Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

சுமார் 6 மணி நேரம் , 165.04 கீமி தொடர்ந்து ட்ரிஃப்டிங் என உலகின் மிக நீளமான டிரிஃப்டிங் சாதனையை தென் ஆப்பிரிக்க மோட்டார் பத்திரிகையாளர் ஜெஸ்ஸி ஆடம்ஸ் படைத்துள்ளார். கின்னஸ் புத்தகத்தில் இவருடைய டிரிஃப்டிங் சாதனையை இடம்பெற உள்ளது. டொயோட்டா 86 தென் ஆப்பிரிக்கா நாட்டில் அமைந்துள்ள ப்ரிட்டோரியா நகரில் உள்ள  ஜெரோடெக் சோதனை டிராக்கில் உள்ள வட்ட வடிவ சறுக்கலில் ஜெஸ்ஸி ஆடம்ஸ் எனும் தென்ஆப்பிரிகா மோட்டார் பத்திரிக்கையாளர் டொயோட்டா 86 கார் வாயிலாக தொடர்ந்து 5 மணி நேரம் 46 நிமிடங்கள் டிரிஃப்டிங் செய்து 1000 முறை லேப்பை சுற்றி வந்துள்ளார். இதனை நேரடியாக கின்னஸ் மையம் பதிவு செய்துள்ள நிலையில் மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட 1000 லேப் சுற்றுகளில் 48 லேப்களை நிராகரித்து 952 லேப்களை கின்னஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. சராசரியாக இந்த காரின் வேகம் மணிக்கு 29 கிமீ ஆக இருந்தது. கூடுதலான பெட்ரோல் டேங்க் வசதி மற்றும் டயர் இருப்பு…

Read More

பல்வேறு தொழிற்நுட்பங்கள் ஆட்டோமொபைல் துறையில் நிகழ்ந்து வரும் நிலையில் டயர் தேய்மானத்தை அறியும் வகையில் பிரின்டேட் சென்சார்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் வாயிலாக டயர் தேய்மானத்தை இலகுவாக அறிந்து கொள்ளலாம். பிரின்டேட் சென்சார் பல்வேறு நுட்பங்கள் கார் கண்கானிப்பை மேற்கொண்டாலும் டயர் சார்ந்த அம்சங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுகின்ற டயர் தேய்மானம் மற்றும் மாற்ற வேண்டிய காலகட்டத்தை அறிய உதவும் வகையில் அமெரிக்காவின் டியூக் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் டயர்களில் மிகச்சிறிய அளவில் பொருத்தும் வகையிலான பிரின்டேட் உணரிகளை உருவாக்கியுள்ளனர். இந்த உணரிகள் வாயிலாக ஒவ்வொரு மில்லிமீட்டர் தேய்மானத்தையும் மிக துல்லியமாக, அதாவது 99 சதவிகிதம் மிகச்சரியாக கணிக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர். இந்த உனரிகளை ஆராய்ச்சியாளர்கள் மெட்டாரில் கார்பன் நானோடியூப் வாயிலாக நானோ அளவுகளில் குறிப்பிடப்படும் விட்டத்தில் ஒரு பில்லியன் மீட்டர் அளவில் அதாவது மிகச்சிறிதான உருளை போல வடிவமைத்துள்ளனர். எவ்வாறு நுட்பம் செயல்படுகின்றது என்றால் உருவாக்கப்பட்டுள்ள சென்சார்களில் உள்ள இரண்டு சிறிய…

Read More

பியாஜியோ வெய்கிள் இந்தியா நிறுவனத்தில் புதிய இலகுரக வர்த்தக வாகனம் பியாஜியோ போர்ட்டர் 700 ரூ. 3.31 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய போர்ட்டர் 600 மாடலுக்குமாற்றாக வெளியாகியுள்ளது. பியாஜியோ போர்ட்டர் 700 புதிய போர்ட்டர் 700 மினிடிரக் மாடலில் 14 ஹெச்பி ஆற்றல் மற்றும் 40 என்எம் டார்க்கினை அதிகபட்சமாக வெளிப்படுத்தும் 625சிசி ஒற்றை சிலிண்டர் பிஎஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எல்சிவி மைலேஜ் லிட்டருக்கு 26 கிமீ என வழங்கப்பட்டுள்ளது. போர்ட்டர் சிறிய டிரக்கின் நீளம் 3544 மிமீ, அகலம் 1460மிமீ மற்றும் உயரம் 1738 மிமீ ஆகும். 30 சதுர அடி பரப்பினை கொண்ட லோடிங் செய்யும் பரப்பளவின் நீளம் 1950மிமீ மற்றும் அகலம் 1400மிமீ கொண்டுள்ளது. 218 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்ற போர்ட்டர் 700 டிரக்கின் பேலோடு 700 கிலோகிராம் ஆகும்.…

