Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

குறைந்த செலவில் அதிக மைலேஜ் என்ற நோக்கத்தை கொண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள பஜாஜ் ஆட்டோவின் சிஎன்ஜி பைக் மாடலை ஜூலை 5, 2024ல் வெளியிட உள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக பஜாஜ் ஆட்டோ தலைவர் தொடர்ந்து தனது செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வந்த சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் தற்பொழுது உள்ள பெட்ரோல் மாடல்களை விட 50-60 % வரை எரிபொருள் செலவினை குறைக்கும் நோக்கில் தயாரிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். 110-150 சிசி பிரிவில் பல்வேறு மாறுபட்ட ஸ்டைல் பெற்ற இந்த சிஎன்ஜி பைக்குகள் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயங்கும் வகையில் வரக்கூடும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வந்த பல்வேறு மாடல்கள் மாறுபட்ட ஸ்டைலிங் பெற்றிருந்த நிலையிலும், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ள பஜாஜின் சிஎன்ஜி மாடலில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு கம்பைன்டு…

Read More

இந்தோனேசியாவில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா NMax மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டரில் கூடுதலாக டர்போ மற்றும் ஸ்போர்ட் டூரிங் என இரு ரைடிங் மோடுகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில்  ஏரோக்ஸ் 155 விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் என்மேக்ஸ் 155 ஆனது பாரத் மொபைலிட்டி கண்காட்சியிலும் காட்சிக்கு வந்திருந்தாலும், இந்திய அறிமுகத்தை தற்பொழுது வரை யமஹா உறுதிப்படுத்தவில்லை. புதிதாக யமஹா தனது ஸ்கூட்டரில் வெளியிட்டுள்ள டர்போ மோடு கூடுதல் பவரை வெளிப்படுத்தும் வகையில் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் அதிகரிகப்படுவதனால் கூடுதல் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும். 155cc DOHC ஒற்றை சிலிண்டர் லிக்யூடு கூல்டு VVA என்ஜின் ஆனது 14.8 bhp பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.  V- பெல்ட் பெற்ற CVT கியர்பாக்ஸ் பயன்படுத்துகிறது. ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் கூடிய  TFT கிளஸ்ட்டர் மற்றும் எல்இடி ஹெட்லைட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெறுகின்ற யமஹா என்மேக்ஸ் 155 டர்போ…

Read More

எம்.எஸ் தோனியை விளம்பர தூதுவராக நியமித்துள்ள சிட்ரோன் இந்தியா நிறுவனம் தனது C3 ஏர் கிராஸ் மற்றும் C3 காரில் தோனி எடிசன் மாடல் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் தற்போது டீலர்களுக்கு இந்த மாடல் ஆனது வர துவங்கியுள்ளது. சிறப்பு தோனி எடிசனில் இடம் பெற போகின்ற வசதிகள் என்ன என்பதை எல்லாம் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம். விற்பனையில் உள்ள மாடலில் இருந்து சற்று மாறுபட்ட டிசைனை வெளிப்படுத்தும் வகையில் பாடி ஸ்டிக்கரிங் மட்டுமே வெளிப்புறத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏழாம் நம்பர் என்பதை குறிக்கும் ஸ்டிக்கரிங் தோனி பயன்படுத்தி வருகின்ற ஜெர்சியின் எண்ணை குறிக்கின்ற ஏழு என்ற எண் ஆனது தற்பொழுது பக்கவாட்டு பேனல் மற்றும் பின்புறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மற்றபடி டிசைனில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை கூடுதலாக தோனி எடிசன் என்ற பெயரில் எழுத்துக்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இன்டிரியரில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சங்கள் பல்வேறு ஸ்டைலிங் சார்ந்த மேம்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன…

Read More

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஸ்போர்ட்டிவ் ஃபேரிங் ரக கவாஸாகி MY24 நின்ஜா 300 பைக்கின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது. தற்பொழுது நின்ஜாவின் 300 மாடலில் கேண்டி லைம் கிரீன் மற்றும் மெட்டாலிக் மூண்டஸ்ட் கிரே என இரு நிறங்கள் பெற்றுள்ளது. 296சிசி லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்ற பைக்கின் பவர்  38.88bhp மற்றும் டார்க் 26.1Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்று சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது. 179 கிலோ எடையைக் கொண்டுள்ள நின்ஜா 300ல் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் போர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பெனஷனை பெற்று ட்யூப்லெர் டைமண்ட் ஃபிரேம் பெற்றுள்ள மாடலில் 17 அங்குல சக்கரங்களை பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் முன் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக் உள்ளது. இந்நிறுவனத்தின் குறைந்த விலை பேரலல் ட்வீன் சிலிண்டர் கொண்டுள்ள 2024 கவாஸாகி நின்ஜா 300 விலை ரூ.3.43…

Read More

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 150 பைக்கின் பல்வேறு சிறப்பம்சங்களை இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம் இந்தியாவின் மிகவும் பிரபலமான ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற பல்சர் பைக்கில் தற்பொழுதும் கிளாசிக் ஸ்டைலை தக்க வைத்துக் கொண்டிருக்கிற மாடல்களில் ஒன்றாக விளங்குகின்றது. பல்சர் 150 மாடலுக்கு நேரடியாக போட்டியை ஏற்படுத்தும் வகையில் 150 சிசி சந்தையில் கிடைக்கின்ற யமஹா FZ-S சீரியஸ் பைக்குகள், ஹோண்டா யூனிகார்ன் 160, இது தவிர 160சிசி சந்தையில் இருக்கின்ற சில மாடல்களும் இந்த பைக்கிற்கு போட்டியாக அமைந்திருக்கின்றன குறிப்பாக எக்ஸ்ட்ரீம் 160R, அப்பாச்சி ஆர்டிஆர் 160R மற்றும் SP160 போன்ற மாடல்களும் உள்ளன. புதிய பாடி கிராபிக்ஸ் பல்சர் 150 பைக்கில் நீளம், கிரே மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களில் கிடைக்கின்ற மாடலில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ், 150 என்ற எழுத்துக்கள் பெரியதாக பெட்ரோல் டேங்கில் வழங்கப்பட்டுள்ளதால், முந்தைய மாடலில் இருந்து வித்தியாசப்படுத்துகின்றது. மேலும் பல்வேறு…

Read More

பஜாஜ் ஆட்டோவின் குறைந்த விலையில் கிடைக்கின்ற பல்சர் 125 மோட்டார்சைக்கிளின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று ரூ.92,883 ஆரம்ப விலையில் (எக்ஸ்ஷோரூம்) துவங்குகின்றது. பல்சர் NS125 பைக்கினை தொடர்ந்து மேம்பட்ட பாடி கிராபிக்ஸ் மூலம் பெரிய 125 எழுத்துருவினை பெற்றுள்ள பல்சர் 125 மாடலில்  124.45 சிசி ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின்  8,500 ஆர்பிஎம்மில் 11.64 hp  8,500 ஆர்பிஎம்-யில் மற்றும் 11 Nm டார்க்கை வழங்குவதுடன் இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் இணைக்கப்பட்டு, 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் 130 மிமீ டிரம் பிக்குடன் சிபிஎஸ் சேர்க்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது டர்ன் பை டர்ன் நேவிகேஷன், மொபைல் சிகனல், பேட்டரி இருப்பு, கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட்…

Read More