இந்தியாவின் மிக பிரமாண்டமான ஆட்டோ எக்ஸபோ 2018 பிப்ரவரி 9, 2018 முதல் பிப்ரவரி 14, 2018 வரை டெல்லி அருகில் கிரேட்டர் நொய்டா-வில் உள்ள இந்திய எக்ஸ்போ மார்ட் அரங்கில் மாருதி சுஸூகி புதிய கான்செப்ட் கார்கள், எஸ்யூவி, புதுப்பிக்கப்பட்ட கார்கள், எஸ்யூவி போன்றவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA – Automotive Component Manufacturers Association of India), இந்திய தொழில் கூட்டமைப்பு (CII – Confederation of Indian Industry) மற்றும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (SIAM – Society of Indian Automobile Manufacturers ) மற்றும் சர்வதேச மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் அமைப்பு (OICA- Organisation Internationale des Constructeurs d’Automobiles) ஆகியவற்றின் ஒருங்கினைப்பில் ஆட்டோ எக்ஸபோ 2018 கண்காட்சி நடைபெற உள்ளது. 2018 ஆட்டோ எக்ஸ்போ : மாருதி சுஸூகி இந்தியாவின் முதன்மையான ஆட்டோமொபைல் தயாரிப்பாளரான மாருதி…
Author: MR.Durai
200 சிசி மற்றும் 250 சிசி பைக்குகளுக்கு சவாலான விலையில் யமஹாவின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் தரத்தை பெற்ற யமஹா FZ 25 பைக் பின்னணியாக உருவாக்கப்பட்டுள்ள யமஹா ஃபேஸர் 250 ஆகஸ்ட் 21ந் தேதி முதல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. யமஹா ஃபேஸர் 250 வருகை விபரம் ரூ.1.19 லட்சத்தில் விற்பனைக்கு வெளியட்டப்பட்டுள்ள மாடலில் உள்ள யமஹாவின் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இதே எஞ்சின் அடிப்படையாகவே உருவாக்கப்பட்டுள்ள புதிய ஃபேஸர் 250 பைக் ஃபேரிங் செய்யப்பட்டு ஒரு லிட்டருக்கு 43 கிமீ மைலேஜ் வெளிப்படுத்தும் மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படும் பேஸர் 250 பைக்கில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க்…
பஸ் பயணத்தில் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் ஏற்படும் இழப்பீடுகளை சமாளிக்க உதவும் வகையில் வழங்கப்படுகின்ற டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன ? இதுபற்றி இங்கே அறிந்து கொள்ளலாம். டிராவல் இன்சூரன்ஸ் பிரசத்தி பெற்ற ரெட் பஸ் நிறுவனம் வழங்குகின்ற ரூ.15 மதிப்பிலான பயண காப்பீடு தொடர்பான முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். பயணத்தின் போது ஏற்படுகின்ற எதிர்பாரத விபத்து, உடமைகள் இழப்பு அல்லது விபத்தினால் காயங்கள் ஏற்படும்போது நமக்கு உதவிகரமானதாக டிராவல் இன்சுரன்ஸ் உதவி புரிகின்றது. வெறும் 15 ரூபாய் டிராவல் இன்ஷுரன்ஸ் வாயிலாக காயமடைந்தவர்களுக்கு 1,00,000 ரூபாய்க்கான மருத்துவமனை செலவுகள், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால், தினசரி 500 ரூபாய் வீதம் அதிகபட்சம் 7 நாட்களுக்கு உதவித்தொகை, உடைமைகளை இழந்தால் 3,000 ரூபாய் கிடைக்கும். இது தவிர தனிப்பட்ட விபத்துக்கு 600,000 ரூபாய் வழங்குகின்றது. பஸ் பயணம் ரத்து அல்லது இடையூறு என ஏதாவது நேர்ந்தால் 1,500 ரூபாய் உள்பட பலதரப்பட்ட பிரச்னைகளுக்கும்,…