Read More

இன்று முதல் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து நாளைய அதாவது ஜூன் 17, 2017 தேதிக்கான பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஜூன் 16ந் தேதி அதாவது இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.68.02, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.41 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.26 பைசாவும்,  டீசலுக்கு 0.18 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் 17ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.76, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.23 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.

Read More

42 ஆண்டுகால பாரம்பரியத்தை பெற்ற ஃபோக்ஸ்வேன் போலோ காரின் 6 வது தலைமுறை 2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய போலோ கார் அற்புதமான டிசைனுடன் அசத்தலான வசதிகளுடன் களமிறங்கியுள்ளது.  2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக செயல்படுகின்ற ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய போலோ முந்தைய காரை விட கூடுதலான அளவுகள் மற்றும் வசதிகளுடன் ஸ்டைலிசாக வந்துள்ளது. தற்போது விற்பனையில் உள்ள கார் 8 வருடங்களுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட மாடலாகும். டிசைன் முந்தைய PQ25 பிளாட்ஃபாரத்தலிருந்து மாறுபட்டு ஃபோக்ஸ்வேகனின் MQB A0 பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய போலோ கார் சக்திவாய்ந்த ஜிடிஐ , ஸ்போர்ட்டிவ் ஆர்-லைன் மற்றும் சாதாரன போலோ என மூன்றிலுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய போலோ கார் 4053 மிமீ நீளமும், 1446 மிமீ உயரமும் மற்றும் 1751 மிமீ அகலமும் கொண்டதாகும்.இதன் வீல் பேஸ் 2564 மிமீ ஆகும். இது முந்தைய மாடலுடன் ஒப்பீடுகையில்…

Read More

இன்றைய உலகின் ஆடம்பர சொகுசு வாகனங்களின் மிக முக்கியமான ஒன்றும் நீண்ட கால பாரம்பரியம் மற்றும் ஆட்டோமொபைல் உலகை வடிவமைத்தவர்களான காட்லீஃப் டைம்லர் மற்றும் கார்ல் பென்ஸ் என இருவரின் கடின உழைப்பில் உருவான நிறுவனமே இன்றைய டைம்லர் ஏஜி குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற மெர்சிடிஸ் எவ்வாறு இணைந்தது அதன் பின்னணி என்ன ? மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தை பற்றி அதிகம் அறிந்திராத சுவாரஸ்யங்களை இங்கே காணலாம்  ! காட்லீஃப் டைம்லர் படம் கார்ல் பென்ஸ் படம் மெர்சிடிஸ்-பென்ஸ் டைம்லர் ஏஜி குழுமத்தின் கீழ் மெர்சிடிஸ்-பென்ஸ், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி, மெர்சிடிஸ்-மேபக், பாரத்பென்ஸ், ஸ்மார்ட் ஆட்டோமொபைல்ஸ், மிட்சுபிஷி ப்யூசோ, தாமஸ் பில்ட் பஸ் , சீட்ரா மற்றும் எம்வி அகுஸ்டா மோட்டார் சைக்கிள் போன்ற நிறுவனங்களை நேரடியான பிராண்டு உரிமையாளராக விளங்குகின்றது. 1883 ஆம் ஆண்டு உருவான கார்ல் பென்ஸ் நிறுவனமும் 1890 ஆம் ஆண்டு உருவான டைம்லர் (காட்லீஃப் டைம்லர் மற்றும் வில்ஹெல்ம் மேபேக் கூட்டணி ) நிறுவனமும்…

Read More