இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள 2017 ஹூண்டாய் வெர்னா கார் முற்றிலும் மேம்பட்ட புத்தம் புதிய டிசைன் மற்றும் கூடுதல் வசதிகளுடன் ரூ. 7.99 லட்சம் முதல் ரூ. 12.61 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. 2017 ஹூண்டாய் வெர்னா கார் புதிய எலன்ட்ரா மற்றும் எக்ஸென்ட் போன்ற கார்களில் இடம்பெற்றுள்ள மிக அகலமான அறுங்கோண வடிவிலான கிரில் முகப்பை பெற்று விளங்குகின்ற புதிய வெர்னா கார் K2′ பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு உறுதியான கட்டுமானம் மற்றும் டிசைன் பெற்றதாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் வசதியுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு கியர்பாக்சிலும் கிடைக்கப் பெறுகின்றது. ஒற்றை பாகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள அறுங்கோண வடிவிலான கிரிலுடன் புராஜெக்டர் ஹெட்லேம்ப், புதுப்பிக்கப்பட்ட க்ரோம் பூச்சினை பெற்ற ஹவுசிங் வசதியுடன் கூடியதாக கிடைக்கின்றது. 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் பெற்று பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகளை கொண்டுள்ளது. இன்டிரியர் அமைப்பில் பீஜ்…
Author: MR.Durai
ஹோண்டா நவி மினி பைக் உந்துதலில் வடிவமைக்கப்பட்டுள்ள ஹோண்டா கிளிக் (CliQ) மாடலுக்கு இடையில் ஒப்பீட்டு பார்த்து இரு மாடல்களில் உள்ள வித்தியாசங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை பற்றி அறிந்து கொள்ளலாம். ஹோண்டா கிளிக் Vs ஹோண்டா நவி – ஒப்பீடு இரு மாடல்களுமே இந்தியாவின் ஹோண்டா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் இந்திய மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலே வடிவமைக்கப்பட்டுள்ளது. டிசைன் மினி பைக் வகையில் வித்தியாசமான கட்டுமானத்துடன் வந்த முதல் மாடலான நவி நகர மக்கள மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் அதே மாடலின் வடிவ உந்துதலில் முழுமையான ஸ்கூட்டர் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ள ஹோண்டா க்ளிக் கூடுதலான பல வசதிகளுடன் வந்துள்ள குறிப்பிடதக்க அம்சமாகும். நவி மாடலை விட க்ளிக் கூடுதலான பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும், ஊரக பகுதிகளுக்கு ஏற்ற அம்சங்களான பிலாக் பேட்டர்ன் டயர்கள், அகலமான ஃபுளோர் வசதி போன்றவற்றுடன் மிக முக்கியமாக சுமை தாங்கும் வகையிலான…
ராஜஸ்தான்,மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள குறைந்த விலை கொண்ட ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா கிளிக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா கிளிக் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மற்றும் தொடக்க நிலை கம்யூட்டர் பைக்குகளுக்கு சவாலினை ஏற்படுத்ததும் வகையில் ஊரக பகுதி பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள க்ளிக் ஸ்கூட்டர் தமிழகத்திலும் கிடைக்க தொடங்கியுள்ளது. டிசைன் ஊரக பகுதிகளில் பயணிக்கும் வகையில் மிக உறுதியான கட்டுமானத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள க்ளிக் மாடலில் முக்கிய அம்சமாக இந்தியாவின் முதல் பிளாக் பேட்டர்ன் பெற்ற டயரை பொருத்தப்பட்டதாக அறிமுகம் ஆகியுள்ளது. க்ளிக் ஸ்கூட்டர் கடுமையான மழை நேரங்களிலும், மோசமான சாலைகளில் பயணிக்கும் வகையிலான சிறப்பம்சத்தை பெற்றதாக பிளாக் பேட்டர்ன் டயர்கள் விளங்கும். 102கிலோ எடை பெற்றுள்ள இந்த மாடல் இருபாலருக்கும் பொதுவான தோற்ற அமைப்பை பெற்றிருப்பதுடன் மிக அகலமான இடைவெளி கொண்ட கால் வைக்கும் பகுதியில் மிக சிறப்பான இடத்தை பெற்றிருப்பதுடன்,இருக்கையின் அடியில் 14…
