Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் செர்பா 452 என்ஜினை பெற உள்ள கொரில்லா 450 பைக்கின் அறிமுகம் ஸ்பெயின் பார்சிலோனாவில் ஜூலை 17 ஆம் தேதி என குறிப்பிட்டு முதல் டீசரை வெளியிட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள ஹிமாலயன் 450 பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற புதிய கொரில்லாவில் பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை. 452cc ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச்  மற்றும் ரைட் பை வயர் சிஸ்டத்தை கொண்டிருக்கும். மாடர்ன் ரோட்ஸ்டெர் பைக்குகளுக்கு சவால் விடுக்கும் வகையிலான வடிவமைப்பினை பெறுகின்ற கொரில்லா 450ல் புதிய டிசைன் அலாய் வீல் கொடுக்கப்பட்டு டீயூப்லெஸ் டயர் இந்த…

Read More

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 150-155சிசி விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களில் மிகவும் பிரசத்தி பெற்ற பல்சர் 150 மற்றும் N150 என இரண்டும் சுமார் 29,386 யூனிட்டுகளை பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, யமஹாவின் நேக்டூ ஸ்டைல் பெற்ற எம்டி-15 ஆனது 14,612 மற்றும் 149சிசி என்ஜின் பெற்ற FZ சீரிஸ் விற்பனை எண்ணிக்கை 14,359 ஆகவும், பிரபலமான ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்ற ஃபேரிங் ரக யமஹா ஆர்15 விற்பனை 10,435 ஆக உள்ளது. மேலும் இந்த சந்தையில் கிடைக்கின்ற சுசூகி நிறுவன ஜிக்ஸர் விற்பனை எண்ணிக்கை 1,168 ஆக மட்டும் பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை 150-155சிசி வரை கணக்கீடும் பொழுது நாட்டின் நெ.1 150சிசி பைக் தயாரிப்பாளராக யமஹா விளங்குகின்றது. மே 2024 மாத டாப் 150சிசி பைக்கின் விற்பனை நிலவரம் பின்வருமாறு;- டாப் 150சிசி பைக் மே  2024 மே 2023 1. பஜாஜ் பல்சர்…

Read More

இந்தியாவின் 125சிசி பைக் செக்மெண்டில் அதிகம் விற்பனையான டாப் 5 பைக்குகளை தான் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம் இந்த பிரிவில் ஹோண்டா நிறுவனத்தின் ஷைன் 125 மற்றும் எஸ்பி 125 என இரண்டும் இணைந்து அதிகபட்சமாக 1,26,907 ஆக பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 125 மற்றும் NS125 இணைந்து 74,072 ஆக பதிவு செய்துள்ளது. அடுத்தப்படியாக, டிவிஎஸ் மோட்டாரின் பிரசத்தி பெற்ற ரைடர் 125 பைக்கின் விற்பனை எண்ணிக்கை 37,249 ஆக மே 2024 மாதந்திர விற்பனையில் பதிவு செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ நிறுவன சூப்பர் ஸ்பிளெண்டர் 27,886 ஆகவும், கிளாமர் 125 எண்ணிக்கை 19,028 ஆக பதிவு செய்துள்ளது. புதிதாக ஹீரோ வெளியிட்டிருந்த எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் எண்ணிக்கை 14,326 ஆக உள்ளது. மேலும் பஜாஜ் ஆட்டோவின் CT125X விற்பனை எண்ணிக்கை மே மாதம்…

Read More

கவாஸாகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தோனேசியா சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான W175 பைக்கில் SE, SE பிளாக் ஸ்டைல், கஃபே மற்றும் TR என நான்கு விதமான வகைகளில் கிடைக்கின்றது. என்ஜின் பவர் மற்றும் மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. W175 பைக்கில் உள்ள  177cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் 7,500 rpm-ல் 13hp பவர் மற்றும் 6,000 rpm-ல் 13.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. இரு பக்க டயரிலும் 17 அங்குல வீல் பெற்று முன்புறத்தில் 220மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 110 மிமீ டிரம் பிரேக் பெற்றதாகவும், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பரை கொண்டுள்ளது. 126 கிலோ எடையை கொண்டுள்ள டபிள்யூ175 பைக்கின் கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 மிமீ மற்றும் இருக்கை உயரம் 780 மிமீ ஆகும்.…

Read More

யமஹா நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் நேக்டூ ஸ்டைல் மாடல்களான எம்டி-03 மற்றும் எம்டி-25 என இரு பைக்குகளிலும் புதுப்பிக்கப்பட்ட நிறங்களை பெறுகின்றது. குறிப்பாக எம்டி-03 பைக்கில் சேர்க்கப்பட்டுள்ள நீல நிறம் ஏற்கனவே சந்தையில் உள்ள யமஹாவின் ஆர்3 பைக்குகளில் இடம்பெற்றுள்ளதாகும். எம்டி-25 மாடலை பொறுத்தவரை, மிட்நைட் கருப்பு மற்றும் சியான் என இரு நிறங்களை பெற்றுள்ளது. எம்டி-25 பைக்கில் உள்ள 249சிசி ட்வீன் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 35.1 PS பவர் மற்றும் 22.6 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து, இந்திய சந்தையிலும் கிடைக்கின்ற யமஹா எம்டி-03 பைக்கில் 321cc பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய 10.750 rpm-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 40.4 bhp, மற்றும் 9.000 rpm-ல் 29.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள மாடலின் எம்டி-03 விலை ரூ.4.61…

Read More

மலேசியாவில் ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய 2024 CBR250RR ஸ்போர்ட்டிவ் பைக்கில் பவர் அதிகரிக்கப்பட்டு புதிய பாடி கிராபிக்ஸ் பெற்றுள்ளது. மற்றபடி, டிசைனில் பெரிய அளவில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. 2024 Honda CBR250RR ட்வீன் சிலிண்டர் என்ஜின் பெற்றுள்ள ஹோண்டாவின் சிபிஆர்250ஆர்ஆர் பைக்கில் உள்ள 8 வால்வுகளை கொண்ட 249சிசி என்ஜின் அதிகபட்சமாக 41bhp பவரை 13,000rpm-லும், 25Nm டார்க்கினை 11,000rpm-ல் வழங்குகின்றது. குறிப்பாக முந்தைய மாடலை விட 1 hp வரை பவர் அதிகரிக்கப்பட்டுள்ளதை தவிர, என்ஜின் கம்பிரெஷன் விகிதம் 12.1:1 லிருந்து 12.5:1 ஆக மாற்றப்பட்டு, பிஸ்டன், ஆயில் ரிங் டென்ஷன் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்பட்ட செயல்திறனை வழங்கும்  வகையில் என்ஜின் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ள பைக்கில் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், க்விக் ஷிஃப்டர் மற்றும் த்ரோட்டில்-பை-வயர் சிஸ்டம் ஆகியவற்றுடன் ஸ்போர்ட்+, ஸ்போர்ட் மற்றும் கம்ஃபோர்ட் மூன்று ரைடிங் முறைகள்…

Read More