குறிப்பாக வார இறுதிநாட்கள் மற்றும் திங்கட்கிழமை போன்ற நாட்களிலும் கூடுதல் விடுமுறை தேதிகளில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட தென்னக நகரங்களில் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வரும் நிலையில் எவ்வாறு சிரமத்தை தவிர்க்கலாம் என அறிந்து கொள்ளலாம். விடுமுறை கால பயணம் பொதுவாக தனிநபர் வாகனங்களை பயன்படுத்தும் பெரும்பாலானருக்கு போக்குவரத்து நெரிசலை தவிர வேறு எவ்விதமான சிரமங்களும் பெரிதாக எதிர்கொள்வதில்லை என்றாலும், பாதுகாப்பு சார்ந்த அம்சங்கள் , வாகன பராமரிப்பு போன்றவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை தருவது மிக அவசியமாகின்றது. பொதுபோக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் பொதுவாகவே கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை என்பதனால் தங்கள் உடைமைகள் முதல் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். பொதுவாக அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்யபடும் என்பதனால் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள். ஆம்னி பேருந்துகள் பெரும்பாலும் ஆம்னி பேருந்து சேவையில் முன்னணியாக உள்ள…
இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ மற்றும் இங்கிலாந்தின் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனமும் இணைந்து நடுத்தர ரக மோட்டார்சைக்கிள்களை தயாரித்து சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கான கூட்டணியை உருவாக்கியுள்ளது. பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டணி பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்சர் உள்ளிட்ட பிரசத்தி பெற்ற பைக்குகளை விற்பனை செய்து வருகின்ற நிலையில் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா போன்ற பிராண்டுகளில் முக்கியமான அளவில் பங்குகளை பெற்றுள்ள நிலையில் இந்நிறுவனங்களில் உள்ள கேடிஎம் நிறுவனத்தை டியூக் 390 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சினை அடிப்படையாக கொண்டு டோமினார் பைக்கினை வெளியிட்டிருந்தது. இங்கிலாந்து நாட்டை மையமாக கொண்டு செயல்படும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் 600 சிசி முதல் 1000 சிசி க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள் சந்தையில் சிறப்பான பங்களிப்பினை சர்வதேச அளவில் கொண்டிருக்கின்ற இந்நிறுவனம் இந்திய சந்தையில் சிறப்பான வளர்ச்சி பெற்று வரும் நிலையில் குறிப்பிட்ட சில மாடல்கள் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்படுகின்ற சில மாடல்களை தவிர…
இந்திய சந்தையில் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் ஸ்கூட்டராக விளங்கும் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ரூ.55,266 விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் விற்பனையில் கிடைக்கின்ற மாடலை விட கூடுதலான வசதிகளுடன் புதிய ஜூபிடர் கிளாசிக் பல்வேறு புதிய அம்சங்களை பெற்றதாக வந்துள்ள நிலையில் சன்லிட் ஐவரி பாடி நிறத்தை பெற்றிருப்பதுடன் ஓக் பேனல் , முழு குரோம் நிறத்தை பெற்ற சைட் மிரர் , க்ரோம் பேக்ரெஸ்ட், ஸ்மார்ட் யூஎஸ்பி சார்ஜர் போன்றவற்றுடன் கிடைக்கின்றது. ஜூபிடர் கிளாசிக் மாடலில் அடுத்த தலைமுறை 110 சிசி எஞ்சின் பொருந்த்தப்பட்டு 7.9 பிஹெச்பி ஆற்றலை 7500 rpm சுழற்சியிலும் 8 Nm டார்க்கினை வழங்க 5500 rpm எடுத்துக்கொள்ளுகின்றது. டிவிஎஸ் நிறுவனத்தால் காப்புரிமை பெற்ற எக்னோமீட்டர் நுட்பத்தை பெற்றுள்ளதால் ஈகோ மோட் மற்றும் பவர் மோட் இரு பிரிவுகள் கொண்ட மோடினை எஞ்சின்…