தென் ஆப்பிரிக்காவில் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி அடிப்படையிலான டூஸான் ஸ்போர்ட் எஸ்யூவி கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்றதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டூஸான் ஸ்போர்ட் எஸ்யூவி சாதாரன மாடலை விட கூடுதலான தோற்ற மாற்றங்களை பெற்ற மாடலாக வந்துள்ள டூஸான் ஸ்போர்ட்டிவ் எஸ்யூவி மாடலில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் வழங்கப்படவில்லை. வெளிப்படுத்தப்பட்டுள்ள ஸ்போர்ட்டிவ் டூஸான் மாடலில் முன்பக்க , பின்பக்கம் மற்றும் பக்கவாட்டு அமைப்பு போன்றவற்றில் கூடுதலான கிட்களை பெற்றுள்ள இந்த மாடலில் 19 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. க்ரோம் பூச்சு கொண்ட எக்ஸ்ஹாஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இசியூ வாயிலாக சாதாரன மாடலை விட 27 ஹெச்பி கூடுதல் பவர் மற்றும் 30 என்எம் கூடுதல் டார்க் வெளிப்படுத்தக்கூடிய மாடலாக வந்துள்ள டூஸான் பெட்ரோலில் 201 ஹெச்பி பவர் மற்றும் 295 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் சேர்க்கப்படவில்லை.…
Author: MR.Durai
சமீபத்தில் டெல்லி போலீஸ் என பேட்ஜ் ஸ்டிக்கரிங் செய்யப்பட்ட ஆஸ்டன் மார்ட்டின் ரேபீட் சொகுசு கார் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த காரினை உண்மையிலே டெல்லி போலீஸார் வாங்கியுள்ளனரா ? டெல்லி போலீஸ் கார் இந்தியாவில் ரூ.4.10 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகின்ற ஆஸ்டன் மார்டின் ரேபீட் ஸ்போர்ட்ஸ் காரில் டெல்லி போலீஸ் என பேட்ஜ் செய்யப்பட்டு டயல் 100 எனவும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த படங்கள் இணையத்தில் வெளியாகியதை தொடர்ந்து உண்மையா என்ற கேள்வியும் எழுந்தது. தற்போது அதற்கான விடையும் வெளியாகியுள்ளது. அதாவது பாலிவுட் நடிகர் சுசந்த் சிங் ராஜ்புட் மற்றும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இருவரும் இணைந்து நடிக்கும் டிரைவ் என்ற திரைப்படத்திற்காக இந்த கார் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. எனவே இது ரியல் போலீஸ் கார் அல்ல ரீல் போலீஸ் கார் என தெரியவந்துள்ளது. 470 ஹெச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 5.2 லிட்டர் வி10 எஞ்சினை பெற்ற ஆஸ்டன் மார்ட்டின் ரேபீட்…
கடந்த மூன்று ஆண்டுகளில் கார் சுத்தம் செய்வதன் வாயிலாக இந்தியாவில் 61 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்துள்ளாதாக நிசான் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. எவ்வாறு இந்த நுட்பம் நிசான் நிறுவனத்துக்கு சாத்தியமானது என காணலாம். நிசான் இந்தியா இந்தியாவில் செயல்பட்டு வரும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிசான் இந்தியா பிரிவு தங்களுடைய கார் சர்வீஸ் மையங்கள் வாயிலாக 2014 முதல் கார் ஃபோம் வாஷ் எனப்படும் நுரையால் கார் கழுவும் நுட்பத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த நுட்பத்தினால் கார் ஒன்றுக்கு சராசரியாக 90 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடிவதாக நிசான் தெரிவிக்கின்றது. எவ்வாறு எனில் சாதாரன முறையில் ஒரு முழு காரை கழுவினால் சுமார் 160 லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படுகின்றதாம், இதுவே நிசான் அறிமுகம் செய்துள்ள நவீன நுரை வழியிலான கார் கழுவும் முறையினால் தண்ணீர் பயன்பாடு 45 சதவிகிதம் குறைகின்றதாம். இந்த நுட்பத்தினால் காரின் பெயின்ட் உள்பட எந்தவொரு…
