மாருதி ஆல்டோ கே10 மற்றும் ரெனோ க்விட் 1.0L போன்ற மாடல்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ள கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் டட்சன் ரெடி-கோ 1.0L மாடல் விலை ரூ. 3.57 லட்சம் ஆகும். டட்சன் ரெடி-கோ 1.0L T(O) மற்றும் S என இரு வகையான வேரியன்ட்களில் கிடைக்க பெற உள்ள ரெடி-கோ மாடலில் க்விட் காரில் இடம்பெற்றிருக்கின்ற அதே 1.0 லிட்டர் எஞ்சின் i-SAT’ a.k.a. Intelligent Spark Automated Technology என்ற பெயரில் 1.0 லி மாடலில் 3 சிலிண்டர் பெற்ற 999சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபடசமாக 68 hp பவரை 5,500rpm சுழற்சியில் வெளிப்படுத்துவதுடன், 91 Nm டார்கினை 4250 rpm வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 22.5 கிமீ ஆகும். சாதாரன 8.0 லிட்டர் மாடலுக்கும், 1.0 லிட்டர் மாடல்களுக்கு வித்தியாசமே 1.0 லிட்டர் பேட்ஜ் மட்டுமே மற்றபடி…
Author: MR.Durai
இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை மிக வேகமாக வளர்ந்து வருவதனையே ஜூன் 2017 மாதந்திர முதல் 10 இருசக்கர வாகன விற்பனை நிலவர முடிவுகளும் உறுதிப்படுத்துகின்றது. குறிப்பாக பஜாஜ் பல்சர் பைக் வரிசை முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடிக்க தவறியுள்ளது. முதல் 10 இரு சக்கர வாகனங்கள் – ஜூன் 2017 கடந்த சில மாதங்களுடன் ஒப்பீடுகையில் பைக் மற்றும் ஸ்கூட்டர் என இரண்டின் விற்பனையும் கனிசமான அளவு குறைந்திருந்தாலும், முதலிடத்தில் வழக்கம் போல ஆக்டிவா ஸ்கூட்டர் 2,34,767 அலகுகள் விற்பனை ஆகியுள்ளது. இரண்டாமிடத்தில் உள்ள ஸ்பிளென்டர் பைக் சுமார் 2,19,103 என்ற எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. 125சிசி சந்தை பிரிவில் உள்ள சிபி ஷைனை வீழ்த்தி கிளாமர் 78,889 பைக்குகள் விற்பனை ஆகியுள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூபிடர் ஸ்கூட்டர் மற்றும் எக்ஸ்எல் சூப்பர் போன்றவை முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன், ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் வரிசை 10வது இடத்தில் உள்ளது. இலகுவாக மாதந்தோறும்…
சர்வதேச அளவில் 8 க்கு மேற்பட்ட வகைகளில் விற்பனை செய்யப்படுகின்ற ட்ரையம்ப டைகர் எக்ஸ்புளோரர் Xcx பைக் மாடலின் ஒரே வேரியன்ட் மட்டுமே இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. ட்ரையம்ப டைகர் எக்ஸ்புளோரர் Xcx இந்தியாவில் அதிகபட்சமாக 20 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடல் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட உள்ள டைகர் எக்ஸ்புளோரர் Xcx மாடலில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்றது. குறிப்பாக பாதி அலங்கரிக்கப்பட்டு எல்க்ட்ரானிக் மூலம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான விண்ட்ஸ்கீரின் பெற்றிருப்பதுடன், மிக உறுதியான கட்டுமானத்தை பெற்ற இந்த மாடல் வெள்ளை, கருப்பு மற்றும் நீலம் ஆகிய மாடல்களில் கிடைக்க உள்ளது. 137 bhp பவரை வெளிப்படுத்தும் மிகவும் சக்திவாய்ந்த 1215 cc இன்லைன் 3 சிலிண்டர் பெற்ற லிக்யூடு கூல்டு…
இந்திய சந்தையில் சூப்பர் பைக் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் புதிதாக ரூ. 3.48 லட்சம் விலையில் பெனெல்லி 302R பைக் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இது TNT 300 பைக்கினை அடிப்படையாக கொண்ட முழு அலங்கரிக்கப்பட்ட மாடலாகும். பெனெல்லி 302R பைக் வளர்ந்து வருகின்ற சூப்பர் பைக் சந்தைக்கு ஏற்ற வகையிலான அம்சத்துடன் கூடிய பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய பெனெல்லி 302 ஆர் பைக் 200சிசி-க்கு கூடுதலான திறன் பெற்ற மோட்டார் சைக்கிள் விரும்பிகளுக்கு ஏற்ற மாடலாக அமைந்திருக்கும். சிகேடி முறையில் இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட உள்ள மிக நேர்த்தியாக இரு பிரிவு முகப்பு விளக்குகள் கொண்டு ஃபேரிங் செய்யப்பட்டுள்ள 302 ஆர் பைக்கின் எடை 196 kg ஆகும். இந்த பைக்கின் முன்புற டயரில் 4 பிஸ்டன் காலிப்பருடன் கூடிய 260 மிமீ இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் 240 மிமீ ஒரு டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பெற்றுள்ளது. சிறப்பான பயண அனுபவத்தினை…
டெக் மற்றும் மோட்டார் நிறுவனங்கள் மிக கடுமையாக முயன்று வரும் தானியங்கி கார் நுட்பத்தினை செயல்படுத்தினால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என்பதனால் ஓட்டுனரில்லா கார்களை இந்தியாவில் அனுமதிக்க இயலாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதிப்படுத்தியுள்ளார். ஓட்டுனரில்லா கார்கள் மெர்சிடிஸ், வால்வோ உள்ளிட்ட நிறுவனங்கள் கூகுள், ஆப்பிள் போன்ற டெக் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் டிரைவரில்லா கார் நுட்பத்தை இந்திய சந்தையில் அனுமதிக்க வாய்ப்பிலை என அமைச்சர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி ஓட்டுனரில்லா கார்கள் பற்றி கூறுகையில் எந்த காரணத்தை முன்னிட்டும் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும் டிரைவரில்லா கார்களுக்கு இந்தியாவில் அனுமதிக்க இயலாது என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்தியாவில் 22 லட்சத்துக்கு மேற்பட்ட வணிகரீதியான டிரைவர்கள் தேவை இருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 100 ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள் தொடங்க…
விட்டாரா பிரெஸ்ஸா, ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு மிகுந்த சவாலாக அமைய உள்ள நெக்ஸான் எஸ்யூவி காரின் வியக்கதக்க 5 முக்கிய அம்சங்களை டாடா வெளியிட்டுள்ளது. நெக்ஸான் எஸ்யூவி முக்கிய சிறப்பம்சங்கள் டாடா நிறுவனத்தின் முதல் 4 மீட்டருக்கு குறைவான நீளத்தை பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக வெளியிடப்பட உள்ள நெக்சன் எஸ்யூவி மாடலில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது. எஞ்சின் விரைவில் சந்தையில் களமிறங்க உள்ள நெக்ஸானில் 4 மீட்டருக்கு குறைவான காம்பேக்ட் ரக எஸ்யூவி பிரிவில் முதன்முறையாக சுவாரஸ்யமான சில வசதிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. டியாகோ மற்றும் டீகோர் போன்ற மாடல்களில் இடம்பெற்றிருந்த அதே ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெவோடார்க் வரிசையில் புத்தம் புதிதாக…