பெர்ஃபாமென்ஸ் ரக மாடல்களில் பிரசத்தி பெற்று விளங்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டின் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT-R மற்றும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT ரோட்ஸ்டெர் என இரு சூப்பர் கார் மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளது. சமீபத்தில் இந்தியாவின் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் டிராக்கில் மிக வேகமாக லேப் நிறைவு செய்து புதிய சாதனையை பதிவு செய்த 2:09.853 நேரத்தில் GT-R பதிவு செய்துள்ளது. ரூ.2.19 கோடியில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT ரோட்ஸ்டெர் மாடலும் மற்றும் ரூ.2.23 கோடியில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT-R விற்பனைக்கு வந்துள்ளது. மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT-R மெர்சிடிஸ் ஏஎம்ஜி GT-R ஸ்போர்ட்ஸ் கார் Beast of the Green Hell என்கின்ற டேக்லைனுடன் வெளியிடப்பட்டுள்ள 4.0 லிட்டர் V8 பைடர்போ என்ஜின் 577 hp ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் இழுவைதிறன் 700 Nm ஆகும். 7 வேக டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. AMG GT-R ஸ்டீரிட் லீகல் ஸ்போர்ட்ஸ் கார் உச்ச வேகம் மணிக்கு 318 கிமீ ஆகும். 0 முதல்…
சமீபத்தில் விற்பனைக்கு வந்த யமஹா FZ25 பைக் பின்னணியாக வந்துள்ள ஃபேரிங் செய்யப்பட்டுள்ள யமஹா ஃபேஸர் 25 பைக் முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் விலை ரூ.1.29 லட்சம் ஆகும். யமஹா ஃபேஸர் 25 பைக் ஃபேஸர் 1000 சூப்பர் பைக் மாடலின் தோற்ற உந்துதலை அடிப்படையாக கொண்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள 250சிசி எஞ்சின் பெற்ற பேஸர் 250 பைக் டைமன்ட் ஃபிரேம் சேஸீ கொண்டு ஏரோடைனமிக் கவுல் மற்றும் விண்ட் புராடெக்டர் டிசைன் பெற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு விதமான நிற கலவையில் கிடைக்க உள்ள ஃபேஸர் 25 பைக்கில் சியான் (Soulful Cyan) எனப்படும் நிறத்தில் கிரே மற்றும் நீலம் , மற்றொரு நிறமான சிவப்பு நிறத்தில் (Rhythmic Red) சிவப்பு மற்றும் தங்க நிறம் கலந்துள்ளது. எல்இடி ஹெட்லேம்ப் வசதியுடன் வந்துள்ள இந்த பைக்கில் ஸ்ப்ளிட் செய்யப்பட்ட இருக்கைகள், குரோம் பூச்சினை பெற்ற எக்ஸ்ஹாஸ்ட் ,…
மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான டியூவி300 காரினை அடிப்படையாக கொண்ட 7 இருக்கை மாடல் மஹிந்திரா டி.யூ.வி 300 பிளஸ் என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது. கூடுதல் வீல்பேஸ் கொண்ட எஸ்யூவியின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகின்றது. இந்தியாவின் முன்னனி யுடிலிட்டி ரக தயாரிப்பாளராக விளங்கு வரும் மஹிந்திரா நிறுவனம் தங்களுடைய டியூவி300 எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்டதாக அமைந்திருக்கும் இந்த காரின் முன்பக்க தோற்றம் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் பக்கவாட்டில் கூடுதலாக நீளம் அதிகரிக்கப்பட்டு இடவசதி அதிகமாகவும் விற்பனையில் உள்ள மாடலை போன்ற ஜம்ப் இருக்கைகள் அல்லாமல் முன்னோக்கி பார்க்கும் இருக்கைகள் அமைய பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. டியூவி 300 பிளஸ் பெரும்பாலான மஹிந்திரா கார்களில் மூன்றாவது வரிசை ஜம்ப் இருக்கைகளாக அமைந்திருக்கும். இதனை கருத்தில் கொண்டே புதிதாக முன்பக்க பார்க்கும் இருக்கைகளாக மாற்றி தொடக்கநிலை எம்பிவி மாடல்களுக்கு இணையாகவும் க்ரெட்டா, பி.ஆர்-வி போன்ற மாடல்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதிய…