Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடலாக  விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக பெயர் ஹூண்டாய் கோனா என பெயரிடப்பட்ட டீசர் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஹூண்டாய் கோனா எஸ்யூவி ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி மாடலுக்கு கீழாக நிலை நிறுத்தப்பட உள்ளது. கோனா மாடல் இந்தியாவில் வருகை குறித்த விபரங்கள் இல்லை அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் அமைந்துள்ள சிறிய நகரத்தின் பெயரே கோனா ஆகும். ஏப்ரல் 14ந் தேதி முதல் நியூயார்கில் தொடங்க உள்ள ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த மாடல் , அமெரிக்காவில் அமைந்துள்ள ஹவாய்  மாநிலத்தில் அமைந்துள்ள சிறிய நகரத்தின் பெயர் கோனா என்பதின் பெயரேயே பெற்றுள்ளது. சர்வதேச அளவில் டொயோட்டா சி-எச்ஆர்,  ஹோண்டா HR-V  மற்றும் மஸ்தா MX-3 போன்ற எஸ்யூவி மாடல்களுக்கு சவாலாக அமைய உள்ள இந்த எஸ்யூவி ஹூண்டாய் டூஸான் மாடலுக்கு கீழாக க்ரெட்டா எஸ்யூவிக்கு இணையாகவோ அல்லது…

Read More

ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமான கியா மோட்டார்ஸ் புதிய கியா ஸ்டோனிக் எஸ்யூவி மாடலின் டிசைன் வரைபடங்களை வெளியிட்டுள்ளது. கியா ஸ்டானிக் எஸ்யூவி க்ராஸ்ஓவர் சர்வதேச அளவில் விற்பனை அறிமுகம் செய்யப்பட உள்ளதால் இந்திய சந்தைக்கும் வரும் வாய்ப்புகள் உள்ளது. கியா ஸ்டோனிக் எஸ்யூவி இந்த ஸ்டோனிக் எஸ்யூவி சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் டீஸர் வெளியிட்ட கோனா எஸ்யூவி காரின் அதே பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வருகின்ற செப்டம்பரில் நடைபெற உள்ள பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோ கண்காட்சியில் காட்சிக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற ஸ்டோனிக் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் அடுத்த ஆண்டின் தொடக்கம் முதல் விற்பனைக்கு கிடைக்கலாம். தோற்ற அமைப்பில் கியா நிறுவனத்தின் பாரம்பரிய புலி மூக்கினை போன்ற கிரில் அமைப்புடன் கூடிய மிக நேர்த்தியான ஹெட்லேம்ப் பெற்று செங்குத்தான பனிவிளக்குஅமைப்புடன் கூடிய தேன்கூடு அமைப்பிலான பம்பர் கிரில் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் தட்டையான எல்இடி டெயில் விளக்குகள்,ஸ்டைலிசான…

Read More

ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட முதல் மினி பைக் மாடலான ஹோண்டா நவி மினிபைக் ஆரம்ப கடத்தில் அமோக வரவேற்பினை பெற்றாலும் கடந்த சில மாதங்களாகவே சொற்ப எண்ணிக்கையிலே விற்பனை ஆகி வருகின்றது. நவி மினிபைக் 2016ல் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட நவி மினி பைக் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரின்  டிசைன் தாத்பரியங்களை கொண்டு மிக குறைந்த விலையில் வித்தியாசமான அமைப்பினை பெற்ற மாடலாக வெளியிடப்பட்டது. மோட்டோ ஸ்கூட்டர் மாடலில் 7.8 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 109.2cc என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டரில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் காப்புரிமை பெற பெற்ற ஹோண்டா ஈக்கோ டெக்னாலாஜி நுட்பம் பெற்ற என்ஜினாகும். இதில் பவரை சக்கரங்களுக்கு எடுத்து செல்வதற்கு சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் வருடத்தில் 50,000 விற்பனை இலக்கை நிர்ணயம் செய்திருந்த ஹோண்டா மார்ச் 2017 முடிவில் 60,000 என்ற விற்பனை…

Read More

கடந்த 2014 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த இரண்டாவது தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் கூடுதல் வசதிகள் மற்றும் தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றதாகவும், புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாகவும் வரவுள்ளது. 2017 மஹிந்திரா ஸ்கார்பியோ ஸ்கார்பியோ காரில் இரண்டு விதமான 2.2 லிட்டர் எம்ஹாக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 125 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் முறுக்கு விசை 280 என்எம் கொண்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த என்ஜினாகவும் மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகின்றது. மேலும் பேஸ் மாடல் எஸ் 2 காரில் மட்டும் 2.5 லிட்டர் என்ஜின் பொருத்தியுள்ளனர். இதன் ஆற்றல் 75 பிஎச்பி ஆகும். இதன் முறுக்குவிசை 200என்எம் ஆகும். இரண்டு என்ஜினிலும் 5 வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது விற்பனையிலிருந்த 6 வேக டிசிஐ ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் நீக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் 1.99 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 6…

Read More

சமீபத்தில் பஜாஜ் டாமினார் 400 பைக் ரூ. 1000 வரை விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள அனைத்து பைக்குகளும் ரூ.1000 வரை சராசரியாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. பல்சர் பைக்குகள் விலை உயர்வு பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள LS 135 முதல் பல்சர் 220 வரை உள்ள 6 மாடல்களின் விலையிலும் கூடுதலாக ரூ.1000 வரை உயர்த்தப்பட்டிருந்தாலும், தோற்ற அமைப்பு பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. பல்சர் பைக்குகளின் புதிய விலை பட்டியல் பின் வருமாறு ;- 2017 Pulsar RS200 பல்சர் RS200 non-ABS ரூ.  1,25,272 பல்சர் RS200 ABS ரூ. 1,37,486 2017 Pulsar NS200 பல்சர் NS200 ரூ.  99,391 2017 Pulsar AS200 பல்சர் AS200 ரூ.  96,671 2017 Pulsar AS150 பல்சர் AS150 ரூ.  82,880 2017 Pulsar 220F பல்சர் 220F ரூ.…

Read More

சென்னையில் அமைந்துள்ள டைம்லர் ஏஜி நிறுவனத்தின் பாரத் பென்ஸ் டிரக் தயாரிப்பு ஆலையில் புதிய விற்பனை இலக்கை கடந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 50,000 டிரக்குகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. பாரத் பென்ஸ் டிரக் டைம்லர் பென்ஸ் குழுமத்தின் இந்தியாவில் பாரத் பென்ஸ் என்ற பிராண்டு பெயரில் 2012 ஆம் ஆண்டில் சென்னை ஒரகடத்தில் அமைந்துள்ள ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டு முதல் 10,000 விற்பனை இலக்கை 2014 ஆம் ஆண்டில் முதன்முறையாக கடந்தது. தற்போது மூன்று ஆண்டுகளுக்கு 40,000 டிரக்குகளை விற்பனை செய்து 4928 TT ஹெவி டூட்டி டிரக் மாடலை 50 ஆயிரமாவது டிரக்காக ஹைத்திராபாத்தில் டெலிவரி கொடுத்துள்ளது. இந்தியாவில் பிஎஸ் 4 தர மாசு கட்டுப்பாடு எஞ்சின்களை பெற்றுள்ள புதிய பாரத் பென்ஸ் டிரக்குகள் மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வெளிப்படுத்தக்கூடிய மாடலாகவும், குறைந்த விலை பராமரிப்பு செலவுகொண்டதாக அமைந்துள்ளதாக விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் பிரிவு துனை தலைவர்…

Read More