மாதாந்திர விற்பனை நிலவரப்படி கடந்த ஜூன், 2017 மாத கார் விற்பனை முடிவில் முன்னணி வகித்த முதன்மையான 10 கார் நிறுவனங்களின் பட்டியலை இங்கே காணலாம். முதலிடத்தில் மாருதி சுசுகி நிறுவனமும், அதனை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் இடம்பெற்றுள்ளது. கார் விற்பனை – ஜூன் 2017 ஜிஎஸ்டி வருகையினால் பெரும்பாலான கார் நிறுவனங்களின் விற்பனை கடுமையான சரிவினை சந்தித்துள்ள நிலையில் குறிப்பாக டொயோட்டா உள்பட அனைத்து முன்னணி கார் விற்பனை விபரமும் சரிந்தே காணப்படுகின்றது. நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனம் ஜூன் மாத நிலவரப்படி மொத்தம் 93,263 கார்களை உள்நாட்டிலும், 13,131 கார்களை ஏற்றுமதி செய்யப்பட்டு மொத்தமாக 1,06,394 கார்களை விற்பனை செய்துள்ளது. குறிப்பாக மாருதியின் விற்பனையில் ஆல்ட்டோ, பிரெஸ்ஸா, ஸ்விஃப்ட், டிசையர் போன் கார்கள் முக்கிய பங்காற்றுகின்றது. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனம் 37,562 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ள நிலையில்…
Author: MR.Durai
டாடா மோட்டார்சின் துனை பிராண்டான டாமோ பிராண்டில் முதல் மாடலாக ரேஸ்மோ கார் மாடலை 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்தியது.
இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஜூன் 2017 மாதந்திர விற்பனயில் முன்னிலை பெற்ற டாப் 5 நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ளலாம். ஹீரோ நிறுவனம் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக உள்ளது. இரு சக்கர வாகன விற்பனை நிலவரம் நாட்டின் முதன்மையான மற்றும் உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 6,24,185 வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தை பெற்றுள்ளது. இதே காலகட்டத்தில் புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஜாஜ் ஆட்டோ விற்பனையில் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக ஜூன் ஜிஎஸ்டி வருகைக்கு முந்தைய மாதமாக இருந்திருந்தாலும் பஜாஜ் ஆட்டோ ரூ.4000 வரை சலுகைகளை வழங்கியிருந்தாலும், கடந்த வருடம் ஜூன் மாதத்துடன் ஒப்பீடுகையில் 35.89 சதவிகித வீழ்ச்சி பெற்று 1,08,109 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளராக விளங்கும் ஹோண்டா…
நிசான் குழுமத்தின் பட்ஜெட் பிராண்டான டட்சன் ரெடி-கோ காரில் 1.0 லிட்டர் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வரவுள்ளதால் புதிய ரெடி-கோ 1.0 கார் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம். டட்சன் ரெடி-கோ 1.0 க்விட் காரின் பிளாட்பாரத்தின் பன்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்ட ரெடி-கோ மாடலில் தற்போது 0.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் க்விட் காரை போலவே 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் ஜூலை மாத இறுதி வாரங்களில் அறிமுகம் செய்யப்படுகின்றது. ரெடி-கோ டிசைன் வெளி தோற்றம் மற்றும் உட்புற அமைப்பு போன்றவற்றில் விற்பனையில் உள்ள மாடலில் இருந்து எந்த மாற்றங்களையும் பெறாமல் பின்புறத்தில் மட்டுமே 1.0 என்ற பேட்ஜை பெற்றுள்ள ரெடி கோ 1.0 மாடலில் இன்டிரியர் அமைப்பிலும் 2டின் ஆடியோ சிஸ்டத்துடன் விற்பனையில் உள்ள மாடலின் வடிவமைப்பையே கொண்டுள்ளது. அர்பன் க்ராஸ்ஓவர் ரக மாடலாக வலம் வருகின்ற ரெடி-கோ ஹேட்ச்பேக் தாரளமான இடவசதி…
வரும் ஜூலை 31ந் தேதி இந்தியாவில் களமிறங்க உள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளதை தொடர்ந்து காம்பஸ் பற்றி அறிந்து கொள்ளலாம். ஜீப் காம்பஸ் எஸ்யூவி அமெரிக்காவின் கட்டுறுதி மிக்க பிராண்டுகளில் ஒன்றான ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் எஸ்யூவி கார் இந்தியாவிலே உற்பத்தி செயப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளதால் மிக சவாலான விலையில் பல்வேறு அம்சங்களுடன் வரவுள்ளது. டிசைன் ஜீப் நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் அமைப்புடன் கூடிய கம்பீரமான தோற்ற அமைப்பில் ஸ்டைலிஷனான ஹெட்லைட் பெற்று நேர்த்தியாக டிசைனிங் செய்யப்பட்ட கிரில்கள், பம்பர், அலாய் வீல் கொண்டதாக உள்ளது. உட்புறத்தில் உயர்தர வசதிகளை பெற்ற டேஸ்போர்டு , சொகுசு இருக்கைகளை சிறப்பான இடைவெளி கொண்டிருப்பதுடன் அதிகப்படியான பொருட்களை எடுத்துச் செலவதற்கான பூட்டினை பெற்று விளங்குகின்றது. எஞ்சின் காம்பஸ் எஸ்யுவி மாடலில் 160 hp ஆற்றலுடன் 350 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6…
இந்தியாவின் இருசக்கர வாகன சந்தையில் ஸ்கூட்டர் பங்களிப்பு மிகுந்த காணப்படும் சூழ்நிலையில் முதலிடத்தில் ஹோண்டா , அதனை தொடர்ந்து டிவிஎஸ் மற்றும் ஹீரோ நிறுவனங்களும் உள்ளது. ஸ்கூட்டர் சந்தை நிலவரம் மொத்த ஸ்கூட்டர் சந்தையின் பங்களிப்பில் 59 சதவிதம் அளவிற்கு சந்தையை பெற்றுள்ள ஹோண்டா நிறுவனத்தை பின் தொடர்ந்து டிவிஎஸ் நிறுவனம் உள்ளது. நாட்டின் முன்னணி பைக் தயாரிப்பாளரான ஹீரோ ஸ்கூட்டர் சந்தையில் வளர்ச்சியை பெறாமலே வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது. கடந்த 2016-2017 நிதி ஆண்டின் முடிவில் ஹோண்டா நிறுவனம் 31,89,012 அலகுகள் எண்ணிக்கையில் ஸ்கூட்டரை விற்பனை செய்து நாட்டின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளராக விளங்குகின்றது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளராக சுமார் 8,26,291 அலகுகளை விற்பனை செய்துள்ளது. இதே காலகட்டத்தில் நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் சரிவினை நோக்கி பயணித்து முந்தைய ஆண்டை விட 4…