Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இந்திய சந்தையில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஃபேரிங் செய்யப்பட்ட டேடோனா 660 பைக்கிற்கான முன்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களுக்குள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிரையம்ப் டேடோனா 660 டிரைடென்ட் 660சிசி என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற டேடோனா 660 பைக்கில் 660cc மூன்று சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 11,250rpm-ல் 95 bhp மற்றும் 8,250rpm-ல் 69Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இந்த பைக்கில் ஸ்போர்ட், ரோடு மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் கொண்டிருக்கின்றது. 41 மிமீ ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ப்ரீ லோட் ஷோவா மோனோஷாக் கொண்டதாக விளங்குகின்ற மாடலில் பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் இரட்டை 310 மிமீ டிஸ்க்குகள் மற்றும் ஒற்றை 220 மிமீ டிஸ்க் பின்புறத்தில் இணைக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாகவும், 120/70 ZR 17 முன் மற்றும் 180/55 ZR…

Read More

ஹீரோ நிறுவன தலைவர் பிரிஜ்மோகன் லால் முன்ஜாலின் 101வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தி சென்டினல் (the Centennial) என பெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் நேரடியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. ஏல முறையில் அதிக தொகைக்கு விண்ணப்பம் செய்யும் 100 நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள மாடல் ஹீரோவின் ஊழியர்கள், கூட்டு நிறுவனங்கள், வணிக கூட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் மட்டும் விண்ணபிக்க முடியும். ஹீரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான ஏல முறை நடைபெற்று இந்த 100 மாடல்களின் விற்பனை மூலம் திரட்டபடுகின்ற நிதி சமூக நலனுக்காக பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கரீஸ்மா XMR 210 அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 5.5 கிலோ வரை எடை குறைவாக வெறும் 158 கிலோ எடை பெற்றுள்ள தி சென்டினல் எடிசன் பைக்கில் தொடர்ந்து 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல்…

Read More

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைவர் பிரிஜ்மோகன் லால் முன்ஜால் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் கரீஸ்மா XMR 210 பைக்கின் அடிப்படையில் Centennial கலெக்டர்ஸ் எடிசனை விற்பனைக்கு வெளியிட உள்ளது. ஹீரோ டீலர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை துவங்கியுள்ள நிலையில் ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் காட்சிக்கு வந்த CE001 ஸ்பெஷல் எடிசன் சிறப்பு கார்பன் ஃபைபர் பாகங்களை கொண்டதாக வெறும் 100 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்க உள்ளது. விற்பனையில் கிடைத்து வருகின்ற கரீஸ்மா அடிப்படையில்  தயாரிக்கப்பட்டு செமி ஃபேரிங் செய்யப்பட்டு பிரத்தியேகமாக கார்பன் ஃபைபர் பாகங்கள் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. கரீஸ்மா Centennial பைக்கில் 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead Camshaft) அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த…

Read More

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 125R மோட்டார்சைக்கிள் பற்றி அடிக்கடி கேட்க்கப்படும் வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்வதுடன் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறியலாம். இந்தியாவின் 125cc பைக்கில் உள்ள போட்டியாளர்கள் யார் ? ஃபேமிலி தோற்றம் மற்றும் ஸ்போர்ட்டிவ் என இருவிதமான பிரிவுகளிலும் உள்ள 125சிசி பைக்குகளில் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கிற்கு போட்டியாக டிவிஎஸ் ரைடர், பஜாஜ் பல்சர் NS125, மற்றும் ஹோண்டா SP125 என மூன்று மாடல்களை எதிர்கொள்ளுகின்றது. எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் எத்தனை வேரியண்டுகள் உள்ளன ? கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்றுள்ள IBS வேரியண்ட் மற்றும் முன்புறத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற ABS என இருவிதமான வேரியண்டுகளை பெற்று 125சிசி சந்தையில் முதன்முறையாக இந்திய சந்தையில் ஏபிஎஸ் பெற்ற மாடலாக எக்ஸ்ட்ரீம் 125R விளங்குகின்றது. பின்பக்கத்தில் இரு வேரியண்டிலும் பொதுவாக 130மிமீ டிரம் பிரேக் பெற்று உடன் இன்ட்கிரேட்டேட் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட…

Read More

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் பைக் வரிசையில் இடம்பெற்றுள்ள N160 மாடலுக்கு எதிராக உள்ள NS160 என இரண்டையும் ஒப்பீடு செய்து என்ஜின் விபரம், மெக்கானிக்கல் அம்சங்கள், மைலேஊஃ மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை உள்ள அனைத்து அறிந்து கொண்டு எந்த பைக் வாங்கலாம் என அறிந்து கொள்ளலாம். Bajaj Pulsar N vs Pulsar NS வித்தியாசங்கள் என்ன ? பஜாஜ் ஆட்டோவின் நேக்டூ ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் என அழைக்கப்படுகின்ற பல்சர் NS மாடல் கூடுதல் பவர், 4 வால்வுகளை கொண்ட என்ஜின் மற்றும் மாறுபட்ட டிசைனை பெற்றுள்ளது. நேக்டூ பல்சர் N பைக்கில் 2 வால்வுகளை கொண்ட என்ஜின், சற்று ரிலாக்ஸான ரைடிங் பொசிஷனை பெற்றுள்ளது. 2024 பஜாஜ் Pulsar N160 vs Pulsar NS160 என்ஜின் ஒப்பீடு இரண்டு பல்சர் 160சிசி பைக்குகளும் மாறுபட்ட சிசி கொண்ட என்ஜின்களை பகிர்ந்து கொண்டு என்எஸ்160 மாடல் 17.2 Ps பவரை…

Read More

வரும் ஜூலை 5 ஆம் தேதி உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளை ஃபிரீடம் 125 (Bajaj Freedom CNG) என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பெட்ரோல் மாடல்களை விட 50-60 % கூடுதல் மைலேஜ் வழங்கும் என தெரிவித்துள்ளது. ராஜீவ் பஜாஜ் தொடர்ந்து தன்னுடைய பேட்டிகளில் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் பஜாஜின் பைக் பற்றி தொடர்ந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்த வந்த நிலையில் ப்ரூஸர் (Codename: Bruzer) என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் முதல் சிஎன்ஜி மாடல் 125சிசி என்ஜினை பெற்றதாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டபூள் கார்டிள் ஃபிரேம் பெற்றுள்ள இந்த பைக்கில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பெட்ரோல் டேங்க் மற்றும் இருக்கையின் அடிப்பகுதியில் சிஎன்ஜி எரிபொருள் கலனை நிறுவபட்டிருக்கும் என்பதனால் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் எந்தவொரு தயக்கமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து சாலை சோதனை ஓட்டத்தில்…

Read More