Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள 2024 பல்சர் 150 மோட்டார்சைக்கிளில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் சேர்க்கப்பட்டுள்ளது. அடிப்படையான பல்சரின் கிளாசிக் தோற்றத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள மாடல்களில் ஒன்றான பல்சர் 150 மாடலில் தொடர்ந்து 149.5cc, ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 13.8bhp பவரினை 8,500rpmலும் மற்றும் 13.25Nm டார்க்கினை 6,500rpmல் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் பெறுகின்ற பல்சர் 150 பைக்கில் புதிய கிராபிக்ஸ் ஹெட்லைட், பெட்ரோல் டேங்க்கில் 150 என்ற எண் பெரிய எழுத்துருவில் வழங்கப்பட்டிருப்பதுடன் அதன் எக்ஸ்டென்ஷன் மற்றும் டெயில் பகுதிகளிலும் காணப்படுகிறது. பக்கவாட்டு பேனலில் நேர்த்தியாகத் தோற்றமளிக்கும் கார்பன் ஃபைபர் ஸ்டிக்கரையும் பெறுகிறது. புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டரின் மூலம் ரைட் கனெக்ட் வசதி மூலம் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போனை இணைத்தால் அழைப்புகளை ஏற்பது அல்லது நிராகரிக்கும்…

Read More

பஜாஜ் ஆட்டோவின் செமி ஃபேரிங் செய்யப்பட்ட 2024 பல்சர் 220F பைக்கில் புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் சிறிய அளவிலான மேம்பாடுகளை மட்டும் பெற்றுள்ள மாடலின் விலை ரூ.1.41 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பே டீலர்களை வந்தடைந்த பல்சர் 220எஃப் பைக்கின் என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.  220cc சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 20.5 ps பவர் மற்றும் 18.55Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த பைக்கிலும் பஜாஜ் தனது டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுத்து கனெக்ட்டிவிட்டி சார்ந்து அம்சங்கள்,யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்  பெறுகின்றது. டன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் கூடுதலாக ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரி, சிக்னல், கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. பல்சர் 220F மாடலின் இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெறுகின்ற மாடலில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்…

Read More

ஏபிஎஸ் ரைடிங் மோடு, அப்சைடு டவுன் ஃபோர்க் உடன் வெளியிடப்பட்டுள்ள பஜாஜ் ஆட்டோவின் 2024 பல்சர் N160 மோட்டார்சைக்கிள் ரூ.1.40 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த மாடலில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உடன் கூடிய ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷனை பெற்றுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்ற மாடலை விட மேம்பட்ட சஸ்பென்ஷனை வெளியிப்படுத்துகின்ற வகையில் கோல்டன் நிறத்திலான USD ஃபோர்க் ஆனது வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி, பின்புறத்தில் தொடர்ந்து மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகின்றது. டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ரைடிங் முறைகளுக்கு ஏற்ற road, rain, மற்றும் off-road மோடுகளின் மூலம் கூடுதல் பாதுகாப்பினை ரைடர்கள் பெறுவதற்கான ஒரு அம்சமாக கருதப்படுகின்றது. மற்றபடி என்ஜின் பவரில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து பல்சர் என்160 பைக்கில் 164.82cc, ஒற்றை சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 15.7 bhp மற்றும் 14.6 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த என்ஜினில்…

Read More

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற சுசூகி நிறுவனத்தின் 2024 ஆண்டிற்கான ஆக்செஸ் 125, அவெனிஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்டீரிட் 125 என மூன்று ஸ்கூட்டர்களின் என்ஜின், மைலேஜ், நிறங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். சுசூகியின் 125சிசி ஸ்கூட்டர்களில் பொதுவாக 124cc ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6750 rpm-ல் 8.7 PS மற்றும் 5,500 rpm-ல்  10 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. சிவிடி கியர்பாக்ஸ் கொண்டு சக்கரங்களுக்கு பவரை வழங்குகின்றது. 2024 Suzuki Access 125 125cc சந்தையில் ஆக்செஸ் 125 மாடல் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று இந்நிறுவனத்தின் விற்பனையில் சராசரியாக 65-70 % பங்களிப்பை வழங்கி வரும் நிலையில் மற்ற போட்டியாளர்களான ஜூபிடர் 125, ஆக்டிவா 125, ஃபேசினோ மற்றும் டெஸ்டினி 125 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. ஸ்டாண்டர்டு, ஸ்பெஷல் எடிசன் மற்றும் ரைட் கனெக்ட் எடிசன் என மூன்று விதமாக கிடைக்கின்ற…

Read More

முற்றிலும் புதுப்பிக்கபட்ட பல்வேறு நவீன தலைமுறை அம்சங்களை ஆதரிக்கவும், கார் தயாரிப்பாளர்களுக்கு ஏற்ற கஸ்டமைஸ் வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய ஆப்பிள் கார் பிளே ஓஎஸ் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் போர்ஷே மற்றும் ஆஸ்டன் மார்டின் கார்களில் முதற்கட்டமாக இடம்பெற உள்ளது. முதன்முறையாக 2014 ஆம் ஆண்டு ஃபெராரி FF காரில் முதன்முறையாக வந்த கார் பிளே சிஸ்டம் இப்பொழுது அகலமான திரை, பல்வேறு நவீன அம்சங்கள் என விரிவடைந்து வாடிக்கையாளர்களுக்கு பலதரப்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்ட புதிய தலைமுறை கார் பிளே சிறப்பானதாக இருக்கும் என தான்யா காஞ்சேவா, ஆப்பிள் நிறுவனத்தின் கார் பிரிவு பொறியாளர் தெரிவித்துள்ளார். அடுத்த தலைமுறை கார்ப்ளே வயர்லெஸ் முறையில் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கார் தயாரிப்பாளர்கள் தங்களுடைய மாடலுக்கு ஏற்ற வகையில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட UI உட்பட ஏசி சார்ந்த கண்ட்ரோல் என பல்வேறு அம்சங்களை வழங்குகின்றது. ADAS…

Read More

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பைக் தயாரிப்பாளராக உள்ள ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) விற்பனை செய்து வருகின்ற CD110 ட்ரீம் டீலக்ஸ் மற்றும் லிவோ 110 என இரண்டு 110cc பைக்குகளின் சிறப்பு அம்சங்கள் மற்றும் ஆன் ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். 2024 Honda Livo ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை பெற்றுள்ள லிவோ 110 பைக்கில் ப்ளூ, பிளாக் மற்றும் மேட் கரிஸ்ட் என மூன்று விதமான நிறங்களை கொண்டு Enhanced Smart Power (eSP) ஆதரவினை பெற்ற 109.51 cc என்ஜின் அதிகபட்சமாக 8.79 PS பவர் மற்றும் 9.30 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. டிஜி அனலாக் கிளஸ்ட்டரை பெற்றுள்ள லிவோ பைக்கில் சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் என்ஜின் மேம்படுத்தப்பட்டு 65 கிமீ வரை சராசரியாக வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலுக்கு போட்டியாக ஹீரோ பேஷன்…

Read More