பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய பிளாக் ஃபையர் பதிப்புகளில் பிஎம்டபிள்யூ X5 M மற்றும் X6 M பெர்ஃபாமென்ஸ் ரக மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனுடைய புகைப்படங்களின் தொகுப்பை கீழே காணலாம். பிஎம்டபிள்யூ X5 M மற்றும் X6 M
Author: MR.Durai
சர்வதேச அளவில் 2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட கூடுதலான பல வசதிகளை பெற்றிருப்பதுடன் அதிகப்படியான இடவசதி மற்றும் பெர்ஃபாமென்ஸ் கொண்டாதாக விளங்குகின்றது. 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி
இந்திய சந்தையில் ஜப்பான்,ஜெர்மனி, கொரியா போன்ற நாடுகளின் நிறுவனங்கள் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் முதல் சீன ஆட்டோமொபைல் நிறுவனமாக எஸ்ஏஐசி (SAIC) குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற இங்கிலாந்தின் எம்ஜி மோட்டார் (MG Motor India) நிறுவனம் களமிறங்க உள்ளது. எம்ஜி மோட்டார் இந்தியாவிலிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜிஎம் செவர்லே வெளியேறினாலும் அதனுடைய சீன கூட்டாளி நிறுவனமான எஸ்ஏஐசி (SAIC) குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் வாயிலாக தனது செயல்பாட்டை தொடங்க உள்ளது. சீனாவைச் சேர்ந்த சாங்காய் ஆட்டோமோட்டிவ் இன்ட்ஸ்டிரி கார்ப்ரேஷன் குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற பிரிட்டிஷ் நாட்டின் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சீனா உள்பட இங்கிலாந்து போன்ற நாடுகளில் க்ராஸ்ஓவர் ரக கார்கள், செடான், ஹேட்ச்பேக், மின்சார கார்கள் மற்றும் எஸ்யூவிகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றது. ஜிஎம் நிறுவனத்தால் கைவிடப்பட்ட குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹாலோல் ஆலையை கையகப்படுத்தும் நோக்கில் உள்ள இந்நிறுவனம்,இந்த ஆலையில் கார்கள் மற்றும் எஸ்யூவி…
நாளை ஜூன் 28, 2017 தேதிக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. இன்றைய விலையை விட பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டு, டீசல் வீலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 28-06-2017 இன்றைக்கு (ஜூன் 27) சென்னையில் விற்பனை செய்யப்படுகின்ற பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 65.89 காசுகளும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 56.38 காசுகளும் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.01 பைசா அதிகரிக்கப்பட்டு, டீசலுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. சென்னையில் ஜூன் 28.06-2017 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.90 காசுகள் டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.38 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.
வரும் ஜூலை 1ந் தேதி முதல் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வருவதனை ஒட்டி பைக்குகள் விலை 3 சதவிகிதம் முதல் அதிகபட்சமாக 5 சதவிகிதம் வரை குறைக்க ஹோண்டா டூவீலர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹோண்டா பைக்குகள் ஜிஎஸ்டி வரி முறை நடைமுறைக்கு வருவதனால் பல்வேறு கார் நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்கியிருந்தாலும் மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ராயல் என்ஃபீல்டு, யூஎம் மோட்டார்சைக்கிள் மற்றும் பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகின்றது. ஜிஎஸ்டி-க்கு பிறகு ஹோண்டா பைக்குகள் விலை 3 சதவிகிதம் முதல் அதிகபட்சமாக 5 சதவிகிதம் வரை வாய்ப்புகள் உள்ளதால் மேலும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பலன்களை வழங்க உள்ளதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் துனை தலைவர் தெரிவித்துள்ளார். ஹோண்டாவின் 350சிசி க்கு உள்பட மாடல்கள் ரூ.4500 வரை விலை குறைக்கப்பட உள்ளது. சமீபத்தில் ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டர் மாடல்…
நாளை ஜூன் 27, 2017 தேதிக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. நேற்றைய விலையை விட பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டின் விலையும் குறைக்கபட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 27-06-2017 இன்றைக்கு (ஜூன் 26) சென்னையில் விற்பனை செய்யப்படுகின்ற பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 65.98 காசுகளும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 56.38 காசுகளும் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.09 பைசாவும், டீசலுக்கு 0.00 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் 27.06-2017 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.89 காசுகள் டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.38 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.