இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகனமாக விளங்குகின்ற ஹோண்டா ஆக்டிவா மே மாத விற்பனை முடிவில் 2,82,478 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. மே 2017 மாதந்திர விற்பனையில் டாப் 10 டூவீலர்கள் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம். டாப் 10 டூவீலர்கள் – மே 2017 நமது நாட்டில் ஸ்கூட்டர் சந்தைக்கான ஆதரவு மிக சிறப்பான வகையில் வளர்ந்து வருகின்ற நிலையில் முன்னணி ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா மற்றும் டியோ என இரு மாடல்களும் முதல் 10 இடங்களில் இடம்பிடித்திருக்கின்றது. பைக்குகளில் வழக்கம் போல ஹீரோ ஸ்பிளென்டர்,எச்எஃப் டீலக்ஸ,உள்பட ஹோண்டா சிபி ஷைன், பல்சர் போன்றவற்றுடன் டிவிஎஸ் எக்ஸ்எல் மற்றும் ஜூபிடர் போன்ற மாடல்களும் முதல் 10 இடங்களில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. ஸ்கூட்டர் சந்தையில் புதிய மாடல் ஒன்றை ஹோண்டா வருகின்ற 21ந் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளதாக உறுதி செய்துள்ளது.
Author: MR.Durai
நாளை ஜூன் 25, 2017 தேதிக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. நேற்றைய விலையை விட பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டின் விலையும் குறைக்கபட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 25-06-2017 இன்றைக்கு (ஜூன் 24) சென்னையில் விற்பனை செய்யப்படுகின்ற பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 66.45 காசுகளும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 56.63 காசுகளும் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.30 பைசாவும், டீசலுக்கு 0.16 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் 25.06-2017 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.15 காசுகள் டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.47 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடலாக விளங்கும் மாருதி பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை 20 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. பலேனோ கார்கள் மாருதியின் பிரத்யேகமான நெக்ஸா பிரிமியம் ஷோரூம் வாயிலாக விற்பனை செய்ப்படுகின்ற மிக முக்கியமான மாடலாக வலம் வருகின்ற மாருதி பலேனோ கார் கடந்த அக்டோபர் 2015 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அமோக ஆதரவினை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்ற காராக உள்ளது. மேட் இன் இந்தியா தயாரிப்பாக விளங்கும் பலேனோ கார் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் ஒரு வருடத்திற்குள் ஒரு லட்சம் கார்கள் விற்பனை செய்திருந்த நிலையில் மீண்டும் தற்போது அடுத்த 12 மாதங்களுக்குள் மேலும் ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்து மொத்தம் 2லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவை தவிர ஜப்பான்…
வாகன ஓட்டிகளுக்கு மாரடைப்பு வருவதனையே முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கையை எழுப்பும் வகையிலான நுட்பத்தை ஆய்வாளர்கள் உருவாக்கி வருகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு இதுபோன்ற சிரமங்கள் ஏற்படும் சமயத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தவிரக்கவே ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மோட்டார் டெக் பயணங்களின் போது வாகன ஓட்டிகளுக்கு மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை வாகனங்கள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் சூழ்நிலை உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு மாரடைப்பு வருவதனை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கும் கருவியை அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆய்வாளர் கயவன் நஜரியன் இது பற்றி கூறுகையில் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் இதயம் சார்ந்த பிரச்சனைகளான கார்டியோ வாஸ்குலர் , மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை முன்கூட்டியே அறிந்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆய்வாளர்கள் மற்றும் டொயோட்டா கார் நிறுவனமும் இணைந்த வாகன ஓட்டிகளின் திறனை கண்கானித்து…
ஜீப் பிராண்டில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஜீப் காம்பஸ் எஸ்யுவி காருக்கு முன்பதிவு தொடங்கப்பட்ட மூன்றே நாட்களில் 1000 முன்பதிவுகளை பெற்று அதிரடி சாதனையை தொடங்கியுள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யுவி இந்தியாவிலிருந்து வலதுபக்க டிரைவிங் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள ஜீப் காம்பஸ் எஸ்யுவி மாடலில் 160 ஹெச்பி ஆற்றலுடன் 350 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 170 ஹெச்பி பவருடன், 260 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச் கியராபாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 4×4 டிரைவ் , 4×2 டிரைவ் என இருவிதமான வகைகளில் கிடைக்க உள்ளது. வேரியன்ட் விபரம் Sport, Longitude, Longitude(O), Limited மற்றும் Limited(O) என 5 வகையான வேரியன்ட்களில் கிடைக்க பெற உள்ளது. 23 மாதங்களில் $280 மில்லியன் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள…
2004 முதல் 2012 வரை தயாரிக்கப்பட்ட ஃபோர்டு நிறுவனத்தின் ஃபியஸ்டா கிளாசிக் மற்றும் முதல் தலைமுறை ஃபிகோ ஆகிய இரு மாடல்களிலும் பவர் அசிஸ்டேட் ஸ்டீயரிங் குழாயில் உள்ள பிரச்சனைக்காக 39,315 கார்களை திரும்ப அழைக்க உள்ளது. ஃபோர்டு இந்தியா இந்தியாவில் ஃபோர்ட் நிறுவனத்தின் ஃபோர்டு ஃபியஸ்டா கிளாசிக் மற்றும் முதல் தலைமுறை ஃபிகோ என இரு மாடல்களிலும் அதிக அழுத்தம் கொண்ட பவர் அசிஸ்டேட் ஸ்டீயரிங் குழாயில் விரிசலின் காரணமாக ஆயில் வெளியேறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவர் ஸ்டீயரிங் ஆயில் எஞ்சின் அறையில் ஆயில் வெளியேறுவதனால், எக்ஸ்ஹாஸ்ட் பகுதியை ஆயில் வந்தடைவதனால் புகை போக்கி வாயிலாக கலப்பதனால் அதிக புகை வெளிவரும் அல்லது அரிதாக தீப்பற்றும் அபாயம் உள்ளதால் தானாகேவே முன்வந்து கார்களை திரும்ப அழைப்பதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது. தானாகவே முன்வந்து ஃபோர்டு தங்களுடைய பாதிக்கப்பட்ட கார்களில் ஆய்வு செய்து டீலர்கள் வாயிலாக இலவசமாக மாற்றி தருவதாக அழைப்பு விடுத்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள வாகன…