பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட உள்ள உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளின் ஃப்ரீடம் 125 நாளைக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் அதிகாரப்பூர்வமாக பெயரை டீசரை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பெயரை நாம் சில நாட்களுக்கு முன்பாக உறுதிப்படுத்தியிருந்தோம். Freedom 125 CNG 125சிசி என்ஜின் பொருத்தப்பட்டு பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு பயன்முறையிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மாடல் மைலேஜ் அதிகபட்சமாக 1 கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 100 கிமீ வரை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. மிகவும் மாறுபட்ட டிசைன் வடிவமைப்பினை பெற உள்ள மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், தட்டையான மற்றும் நீளமான இருக்கை அமைப்பினை பெற்றுள்ளது. டீயூப்லெர் ஸ்டீல் கார்டிள் ஃபிரேமில் வடிவமைக்கப்பட்டு பெட்ரோல் டேங்கிற்கு கீழ் பகுதியில் சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய சந்தையில் பரவலாக சிஎன்ஜி நிரப்பும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகின்றது. சிஎன்ஜி கார்களின்…
Author: MR.Durai
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஜூலை 5 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ள புதிய சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் ஆனது உலகில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்படுகின்றது. சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டும் தனித்தனியாக சேமிக்கப்படுவதுடன் இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று மாற்றிக் கொள்ளும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட டீசரில் சுவிட்சுகள் ஆனது கொடுக்கப்பட்டு சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டுக்கும் மாற்றும் வகையில் உள்ளது. கூடுதலாக தட்டையான இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டு, வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் மற்றும் பஜாஜ் லோகோவும் இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முன்பே வெளிவந்த சோதனை ஓட்ட படங்கள் மூலம் முதலில் 125சிசி க்கு இணையான பைக் சிஎன்ஜி பிரிவில் ஃப்ரீடம் என்ற பெயரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாடல் மிகச் சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் பெட்ரோல் மாடல்களை விட கூடுதலாக 50 -60 % வெளிப்படுத்தும் என கூறப்படுவதனால் சுமார் 100 கிலோமீட்டருக்கு அதிகமாக பஜாஜ் ஆட்டோ உறுதி செய்ய…
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கொரில்லா 450 மாடல் ஜூலை 17 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சில உற்பத்தி நிலை படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. குறிப்பாக பைக்கின் டாப் வியூ மூலம் கிளஸ்ட்டர் மற்றும் நிறங்களும் தெரிய வந்துள்ளது. புதிய கொரில்லா பைக்கில் 452 செர்பா என்ஜின் ஆனது ஹிமாலயன் 450 பைக்கிலும் இடம்பெற்றிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 40hp மற்றும் 40 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. படத்தில் சிவப்பு மற்றும் தங்கம் என இரு நிற கலவையில் அமைந்து மாடலில் வட்ட வடிவ TFT கிளஸ்ட்டரானது ஹிமாலயனில் பெற்றுள்ளதை போலவே அமைந்திருக்கின்றது. அடுத்தப்படியாக, குறைந்த விலை நீல நிற வேரியண்டுகளில் சூப்பர் மீட்டியோர் 650 மாடலில் இடம்பெற்றுள்ள செமி அனலாக் முறையிலான டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் டர்ன் பை டர்ன் நேவிகேஷனை பெற்றதாக அமைந்துள்ளது. இரு பக்க டயர்களிலும்…
1,888 யூனிட்டுகள் மட்டுமே சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட உள்ள வெஸ்பா 946 டிராகன் ஸ்கூட்டருக்கான முன்பதிவு இந்திய சந்தையிலும் துவங்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு எடிசனில் 125cc மற்றும் 155cc என இரண்டு என்ஜின் பிரிவில் கிடைக்கின்ற நிலையில் இந்திய சந்தையில் 155சிசி மாடல் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. தோற்ற அமைப்பில் வழக்கமான மாடலை போலவே அமைந்திருந்தாலும், இரு பக்க டயரிலும் 12 அங்குல வீல், டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் பெற்று வெளிர் தங்க நிறத்தை பெற்றுள்ள ஸ்கூட்டரில் கோல்ட் ஷேடிற்குத் தேவையான சில மாறுபாடுகளுடன் மரகத பச்சை நிறத்தில் டிராகனின் கிராபிக்ஸ் முன்புறத்தில் இருந்து பக்கவாட்டு பேனல் வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மோட்டோப்ளக்ஸ் டீலர்ஷிப் மற்றும் ஆன்லைனில் வெஸ்பா 946 டிராகன் மாடலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஃபேரிங் செய்யப்பட்ட டேடோனா 660 பைக்கிற்கான முன்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களுக்குள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிரையம்ப் டேடோனா 660 டிரைடென்ட் 660சிசி என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற டேடோனா 660 பைக்கில் 660cc மூன்று சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 11,250rpm-ல் 95 bhp மற்றும் 8,250rpm-ல் 69Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இந்த பைக்கில் ஸ்போர்ட், ரோடு மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் கொண்டிருக்கின்றது. 41 மிமீ ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ப்ரீ லோட் ஷோவா மோனோஷாக் கொண்டதாக விளங்குகின்ற மாடலில் பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் இரட்டை 310 மிமீ டிஸ்க்குகள் மற்றும் ஒற்றை 220 மிமீ டிஸ்க் பின்புறத்தில் இணைக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாகவும், 120/70 ZR 17 முன் மற்றும் 180/55 ZR…
ஹீரோ நிறுவன தலைவர் பிரிஜ்மோகன் லால் முன்ஜாலின் 101வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தி சென்டினல் (the Centennial) என பெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் நேரடியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. ஏல முறையில் அதிக தொகைக்கு விண்ணப்பம் செய்யும் 100 நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள மாடல் ஹீரோவின் ஊழியர்கள், கூட்டு நிறுவனங்கள், வணிக கூட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் மட்டும் விண்ணபிக்க முடியும். ஹீரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான ஏல முறை நடைபெற்று இந்த 100 மாடல்களின் விற்பனை மூலம் திரட்டபடுகின்ற நிதி சமூக நலனுக்காக பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கரீஸ்மா XMR 210 அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 5.5 கிலோ வரை எடை குறைவாக வெறும் 158 கிலோ எடை பெற்றுள்ள தி சென்டினல் எடிசன் பைக்கில் தொடர்ந்து 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல்…