மாருதியின் மிக சிறப்பான எண்ணிக்கையில் விற்பனை ஆகின்ற மாடல்களில் மாருதி பெலினோ ஹேட்ச்பேக் காரும் ஒன்றாகும். இந்த மாடலின் ஆல்பா வேரியன்டில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மாருதி பெலினோ ஆல்பா விற்பனைக்கு வந்த குறைந்த நாட்களிலே 2 லட்சத்துக்கு மேற்பட்ட பெலினோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் பெலினோ மாடலில் ஆர்எஸ் வேரியன்டும் கிடைத்து வருகின்ற சூழ்நிலையில் டெல்டா மற்றும் ஜெட்டா போன்றவற்றில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த சிவிடி ஆப்ஷன் தற்போது ஆல்பா வேரியன்டிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆல்பா சிவிடி வேரியன்டில் தற்போது புராஜெக்டர் முகப்பு விளக்கு, அலாய் வீல், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்றவற்றின் ஆதரவினை பெற்ற ஸ்மார்ட்ப்ளே தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளுடன் கிடைக்க பெறுகின்றது. மேலும் இரட்டை காற்றுப்பைகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றதாக விளங்குகின்றது. ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் 75PS ஆற்றல் மற்றும்…
Author: MR.Durai
வோக்ஸ்வேகன் ஏமியோ மற்றும் போலோ என இரு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டாப் வேரியன்ட் முந்தைய டாப் மாடலை விட ரூ. 26,000 வரை கூடுதலான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வோக்ஸ்வேகன் ஏமியோ இரு மாடல்களின் தோற்ற அமைப்பு மற்றும் ஆற்றல் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்பட புதிய 16 அங்கு அலாய் வீல் (சாதாரன மாடல் 15 அங்குல வீல் உள்ளது), ரிவர்ஸ் கேமரா சேர்க்கப்பட்டுள்ளது. ஏமியோ மற்றும் போலோ என இரண்டிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு என்ஜின்களை பெற்றிருக்கும். 74 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 112 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 வேக மெனுவல் தவிர 7 வேக டிசிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். விற்பனையில் உள்ள டாப்…
60, 70 களில் பிரசத்தி பெற்ற விளங்கிய ஆஃப் ரோடு பைக்குகளை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்ட புதிய டுகாட்டி ஸ்க்ராம்பளர் டெஸர்ட் ஸ்லெட் மோட்டார் சைக்கிள் இருவிதமான நிறங்களில் கிடைக்கின்றது. டுகாட்டி ஸ்க்ராம்பளர் டெஸர்ட் ஸ்லெட் இந்திய சந்தையில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்க்ராம்பளர் டெஸர்ட் ஸ்லெட் பைக்களுடன் ஸ்க்ராம்பளர் ஐகான் மற்றும் ஸ்க்ராம்பளர் கிளாசிக் மாடல்களின் பிஎஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களின் விலையும் வெளியாகியுள்ளது. 72 bhp ஆற்றலை 8250 rpm சுழற்சியில் வெளிப்படுத்தும் ஆயில் கூல்டு 803சிசி எஞ்சின் மாடலின் அதிகபட்ச டார்க் 67 Nm ஆக 5750 rpm சுழற்சியில் கிடைக்கின்றது. மிக சிறப்பான செயல்திறன் மிக இந்த பைக் மாடலில் பல்வேறு விதமான சிறப்பம்சங்களை கொண்டதாக விளங்குகின்றது. 200மிமீ வரை நீட்டிக்கும் பயணத்தை கொண்ட முன் மற்றும் பின்புற சஸ்பென்ஷன்களுடன், ஒற்றை டிஸ்க் பெற்ற 330மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக் அமைப்பினை முன்புற…
