ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வருவதனால் இரு சக்கர வாகனம் விலை குறையுமா அல்லது உயருமா என்பதனை இங்கே அறிந்து கொள்ளலாம். GST வரி : சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி எனும் வரி விதிப்பின் மூலம் நாடு முழுவதும் ஒரே சீரான வரிமுறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில்5%, 12 %, 18% மற்றும் 28 % என 4 விதமான பிரிவுகளில் சரக்குகள் மற்றும் சேவைகளுக்காக வரி விதிப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பிரிவுகளில் மோட்டார் வாகன துறைக்கு ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால் கார்கள் , இருசக்கர வாகனங்கள்,வர்த்தக வாகனங்கள், ஆடம்பர படகுகள் உள்பட அனைத்து மோட்டார் துறையைச் சேர்ந்த வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் என அனைத்திற்கும் ஒரே பிரிவு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் டிராக்டர் மற்றும் மின்சார கார்களுக்கு…
Author: MR.Durai
இந்தியாவில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் மேம்படுத்தப்பட்ட 2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடல் ரூ. 49.9 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு எஞ்சின் ஆப்ஷனிலும் 5 சீரிஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளது. 2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட 5 சீரிஸ் மாடல் புதிய கிளஸ்ட்டர் ஆர்க்கிடெச்சர் (CLAR-Cluster Architecture) பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டு 7 சிரிஸ் காரின் வடிவ உந்துதலை பெற்றதாக வந்துள்ளது. பல்வேறு நவீன வசதிகளை பெற்றதாக வந்துள்ள 5 சீரிஸ்வகை மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், 10.25 அங்குலம் பெற்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கேமரா, உள்பட, பிஎம்டபிள்யூ டிஸ்பிளே கீ வசதியுடன் கூடிய ரீமோட் பார்க்கிங் வசதி என பல்வேறு நுட்பங்களை பெற்றுள்ளது. 5-சீரஸ் எஞ்சின் ஸ்போர்ட் லைன் , லக்சூரி லைன் மற்றும் பெர்ஃபாமென்ஸ் ரக M ஸ்போர்ட் என மொத்தம்…
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற கம்பீரமான மோட்டர்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீலடு நிறுவனத்தின் ஹிமாலயன் அட்வென்ச்சர் ரக மாடல் கடந்த மூன்று மாதங்களாக எந்தவொரு பைக்குகளும் விற்பனை செய்யப்படவிலை என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹிமாலயன் பைக் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் குறைந்தவிலை பெற்ற அட்வென்ச்சர் ரக மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஹிமாலயன் பைக் மாடல் விற்பனைக்கு வந்த நாள் முதலே பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் மிக கடுமையாக வாடிக்கையாளர்களால் ராயல் என்ஃபீலடு நிறுவனத்தின் மீதான புகார்கள் தொடர்ந்து சுமத்தப்பட்ட நிலையில் ஏப்ரல் 1ந் தேதி முதல் எந்தவொரு மாடலும் டெலிவரி கொடுக்கப்படவில்லை. ஹிமாலயன் நீக்கமா ? பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து பிஎஸ் 3 எஞ்சின் பொருத்தப்பட்ட ஹிமாலயன் பைக்குகள் விற்பனையை முற்றிலுமாக ராயல் என்ஃபீல்டு நிறுத்தியிருந்தாலும், பல்வேறு குறைகள் சொல்லப்பட்டிருந்த நிலையில் அவற்றை நீக்குவதற்கும் எஃப்ஐ வசதியுடன் கூடிய…
இந்தியாவின் யமஹா டூ வீலர் நிறுவனம் புதிய யமஹா ஸ்கூட்டர் மாடல் ஒன்றை சென்னை அருகில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்திய படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. யமஹா ஃபேசினோ சாயிலில் இந்த ஸ்கூட்டர் அமைந்துள்ளது. புதிய யமஹா ஸ்கூட்டர் யமஹா நிறுவனத்தின் ஸ்கூட்டர் சந்தை சிறப்பான வளர்ச்சி பெற்று வருகின்ற யமஹா ஃபேசினோ மாடல் உள்பட ஆல்ஃபா , ரே இசட் மற்றும் ரே இசட் ஆர் போன்ற மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஆல்ஃபா மாடலை தவிர மற்றவைகள் சிறப்பான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. யமஹாவின் நான்கு ஸ்கூட்டர் மாடல்களுமே 7.1 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 113சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 110சிசி சந்தைக்கு ஏற்ற மாடலாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் புதிதாக சென்னையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட யமஹா ஸ்கூட்டரின் படங்களை பைக்அட்வைஸ் தளம் தனது வாசகர் ஒருவரின் வாயிலாக வெளியிட்டுள்ளது. பின்புற தோற்ற அமைப்பின் சில பகுதிகள்…
நாளை ஜூன் 29, 2017 தேதிக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. இன்றைய விலையை விட பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை என இரண்டிலும் எந்த மாற்றங்களும் இல்லை. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 29-06-2017 இன்றைக்கு (ஜூன் 28) சென்னையில் விற்பனை செய்யப்படுகின்ற பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 65.90 காசுகளும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 56.38 காசுகளும் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நாளை விலையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. சென்னையில் ஜூன் 29.06-2017 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.90 காசுகள் டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.38 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது
வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக டிவிஎஸ் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் பைக்குகள் GST எனப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பை தொடர்ந்து பல்வேறு கார் நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்கியிருந்தாலும் மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ராயல் என்ஃபீல்டு, யூஎம் மோட்டார்சைக்கிள் மற்றும் பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் டிவிஎஸ் தலைமை செயல் அதிகாரி KN ராதாகிருஷ்னன் அவர்கள் கூறியதாவது ; ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறை மிகப் பெரிய சீர்திருத்தமாக விளங்கும் என்பதனால், வர்த்தகரீதியாக நடைமுறையில் எளிமையை மேற்கொள்ளும் என்பதனால் வாடிக்கையாளர்கள் ஏராளமான நண்மைகளை அடைவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக கூறியுள்ளார். மாநிலங்களை பொறுத்து விலை விபரம் மாறுதல் அடையும் என்றாலும், பெரும்பாலான மோட்டார் சைக்கிள் நிறுவனங்களின் 350சிசி க்கு குறைவான…