உலக மோட்டார் வாகன துறையில் பல்வேறு விதமான புதிய நுட்பங்கள் இடம்பெற்று வருகின்ற சூழ்நிலையில் அமெரிக்காவின் நாசா அமைப்பால் உருவாக்கப்பட்டு மோட்டார் வாகன துறையின் முக்கிய பயன்பாடாக மாறிப்போன 5 கண்டுபிடிப்புகளை இங்கே காணலாம்..! மோட்டார் வாகனங்கள் நாசா என அழைக்கப்படுகின்ற அமெரிக்காவின் தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பின் சார்பில் விண்வெளி சார்ந்த செயல்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட அமைப்புகள் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நாசாவினால் உருவாக்கப்பட்டு மோட்டார் தயாரிப்பு துறையில் பயன்படுகின்ற முக்கியமானவற்றை அறிந்து கொள்ளலாம். 1. கார்பன் ஃபைபர் இன்றைய நவீன கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் போன்றவற்றில் எடை குறைப்பு மற்றும் வலுவான கட்டமைப்பு போன்ற காரணங்களுக்கு பெரிதும் கார்பன் ஃபைபர் மோட்டார் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கார்பன் ஃபைபர் கொண்டு உருவாக்கப்பட்ட லம்போர்கினி செஸ்டோ கார் 2. ஜிபிஎஸ் எங்கேயும் யாருடைய வழிகாட்டுதல் துனையுமின்றி பயணிக்க மிக எளிமையாக அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தப்படுகின்ற ஜிபிஎஸ் எனும் குளோபல்…
டிரைவிங் செய்யும்பொழுது அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவை ஏற்பதனாலே பெரும்பாலான விபத்துகள் ஏற்படுவதனை தடுக்கும் வகையில் ஆப்பிள் தன்னுடைய புதிய ஐஓஎஸ் 11 தளத்தில் டூ நாட் டிஸ்டர்ப் வைல் டிரைவிங் என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. டூ நாட் டிஸ்டர்ப் வைல் டிரைவிங் ஐஓஎஸ் 11 இயங்குதளத்தில் Do Not Disturb While Driving (DNDWD) என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ள இந்த வசதியின் வாயிலாக ஐபோன் மற்றும் ஐபேட் பயனாளர்கள் தங்களுடைய ஸ்மார்ட் கருவிகளின் வாயிலாக கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆப்பிள் கார் ப்ளே வாயிலாக பயன்படுத்தினால் வாகனத்தின் நகருதலை உணர்ந்து செயல்படும் வகையிலான DNDWD அழைப்புகள் மற்றும் மெசேஜ் போன்றவற்றை முற்றிலுமாக நிராகரிக்க வழி வகுக்கின்றது. வை-ஃபை , புளூடுத் போன்றவற்றின் இணைப்பை பயன்படுத்தினாலே கார் நகருவதனை உணர்ந்தால் உடனடியாக DNDWD மோடினை இயக்குவதற்கான அனுமதியை தானாகவே பெற்று செயல்படும் வகையிலோ அல்லது பயனாளர் விருப்பத்தின் அடிப்படையில் ஐஓஎஸ் 11 தளம் செயல்படும். எனவே…
2030 ஆண்டிற்குள் முழுமையான எலக்ட்ரிக் வாகனங்கள் கொண்ட நாடாக விளங்க வேண்டும் என்ற கொள்கையை செயல்பாட்டுக் கொண்டு வரவுள்ள நமது நாட்டில் நிசான் லீஃப் மின்சார காரை நிசான் அறிமுகம் செய்யவதற்கான பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. நிசான் லீஃப் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்பட பல்வேறு வளர்ந்த சந்தைகளில் மிகுந்த வரவேற்பினை பெற்ற நிசான் நிறுவனத்தின் முழுமையான மின்சார் கார் மாடலாக விளங்கும் நிசான் லீஃப் காரை இந்திய சந்தையில் இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யும் வாய்ப்புகள் உள்ளது. 107 பிஹெச்பி பவரை அதிகபட்சமாக வெளிப்படுத்தக்கூடிய மின்சார மோட்டார் என்ஜினை பெற்ற லீஃப் கார் ஒரு முழுமையான பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டால் அதிகபட்சமாக 170 கிமீ தொலைவு வரை பயணிக்க வகையிலான செயல்திறனை வெளிப்படுத்தும். வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள புதிய தலைமுறை லீஃப் மீன்சார காரை அடிப்படையாக கொண்ட மாடலே…