்த சுதாகரன் மெட்டல் கலைஞர் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள ஆட்டோமொபைல் உதரிபாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை Workshop Q மாதவி பிட்டி எனும் கலைஞர் மற்றும் நிஷாந்த சுதாகரன் மெட்டல் கலைஞர் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையான உதிரிபாகங்களை பயன்படுத்துவற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு கனேசா சிலையில் வாகனங்களில் பயன்படுத்துகின்ற உதிரிபாகங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு எக்ஸ்-ஷோரும் விலை ரூ. 39,729 என வெளியிடப்பட்டுள்ள பஜாஜ் CT100 ES பைக் மாடல் குறைந்த விலை தொடக்கநிலை கம்யூட்டர் சந்தையில் பஜாஜ் நிறுவனத்தின் 4வது வேரியன்ட் ஆகும். பஜாஜ் CT100 ES இந்தியாவின் மிக விலை குறைந்த இருசக்கர மோட்டார் சைக்கிள்களில் ஒன்றான பஜாஜ் சிடி 100 பைக்கின் ஆரம்ப விலை ரூ. 31,716 (சிடி 100B) முதல் தொடங்குகின்றது. தற்போது வெளியாகியுள்ள புதிய வேரியன்டில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் அலாய் வீல் பெற்று 102 சிசி எஞ்சினை பெற்றுள்ளது. தொடக்கநிலை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சிடி 100 எலக்ட்ரிக் ஸ்டார்ட் மாடலில் கருப்பு மற்றும் சில்வர் நிறத்துடன் கூடிய சிவப்பு ஸ்டிக்கரிங், கருப்பு மற்றும் சில்வர் நிறத்துடன் கூடிய நீல ஸ்டிக்கரிங் மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களுடன் கிடைக்க உள்ள இந்த பைக்கில் மிக அகலமான இருக்கை வழங்கப்பட்டிருப்பதுடன் நீண்ட தூர பயணத்திற்கும்…