பல்வேறு தொழிற்நுட்பங்கள் ஆட்டோமொபைல் துறையில் நிகழ்ந்து வரும் நிலையில் டயர் தேய்மானத்தை அறியும் வகையில் பிரின்டேட் சென்சார்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் வாயிலாக டயர் தேய்மானத்தை இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

பிரின்டேட் சென்சார்

பல்வேறு நுட்பங்கள் கார் கண்கானிப்பை மேற்கொண்டாலும் டயர் சார்ந்த அம்சங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுகின்ற டயர் தேய்மானம் மற்றும் மாற்ற வேண்டிய காலகட்டத்தை அறிய உதவும் வகையில் அமெரிக்காவின் டியூக் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் டயர்களில் மிகச்சிறிய அளவில் பொருத்தும் வகையிலான பிரின்டேட் உணரிகளை உருவாக்கியுள்ளனர்.

இந்த உணரிகள் வாயிலாக ஒவ்வொரு மில்லிமீட்டர் தேய்மானத்தையும் மிக துல்லியமாக, அதாவது 99 சதவிகிதம் மிகச்சரியாக கணிக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர். இந்த உனரிகளை ஆராய்ச்சியாளர்கள் மெட்டாரில் கார்பன் நானோடியூப் வாயிலாக நானோ அளவுகளில் குறிப்பிடப்படும் விட்டத்தில் ஒரு பில்லியன் மீட்டர் அளவில் அதாவது மிகச்சிறிதான உருளை போல வடிவமைத்துள்ளனர்.

எவ்வாறு நுட்பம் செயல்படுகின்றது என்றால் உருவாக்கப்பட்டுள்ள சென்சார்களில் உள்ள இரண்டு சிறிய எலக்ட்ரோட்டுகள் மிக அருகாமையிலே பொருத்தப்பட்டு மின் புலத்தை உருவாக்கி உலோக கடத்திகள் வாயிலாக பெற வழி வகுகின்றது. ஒரு மின் அழுத்தம் உருவாக்கும் பொழுது மற்றொன்று தரையின் பகுதியில் பெறுகின்றது, இரு மின் அழுத்தம் காரணமாக பெறுகின்ற எலக்ட்ரோடுகள் பெறுகின்றது.

இதன் வாயிலாக டயர்தேய்மானம் மற்றும் மாற்ற வேண்டிய சூழ்நிலை போன்றவற்றை அறிய முடிகின்றது. இதனை கார்களில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் வாயிலாக பெறலாம்.