Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

அடுத்த சில மாதங்களில் இந்தியா வரவுள்ள ரெனால்ட் காப்டூர் எஸ்யூவி காரின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் வெளியாகியுள்ளது. பிரேசில் சந்தையில் விற்பனையில் உள்ள மாடல் வயது வந்தோர் பாதுகாப்பில் 4 நட்சத்திரமும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 5க்கு 3 நட்சத்திர பாதுகாப்பினையும் பெற்றுள்ளது. ரெனோ காப்டூர் – லத்தீன் கிராஷ் டெஸ்ட் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் புதிய ரெனோ காப்டூர் எஸ்யூவி பண்டிகை காலத்துக்கு முன்னதாக விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்ட மாடல் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று அசத்தியுள்ளது. சோதனை செய்யப்பட கேப்டூர் மாடலில் 4 காற்றுபைகள் உள்பட எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் பெற்ற மாடலாக விளங்குகின்றது. இந்த மாடல் லத்தீன் கிராஷ்டெஸ்ட் சோதனையில் வயது வந்தோர் பாதுகாப்பில்  34 புள்ளிகளுக்கு 30.27 பெற்று 4 நட்சத்திரத்தை பெற்றது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 33.68 பெற்றதால் 3 நட்சத்திரத்தை பெற்றுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஏர்பேக்குகள்…

Read More

வருகின்ற ஜூன் 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் பெட்ரோல் , டீசல் விலை தினந்தோறும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாறுதலுக்கு ஏற்ப தினமும் மாறுகின்ற வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளது. தினமும் பெட்ரோல் டீசல் விலை தற்போது பெட்ரோல், டீசல் விலை மாற்றம் 15 நாளுக்கு ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கடந்த மே 1ந் தேதி முதல் புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர்,  ஜெம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் என மொத்தம் 5 மாநிலங்களில் உள்ள 200 பங்க்குகளில் தினமும் மாறும் பெட்ரோலிய பொருட்களின் விலையை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்பொழுது இந்த திட்டத்தின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து தயாரிக்கபட்டுள்ள அடிப்படையில் ஜூன் 16ந் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளிலும் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவுகின்ற கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

Read More

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற செடான் ரக கார்களில் முன்னணி மாடலாக விளங்கும் மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் மாடலின் புதிய மாருதி சியாஸ் செடான் கார் சோதனை ஓட்டத்தில் ஈடுப்பட்டு வருவதனால் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. 2017 மாருதி சியாஸ் மாருதியின் சியாஸ் செடான் காரின் மேப்படுத்தப்பட்ட மாடல் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வருவதனை உறுதி செய்யும் வகையில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்கள் வெளியாகியுள்ளது. புதிய சியாஸ் காரில் கூடுதலான வசதிகள் மற்றும் தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டதாக மட்டுமே வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக முகப்பில் எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்ற புராஜெக்டர் முகப்பு விளக்குகள் ,பனி விளக்கு அறையில் சிறிய அளவிலான மாற்றங்கள் மற்றும் பின்புற அமைப்பில் டெயில் விளக்கில் சில மாற்றங்களை கொண்டிருக்கலாம். இதுதவிர இன்டிரியர் அமைப்பு பலேனோ காரில் உள்ளதை போன்ற இன்ஃபோடெயின்மென்ட்…

Read More

இந்தியா யமஹா மோட்டார்ஸ் நிறுவனத்தின் யமஹா FZ25 நேக்டூ ஸ்டீரிட் ஸ்போர்ட்டிவ் பைக்கின் அடிப்படையிலான முழுதும் ஃபேரிங் செய்யப்பட்ட ஃபேஸர் 250 பைக்கின் முழு உற்பத்தி நிலை சாலை சோதனை ஓட்ட படங்களை வெளியாகியுள்ளது. யமஹா ஃபேஸர் 250 ஃபேஸர் 250 என அழைக்கப்பட உள்ள இந்த பைக் மாடல் சமீபத்தில் விற்பனைக்கு வந்த யமஹாவின் எஃப்இசட் 25 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடலாக விளங்கும். இந்த பைக்கில் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. முதன்முறையாக வெளியாகியுள்ள பேஸர் 250 பைக்கின் முகப்பு தோற்ற அமைப்பில் பெரும்பாலான அமைப்பு  FZ25 பைக்கில் பெறப்பட்ட அதே அமைப்புடன் முழுவதும்அலங்கரிக்கப்பட்ட மாடலாக காட்சி தருவதுடன் முன்பக்க வைசர் சற்று பெரிதாக காட்சி தருகின்றது.…

Read More

உலகளவில் பிரசத்தி பெற்று விளங்குகின்ற பிராண்டுகளில் அதிக மதிப்புமிக்க டாப் 100 பிராண்டுகளில் 10 மோட்டார் பிராண்டுகளும் இடம் பிடித்துள்ளது. டொயோட்டா நிறுவனம் மதிப்புமிக்க பிராண்டு பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. மதிப்புமிக்க மோட்டார் பிராண்டுகள் – 2017 உலகின் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பாளரான டொயோட்டா நிறுவனம் சர்வதேச அளவில் அதிக மதிப்புமிக்க பிராண்டாக அமெரிக்கா டாலர் $ 28,660 மில்லியன் மதிப்பை பெற்று விளங்குகின்றது. ஆனால் பிராண்டின் மதிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் 3 சதவிகித வீழ்ச்சி அடைந்துள்ளது. பட்டியலில் மிக முக்கியமான மாற்றமாக மின்சார் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா கடந்த ஆண்டை விட 32 சதவிகித வளர்ச்சி பெற்ற 2016ல் 10வது இடத்தில் இருந்த இந்த பிராண்டு தற்போது 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. போர்ஷே மற்றும் லேண்ட்ரோவர் போன்ற நிறுவனங்களும் பட்டியலில் இணைந்துள்ள நிலையில் இரண்டாவது இடத்தில் உள்ள பிஎம்டபிள்யூ பிராண்டு மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பீடுகையில் 8…

Read More

இந்தியாவின் யுட்டிலிட்டி ரக வாகன தயாரிப்பாளரின் முன்னணி நிறுவனமான மஹித்திரா நிறுவனத்தின்  எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடலின் மேம்படுத்தப்பட்ட கார் கூடுதலான பவர் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டதாக விற்பனைக்கு வரவுள்ளது. 2017 மஹிந்திரா எக்ஸ்யூவி500 புதிய இனோவா க்ரிஸ்டா மற்றும் டாடா ஹெக்ஸா போன்ற மாடல்களின் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் சவாலான மாடலாக விளங்கி வருகின்ற எக்ஸ்யூவி500 காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் கடந்த 2015 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வரவுள்ள புதிய மேம்படுத்தப்பட்ட மாடலில் விற்பனையில் உள்ளதை விட கூடுதலாக 20 ஹெச்பி வரை பவரை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 140 ஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்ற 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு 330 என்எம் டார்க் வரை வெளிப்படுத்துகின்றது. இதன் ஆற்றல் 20 ஹெச்பிக்கு மேல் அதிகரிக்கப்பட்டு 160 ஹெச்பி எட்டலாம் அல்லது அதற்கு மேல் கூடுதலாக அமையலாம் என…

Read More