Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

650சிசி சந்தையில் உள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ரெட்ரோ வடிவமைப்பினை பெற்றுள்ள பிஎஸ்ஏ நிறுவன கோல்டு ஸ்டார் 650 மாடலில் இடம்பெற்றுள்ள அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற பிஎஸ்ஏ, ஜாவா மற்றும் யெஸ்டி போன்ற நிறுவனங்களில் ஜாவா, யெஸ்டி பிராண்டு இந்தியாவில் கிடைக்கின்றது. இங்கிலாந்து, ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த பிஎஸ்ஏ பிராண்டினை தற்பொழுது இந்திய சந்தைக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளதாக இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. Gold Star Design தனது ரெட்ரோ வடிவமைப்பினை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற பிஎஸ்ஏ நிறுவனத்தின் கோல்டு ஸ்டார் மாடலில் மிக நேர்த்தியான டியர் டிராப் பெட்ரோல் டேங்க் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து வட்ட வடிவ ஹெட்லைட் அமைப்பு மற்றும் பிஎஸ்ஏ லோகோ டேங்க் இன் மத்தியில் வழங்கப்பட்டு சுமாராக…

Read More

யமஹா நிறுவனம் முன்னணி நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக உள்ள நிலையில், Y-AMT (Yamaha Automated Manual Transmission) எனும் நுட்பத்தின் மூலம் மிக இலகுவாக கியர் ஷிஃப்ட் அனுபவத்தை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Yamaha Automated Manual Transmission என்பது முழுமையாக ஆட்டோமேட்டிக் முறையில் இயங்கவும் அல்லது மேனுவல் முறையில் கியர் ஷிஃப்ட்டை பட்டன் மூலம் மேற்கொள்ளும் வகையில் வழங்கியுள்ளதால், மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக யமஹா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால் மற்றும் கை இணைந்து செயல்பட்டு கியர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டி உள்ள நிலையில், இதற்கு பதிலாக கைகளால் மட்டும் கியர் மாற்றத்தை ஏற்படுத்தவும் அல்லது ஆட்டோமேட்டிக் முறையில் மாற்ற அனுமதிக்கும் பொழுது மற்ற ஸ்போர்ட்டிவ் அனுபவங்களை முழுமையாக பெறவும், கியர் மாற்ற காலினை நகர்த்த வேண்டிய அவசியமில்லாத காரணத்தால் தொடர் வேகத்தை பராமரிக்கவும், வளைவுகளில் சிறப்பான உடல் நிலை மற்றும் எடைப் பங்கீட்டில்…

Read More

மஹிந்திரா கீழ் செயல்படுகின்ற கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் பிஎஸ்ஏ பிராண்டின்  கோல்ட் ஸ்டார் 650 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. 650 சிசி சந்தையில் கிடைக்கின்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு கடும் சவாலினை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக என்ற இண்டர்செப்டார் 650 மாடல் எதிர் கொள்ளும் வகையில் இந்த மாடல் ஆனது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் 650cc பிரிவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் இரட்டை சிலிண்டர் என்ஜினை கொடுத்திருக்கின்றது ஆனால் பிஎஸ்ஏ ஒற்றை சிலிண்டர் என்ஜினை தான் 652 சிசி என்ஜினாக வழங்கி உள்ளது. 652சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட்-கூல்டு எஞ்சின் அதிகபட்ச பவரை 6500ஆர்பிஎம்மில் 45எச்பி , 4000ஆர்பிஎம்மில் 55என்எம் டார்க் வெளிப்படுத்துவதுடன் இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்போக்டூ வீல் பெற்றுள்ள பிஎஸ்ஏ கோல்டு ஸ்டாரில் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் இரண்டு…

Read More

ராயல் என்ஃபீல்டுக்கு சவால் விடுக்கும் வகையில், ஜாவா 350 மாடலில் ஸ்போக் வீல் பெற்ற மாடலை ரூ.1.99 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளதால், தற்பொழுது நான்கு விதமான வகையில் கிடைக்க துவங்கியுள்ளது. 2024 Jawa 350 புதிய ஜாவா 350 பைக்கின் 334சிசி என்ஜின் அறிமுகத்தின் பொழுது விலை ரூ.2.15 லட்சத்தில் துவங்கிய அதிகபட்சமாக ரூ. 2.24 லட்சம் வரை அமைந்திருந்தது. தற்பொழுது ரூ.16,000 வரை விலை குறைவான வேரியண்ட் வெளியாகியுள்ளது. 334cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 22.5 hp பவர் மற்றும் 28.1 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. கிளாசிக் லெஜெண்ட்ஸ் கீழ் செயல்படுகின்ற ஜாவா 350 மாடலில் தற்பொழுது மூன்று புதிய வண்ணங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அவை அப்சிடியன் பிளாக், கிரே மற்றும் டீப் ஃபாரஸ்ட் ஆகும்.  முந்தைய நிறங்களான மெரூன், கருப்பு, வெள்ளை மற்றும் மிஸ்டிக் ஆரஞ்சு…

Read More

யமஹா இந்தியாவில் வெளியிட்டிருந்த 2 ஸ்ட்ரோக் ஆர்எக்ஸ்100 மோட்டார்சைக்கிளை மீண்டும் விற்பனைக்கு 4 ஸ்ட்ரோக் மாடலாக மாற்றி திரும்ப RX100 பைக்கினை கொண்டு வருவதற்கு சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் ஆனால் எந்தளவுக்கு சாத்தியம் என்பதனை காலம்தான் பதில் சொல்லும் என யமஹா இந்தியா சேர்மேன் ஈஷீன் சிஹானா தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து தினமும் RX100 எப்பொழுது வரும் என்ற கேள்வியை யமஹா எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள சேர்மேன், பைக்கின் தோற்றம், பெர்ஃபாமென்ஸ் உள்ளிட்டவை சாத்தியமாக இருந்தாலும், ஆனால் அந்த ஐகானிக் ஆர்எக்ஸ்100 மாடலின் சத்தத்தை எவ்வாறு 4 ஸ்ட்ரோக்கில் மறு உருவாக்கம் செய்து என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளதாக குறிப்பிடுகின்றார். 2 ஸ்ட்ரோக் பெற்ற 100சிசி பைக்கில் இருந்த அதே செயல்திறனை உருவாக்குவதில் சிரமம் என்றாலும் கூடுதல் சிசி வழங்கும் பொழுது சாத்தியப்படும் ஆனால், பழைய எக்ஸ்ஹாஸ்ட் ஒலியை சிதைக்காமல் கொண்டு வருவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.…

Read More

குறைந்த செலவில் அதிக மைலேஜ் என்ற நோக்கத்தை கொண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள பஜாஜ் ஆட்டோவின் சிஎன்ஜி பைக் மாடலை ஜூலை 5, 2024ல் வெளியிட உள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக பஜாஜ் ஆட்டோ தலைவர் தொடர்ந்து தனது செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வந்த சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் தற்பொழுது உள்ள பெட்ரோல் மாடல்களை விட 50-60 % வரை எரிபொருள் செலவினை குறைக்கும் நோக்கில் தயாரிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். 110-150 சிசி பிரிவில் பல்வேறு மாறுபட்ட ஸ்டைல் பெற்ற இந்த சிஎன்ஜி பைக்குகள் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயங்கும் வகையில் வரக்கூடும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வந்த பல்வேறு மாடல்கள் மாறுபட்ட ஸ்டைலிங் பெற்றிருந்த நிலையிலும், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ள பஜாஜின் சிஎன்ஜி மாடலில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு கம்பைன்டு…

Read More