இந்தியாவின் மிகவும் விருப்பமான மோட்டார் சைக்கிள் பிராண்டுகளில் ஒன்றான ஜாவா நிறுவனத்தின் யெஸ்டி மோட்டார்சைக்கிள் மீண்டும் வருவது உறுதியாகியுள்ள நிலையில் அதிகார்வப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. யெஸ்டி மோட்டார்சைக்கிள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஜாவா மற்றும் பிஎஸ்ஏ போன்ற நிறுவனங்களை கையகப்படுத்திய மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் இருசக்கர வாகன பிரிவு தற்போது யெஸ்டி இணையதளத்தை அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 1960 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜாவா மற்றும் யெஸ்டி பிராண்டுகளில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வந்த ஐடியல் ஜாவா நிறுவனம் இரு ஸ்ட்ரோக் எஞ்சின் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முழுமையாக இந்திய சந்தையில் வெளியேறியு. ஆனால் இன்றைக்கும் ஜாவா 350 பைக்குகள் உள்பட மற்றும் யெஸ்டி ரோடுகிங் போன்ற மாடல்களுக்கு தனியான மதிப்பு உள்ளதை பலரும் அறிந்த உண்மையே , மீண்டும் யெஸ்டி இழந்த பெருமையை மீட்டெடுக்குமா என பொறுத்திருந்து காணலாம். தற்போது செயல்பாட்டுக்கு…
இத்தாலியை மையமாக கொண்டு செயல்படும் எம்.வி அகஸ்டா நிறுவனத்தின் புதிய எம்.வி அகஸ்டா புரூடேல் 800 சூப்பர் பைக் மாடல் ரூ. 15.59 லட்சம் எக்ஸ-ஷோரூம் இந்தியா விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எம்.வி அகஸ்டா புரூடேல் 800 சூப்பர் பைக் மிக நேர்த்தியான ஸ்டைலிசான வளைவுகளை பெற்ற அற்புதமான செயல்திறன் மற்றும் பல்வேறு நவீன வசதிகளை கொண்ட மாடலாக அறியப்படுகின்ற புரூடேல் 800 பைக்கில் அதிக ஆற்றல் வாய்ந்த யூரோ4 தரத்துக்கு ஏற்ற எஞ்சின் இடம்பெற்றுள்ளது. ஆனால் முந்தைய மாடலை விட 16 ஹெச்பி ஆற்றல் குறைக்கப்பட்டு 2 என்எம் டார்க் அதிகரிக்கப்பட்டுள்ளது. 11,500rpm வேகதில் அதிகபட்சமாக 110 hp ஆற்றலை வெளிப்படுத்துவதுடன், 7600rpm வேகதில் அதிகபட்சமாக 83Nm டார்க்கினை வழங்கும் மூன்று சிலிண்டர் பெற்ற 798cc எஞ்சின் பெற்றுள்ளது. இதில் சிலிப்பர் கிளட்ச் மற்றும் பை டைரக்ஷனல் க்விக் ஸ்விஃப்டர் நுட்பத்துடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. புரூடேல் 800 பைக்கில் சிறப்பு மோட்டார் வெய்கிள்…
கூடுதலான வசதிகளை பெற்றுள்ள ஹோண்டா அமேஸ் ப்ரிவிலேஜ் பதிப்பு சாதரன மாடலை விட கூடுதலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வெளிவந்துள்ளது. அமேஸ் ப்ரிவிலேஜ் 2017 ஹோண்டா அமேஸ் ப்ரிவிலேஜ் காரானது S (O) MT வேரியன்டின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது, இதே வேரியன்டின் அடிப்படையில் இரண்டு எஞ்சின் ஆப்ஷனையும் பெற்றுள்ள இந்த சிறப்பு பதிப்பு சாதாரன வேரியண்டை விட ரூ.10,000 வரை விலை கூடுதலாக பெற்றுள்ளது. அமேஸ் காரில் 88 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் 100hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இரு மாடல்களிலும் 5 மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் சிவிடி உள்ள ஆப்ஷனில் ப்ரிவிலேஜ் பதிப்பு வெளியிடப்படவில்லை. வசதிகள் விபரம் தோற்ற அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் பாடி கிராபிக்ஸ் மற்றும் ப்ரிவிலேஜ் பதிப்பு பேட்ஜை மட்டுமே பெற்றுள்ளது. இன்டிரியர்…