ஜிஎஸ்டி எதிரொலியின் காரணமாக மோட்டார் சைக்கிள்கள் விலை குறைந்து வரும் நிலையில் சுசுகி பைக்குகள் ரூ.500 முதல் ரூ.2000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. பிரிமியம் ரக மாடல்களான GSX-S1000 ABS, GSX-S1000F, GSX-R1000R மற்றும் ஹையபுசா போன்றவை விலை உயர்த்தப்பட்டுள்ளது. சுசுகி பைக்குகள் – ஜிஎஸ்டி சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரிவில் விற்பனை செய்யப்படுகின்ற ஸ்கூட்டர்கள் மற்றும் 350சிசி க்கு குறைவான பைக் மாடல்கள் போன்றவற்றின் விலை ரூ. 500 முதல் அதிகபட்சமாக ரூ. 2000 வரை குறைக்கப்பட்டுள்ளது. பிரிமியம் ரக சூப்பர் பைக் மாடல்களில் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்படுகின்ற GSX-S1000 ABS, GSX-S1000F, GSX-R1000R மற்றும் ஹையபுசா போன்றவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 350சிசி க்கு மேற்பட்ட பிரிவுகளில் உள்ள மாடல்களுக்கு 31 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. சுசுகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஜிக்ஸர் வரிசை மாடல்களின் விலை அதிகபட்சமாக 2000 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு டீலர்கள் மற்றும் மாநிலம் வாரியாக…
Author: MR.Durai
உலகின் மிக நீண்ட பாரம்பரிய கொண்ட ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் கஃபே ரேசர் ரக கான்டினென்ட்டல் ஜிடி 535 மாடலை இந்தியாவை தொடர்ந்து சர்வதேச சந்தையிலிருந்து விரைவில் நீக்க உள்ளது. என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பிரிமியம் ரக மாடலாக விளங்கி வரும் கான்டினென்ட்டல் ஜிடி 535 மாடலுக்கு வரவேற்பு குறைந்து வந்த சூழ்நிலையில் ஜிடி 535 மாடல் முதற்கட்டமாக சில மாதங்களுக்கு முன்னதாக இந்தியாவில் நீக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது. இந்த மாடலில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் கூடிய 535 சிசி அதிகபட்சமாக 29.1 bhp பவர் மற்றும் 44Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு 650 சிசி எஞ்சின் பெற்ற கான்டினென்ட்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய இரு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளதால், வரும் செப்டம்பர் 2018 மாத இறுதியில் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி வரி விதிப்பை தொடர்ந்து பெரும்பாலான மோட்டார் நிறுவனங்கள் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் ஃபோர்டு இந்தியா 4.5 சதவிகித வரை விலையை குறைத்துள்ளது. ஃபோர்டு இந்தியா – ஜிஎஸ்டி ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் கார்கள் மற்றும் எஸ்யூவி-கள் விலையை ரூ. 2000 முதல் அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது. மாநில வாரியாக விலையில் மாற்றங்கள் இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. குறிப்பாக மும்பை எக்ஸ்-ஷோரூம் விலையில் என்டேவர் பிரிமியம் எஸ்யூவி அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது, டெல்லியில் 1.50 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபிகோ ரூ.2000, ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி 8,000 என மாடல்கள் வாரியாக குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஃபோர்டு நிறுவனம் தனது என்டேவர் எஸ்யூவி மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியன்ட் பெற்ற மாடல்களை அனைத்தையும் நீக்கியுள்ளது. மாருதி,…
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்கள் அதிகபட்சமாக ரூ.4500 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. 350சிசி க்கு குறைவான எஞ்சின் பெற்ற புல்லட்களும் கனிசமாக விலை உயர்ந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு – ஜிஎஸ்டி ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு 350 சிசி க்கு குறைவான மோட்டார்சைக்கிள்மாடல்கள் விலை குறைந்திருப்பதுடன் 350சிசி க்கு மேற்பட்ட மாடல்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. என்ஃபீல்டு பைக்குகளின் வரிசையில் உள்ள 346 சிசி எஞ்சின் பெற்ற மாடல்களான புல்லட் ES , கிளாசிக் 350, தன்டர்பேர்டு 350 போன்ற மாடல்களின் விலை மிக குறைவாகவே சென்னை போன்ற சில இடங்களில் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெருவாரியாக ராயல் என்ஃபீல்டு மாடல்கள் அதிகபட்சமாக ரூ. 4500 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட் ES , கிளாசிக் 350, தன்டர்பேர்டு 350, புல்லட் 500, கிளாசிக் 500, கிளாசிக் க்ரோம் , தண்டர்பேர்டு 500 , கான்டினென்டினல் ஜிடி உள்பட ஹிமாலயன்…
உலகின் மிக பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ஸ்வீடன் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ஹஸ்க்வர்னா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் மாடல்கள் அடுத்த வருடத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ஹஸ்க்வர்னா மோட்டார் சைக்கிள் பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனத்தின் 10 ஆண்டுகால கூட்டணியை கொண்டாடும் வகையில் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள விட்பிலின் 701, ஸ்வார்ட்பிலின் 401 மற்றும் விட்பிலின் 401 போன்ற மாடல்கள் ஆஸ்திரியாவில் முநன்முறையாக உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில் பஜாஜ் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள ஸ்வார்ட்பிலின் 401 மற்றும் விட்பிலின் 401 மாடல்களுக்கு சர்வதேச ஏற்றுமதி மையமாக இந்திய திகழும் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேடிஎம்-பஜாஜ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் டியூக் 125, டியூக் 200, டியூக் 390 மாடல்களும் ஆர்சி 125, ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 போன்ற மாடல்களை பஜாஜ்…
இந்தியாவில் ஜிஎஸ்டிஎனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்திற்கு பிறகு பைக்குகள் விலை குறைந்து வரும் நிலையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் ரூ. 350 முதல் ரூ. 4,150 வரை விலையை குறைத்துள்ளது. டிவிஎஸ் பைக்குகள் – ஜிஎஸ்டி ஜூலை 1ந் தேதி முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக மோட்டார் துறையில் பல்வேறு விலை குறைப்பு மற்றும் உயர்வு தொடர்பான அறிக்கைகளை நிறுவனங்கள் வெளியிட்டுள்ள நிலையில் டிவிஎஸ் இரு சக்கர வாகன பிரிவும் இணைந்துள்ளது. நம்ம ஊரு டிவிஎஸ் நிறுவனம் 350 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் விலையை குறைத்துள்ளது. 160சிசி க்கு மேற்பட்ட சந்தையில் உள்ள பிரிமியம் ரக மாடல்கள் என அறியப்படுகின்ற அப்பாச்சி 160, அப்பாச்சி 180 மற்றும் அப்பாச்சி 200 போன்றவற்றில் அதிகபட்சமாக ரூ. 4,150 வரை விலையை குறைத்துள்ளது. விலை குறைப்பு என்பது மாநிலம் ,மாவட்ட…