கடந்த மே 16-ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட்ட மாருதி சுசுகி டிசையர் காரில் ஸ்டீயரிங் அசெம்பிளி பகுதியில் கோளாறு உள்ளதால் விற்பனை செய்யப்பட்ட அனைத்து மாடல்களுக்கும் டீலர்களின் வாயிலாக ஸ்டீயரிங் அசெம்பிளி மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாருதி டிசையர் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள மூன்றாவது தலைமுறை டிசையர் கார் மே 16ந் தேதி வெளியிடப்பட்டு தற்போது 50,000 க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ள நிலையில் புதிய டிசையரின் ஸ்டீயரிங் அசெம்பிளி பாகத்தில் பிரச்சனைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட 2017 மாருதி டிசையரின் அனைத்து கார்களிலும் இந்த பிரச்சனை இருப்பதாக டீம் பிஹெச்பி உறுப்பினர் பதிவு செய்துள்ளார். எனவே டீலர்களுக்கு புதிய ஸ்டீயரிங் அசெம்பிளி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் விரைவில் இதுகுறித்தான அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிசையர் கார் எஞ்சின் விபரம் 1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 113 என்எம் டார்க்…
Author: MR.Durai
அமெரிக்காவின் பிரசத்தி பெற்ற மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் நுழைவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியுள்ளாதால் விரைவில் இது தொடர்பான அதிகார்வப்பூர்வ அறிக்கை வெளியாகலாம். இந்தியாவில் டெஸ்லா இந்த வருடத்தின் தொடக்கம் முதலே டெஸ்லா இந்தியா வருகை குறித்து பல்வேறு விதமான கேள்விகளை ட்விட்டர் தளங்களில் பதிவாகி வருகின்ற நிலையில் சில வாரங்களுக்கு முன்னதாக உள்ளூர் உற்பத்தி கட்டாயம் என்றிருந்தால் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தவறாக புரிந்து கொண்டதற்கு விளக்கமளித்திருந்த மேக் இன் இந்தியா டிவிட்டர் செய்தியை தொடர்ந்து இன்று ஜஸ்வீர் சிங் என்வரின் கேள்விக்கு எலான் மஸ்க் தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதன் டிவிட்டர் விபரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. https://twitter.com/elonmusk/status/875070931537981441 இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கார்களுக்கு பல்வேறு விதமான வரி முறை உள்ள நிலையில் முழுமையாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்ற கார்களுக்கு 100 – 120 சதவிகித வரி விதிப்பு நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.…
ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்களை மாதம் ஒரு முறை 750 ரூபாய் மதிப்புள்ள தலைக்கவசத்தை வெறும் 9 ரூபாய்க்கு டிரூம் (Droom) தளம் விற்பனை செய்து வருகின்றது. வாங்க இங்கே க்ளிக் செய்க – https://www.droom.in/get-set-helmet ஹெல்மெட் வாங்கலாம் டெல்லியைச் சேரந்த டிரூம் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யும் டீலராக செயல்படுகின்றது. ஐஎஸ்ஐ தர முத்திரை பதித்த ஹெல்மெட் மட்டுமே விற்பனை செய்து வருகின்றது. மாதம் ஒரு முறை மட்டுமே இந்த சலுகையை வழங்குகின்றது. ஹெல்மெட் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெல்லியைச் சேர்ந்த டிரூம் எனும் பயன்படுத்திய பழைய வாகனங்களை விற்பனை செய்து வரும் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் முதல் மாதம் ஒரு முறை ரூபாய் 9 விலையில் ஹெல்மெட் விற்பனை செய்கின்றது. ஐஎஸ்ஐ தர முத்திரை சான்றிதழ் பெற்ற இந்த ஹெல்மெட்கள் விலை ரூபாய் 750 ஆகும். தலைக்கவசம் அணிவது குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலே இது போன்ற…
வரும் ஜூலை 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல் விலை மாற்றியமைக்கப்படும். காலை 6 மணிக்கு பெட்ரோல் விலை டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 16 இன்று பெட்ரோல் பங்கு ஸ்டிரைக் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் நள்ளிரவு 12 மணிக்கு அமலாகும் புதிய விலை மாற்றம் பகலில் நடைபெற வேண்டும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தினமும் காலை 6 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. மத்திய அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது விலை நிர்ணய மாற்ற நேரம், மற்றும் பேராட்டம் வாபஸ் ஆகியவற்றில் உடன்பாடு ஏற்பட்டது.
வரும் ஜூலை 1ந் தேதி முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட உள்ளதால் பஜாஜ் ஆட்டோ தனது பைக்குகளுக்கு ரூ.4500 வரை அதிகபட்சமாக சலுகைகளை அறிவித்துள்ளது. பஜாஜ் பைக்குகள் விலை ஜிஎஸ்டி வரி என்றால் என்ன ? அதாவது நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக நாட்டில் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி வசூலிக்கப்படும். ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் 1,211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. 5,% 12%, 18%, மற்றும் 28% என்ற சதவிகித அடிப்படையிலேயே நான்கு விதமான வரிகள் விதிக்கப்பட உள்ளன. ஆட்டோமொபைல் துறை சார்ந்த வாகனங்கள், மோட்டார் சைக்கிள் , தனிநபர் பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மற்றும் சொகுசு படகுகள் போன்றவற்றுக்கு 28 சதவிகித வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.…
மேட் இன் இந்தியா பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் சென்னையில் அமைந்துள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஜூன் 29ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. 2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 7வது தலைமுறை 5 சீரிஸ் கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CLAR பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாகும். சர்வதேச அளவில் கடந்த வருட இறுதியில் வெளிப்படுத்தப்பட்ட மாடல் வரும் ஜூன் 29ந் தேதி விற்பனைக்கு கிடைக்க உள்ளது. புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 520d மற்றும் 530d என இருவகையான டீசல் ஆப்ஷனுடன் 530i பெட்ரோல் வேரியன்ட் மாடலும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 190 ஹெச்பி ஆற்றலுடன் 400 என்எம் டார்க்கினை வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 520d மாடலில் இடம்பெற்றிருக்கும். 265 ஹெச்பி ஆற்றலுடன் 620 என்எம் டார்க்கினை வழங்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் 520d மாடலில் இடம்பெற்றிருக்கும். இந்த இரு மாடல்களிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் ஸ்டெப்ட்ரானிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். இது தவிர பெட்ரோல்…