நாளை ஜூன் 23, 2017 தேதிக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. நேற்றைய விலையை விட பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டின் விலையும் குறைக்கபட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 23-06-2017 இன்றைக்கு (ஜூன் 22) சென்னையில் விற்பனை செய்யப்படுகின்ற பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 66.93 காசுகளும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 56.82 காசுகளும் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.23 பைசாவும், டீசலுக்கு 0.09 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் 23.06-2017 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.70 காசுகள் டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.73 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.
Author: MR.Durai
ரெனால்ட் க்விட் காரின் அடிப்படையில் உருவான டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் காரில் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டட்சன் ரெடி-கோ 1.0லி க்விட் காரின் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட நிசான் நிறுவனத்தின் பட்ஜெட் பிராண்டு மாடலான ரெடி-கோ காரில் 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. க்விட் கார் பெற்றுள்ள 800சிசி என்ஜினே பெற்றுள்ள ரெடி-கோ காரின் ஆற்றல் 54 hp மற்றும் 72 Nm இழுவைதிறனை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. ரெனோ க்விட் காரில் உள்ள 67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர்…
சர்வதேச அளவில் சிறந்து விளங்குகின்ற எஞ்சின்களுக்கு விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டின் சர்வதேச எஞ்சினாக ஃபெராரி நிறுவனத்தின் 3.9 லிட்டர் வி8 ட்வீன் டர்போ எஞ்சின் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச எஞ்சின் விருதுகள் – 2017 சர்வதேச என்ஜின் விருதுகள் 2017 ஆம் ஆண்டில் 31 நாடுகளை சேர்ந்த 58 ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் நடுவர்காளக செயல்பட்டு சிறந்த எஞ்சின் உள்பட புதிய எஞ்சின், எலக்ட்ரிக் பவர்ட்ரெயின் உள்பட பல்வேறு லிட்டர் பிரிவுகள் வாயிலாக எஞ்சின்களை தேர்வு செய்துள்ளனர். 6 ஆண்டுகளாக தொடர்ந்து 1.0 லிட்டருக்கு குறைவான பிரிவில் ஃபோர்டு நிறுவனத்தின் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் சிறந்த எஞ்சினாக விளங்குகின்றது. மேலும் சில ஆண்டுகள் என்ஜின் விருதுகளையும் வென்றுள்ளது. இரண்டாவது ஆண்டாக இந்த வருடத்தின் சிறந்த சர்வதேச எஞ்சினாக ஃபெராரி 488 GTB காரில் இடம்பெற்றுள்ள 3.9 லிட்டர் வி8 ட்வீன் டர்போ எஞ்சின் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் உள்ள 13 பிரிவுகளில் 3…
நாளை ஜூன் 22, 2017 தேதிக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. நேற்றைய விலையை விட பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டின் விலையும் குறைக்கபட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 22-06-2017 இன்றைக்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகின்ற பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 67.04 காசுகளும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 56.89 காசுகளும் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.11 பைசாவும், டீசலுக்கு 0.07 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் 22.06-2017 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.93 காசுகள் டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.82 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.
கியா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக கியா ஸ்டோனிக் காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற ஃபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் ஸ்டோனிக் வெளிப்படுத்தப்பட உள்ளது. கியா ஸ்டோனிக் காம்பேக்ட் எஸ்யூவி சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள ஹூண்டாய் கோனா எஸ்யூவி மாடலின் கியா பேட்ஜ் பதிக்கப்பட்ட மாடலே கியா ஸ்டோனிக் எஸ்யூவி மாடலாகும். நிசான் ஜூக் மற்றும் ரெனோ காப்டூர் போன்ற மாடல்களுக்கு நேரடியான சவாலாக ஸ்டோனிக் விளங்கும். கோனா மாடலில் இருந்து வித்தியாசப்படும்வகையில் கியா நிறுவனத்தின் பாரம்பரியமான கிரில் தோற்ற அமைப்புடன் கூடிய மாடலாக வந்துள்ள ஸ்டோனிக் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனுடன் கூடுதலாக 1.6 லிட்டர் டீசல் எஞ்சின்வ மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும். பல்வேறு நவீன வசதிகளான தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் ,பிளைன்ட் ஸ்பாட் அறிதல் உள்பட ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட்…
ஜாகுவார் நிறுவனத்தின் எஸ்யூவி ரக மாடல் பேஸ் வரிசையில் புதிதாக F-Pace எஸ்யூவி மாடலின் அடிப்படையில் உருவான E-Pace எஸ்யூவி டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இ-பேஸ் ஜூலை 13ந் தேதி சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. E-Pace எஸ்யூவி டீசர் படம் வெளியானது டாடா குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் F-Pace எஸ்யூவி வெற்றியை தொடர்ந்து வரவுள்ள மினி எஸ்யூவி மாடலான E-Pace எஸ்யூவி காரின் வடிவ தாத்பரியங்கள் முந்தைய மாடலில் இருந்தே பெற்றுள்ளது. தோற்ற அமைப்பில் எஃப் பேஸ் காரின் வடிவ அம்சத்தை பெற்றதாக வரவுள்ள இந்த மாடல் குறைந்த நீளத்துடன் சிறப்பான பல வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. இன்டிரியர் அமைப்பில் ஜாகுவார் எக்ஸ்இ மற்றும் எஃப் பேஸ் போன்றவற்றின் தாத்பரியங்களை பெற்றதாகவே விளங்கும். சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த மாடலின் முழுமையான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. வருகின்ற ஜூலை 13 ந்…