வருகின்ற மார்ச் 16ந் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஹோண்டா WR-V கார் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய என்ஜின் , வசதிகள் உள்பட விலை சார்ந்த விபரங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். ஹோண்டா WR-V கார் கோவாவில் நேற்று தொடங்கியுள்ள மீடியா டிரைவ் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டபிள்யூஆர்-வி காரில் உள்ள பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது. குறிப்பாக அனைத்து வேரியண்டிலும் இரண்டு காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. 1. டபிள்யூஆர்-வி டிசைன் ஜாஸ் காரின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டபிள்யூஆர்-வி க்ராஸ்ஓவர் ரக காரில் பிஆர்-வி எஸ்யூவி மாடலில் உள்ளதை போன்ற ஹோண்டாவின் மிக அகலமான க்ரோம் பட்டைக்கு மத்தியில் அமைந்துள்ள ஹோண்டா லோகோ , முகப்பு விளக்கில் கருப்பு இன்ஷர்ட் , வட்ட வடிவத்தை பெற்ற பனி விளக்கு போன்றவற்றை பெற்றுள்ளது. பக்கவாட்டில் உயரமான வீல் ஆர்ச் , பாடி கிளாடிங் ,…
Author: MR.Durai
ரோஞ்ச் ரோவர் குடும்பத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வேலார் எஸ்யூவி படங்கள் மற்றும் வீடியோ என இரண்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எவோக் மற்றும் ஸ்போர்ட் கார்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட்ட மாடலாக வேலார் வந்துள்ளது. https://www.youtube.com/watch?v=Pb7ntW6qQA0 3 விதமான பெட்ரோல் மற்றும் 2 விதமான டீசல் என்ஜின் என மொத்தம் 5 விதமான என்ஜின் தேர்வுகளில் கிடைக்க உள்ளது. ரேஞ்ச் ரோவர் வேலார் எஸ்யூவி படங்கள் 47 படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. [foogallery id=”17121″]
87வது ஜெனிவா மோட்டார் கண்காட்சி அரங்கில் பார்வைக்கு வரவுள்ள ரேஞ்ச் ரோவர் வேலார் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லேண்ட் ரோவர் ரேஞ்ச்ரோவர் வேலார் எஸ்யூவி ஆரம்ப விலை £44,830 (ரூ.36,71,044) இங்கிலாந்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. வேலார் எஸ்யூவி எவோக் மற்றும் எவோக் ஸ்போர்ட் மாடலுகளுக்கு இடையே நிலைநிறுத்தப்பட்டுள்ள வேலார் எஸ்யூவி (Velar) காரில் 3 விதமான டீசல் இன்ஜின் இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின் என மொத்தம் 5 விதமான தேர்வுகளில் கிடைக்க உள்ளது. டிசைன் எவோக் மற்றும் ஸ்போர்ட் கார்களின் வடிவ உந்துதலை கொண்டு நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டுள்ள புதிய வீலர் எஸ்யூவி காரின் முன்பக்க தோற்றம் மிக நேர்த்தியான லேண்ட் ரோவர் பாரம்பரிய கிரில் அமைப்புடன் ஸ்டைலிசான முன்பக்க பம்பர் ,தட்டையான மேட்ரிக்ஸ் லேசர் எல்இடி (Matrix-Laser) ஹெட்லேம்ப் போன்றவற்றை பெற்று மிகுந்த ஆக்ரோஷமாக வேலார் மாடல் விளங்குகின்றது. 22 அங்குல அலாய் ஸ்டைலிசான புரஃபைல் கோடுகளுடன் விளங்குகம் காரின் பின்புறத்தில் ஸ்டைலிசான எல்இடி…
இந்தியாவில் கடந்த பிப்ரவரி 2017ல் விற்பனை செய்யப்பட்ட பயணிகள் கார் விற்பனை நிலவரம் பற்றி காணலாம். மாருதி சுசூகி நிறுவனம் கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் 11.7 சதவீத கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளது. கார் விற்பனை நிலவரம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு இந்திய ஆட்டோமொபைல் சந்தை கடந்த சில வாரங்களாகவே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. விட்டாரா பிரெஸ்ஸா , க்ரெட்டா , க்விட் , பலேனோ , டியாகோ , ஃபார்ச்சூனர் ,இன்னோவா க்ரீஸ்ட்டா போன்ற கார்கள் அபரிதமான சந்தை மதிப்பினை தொடர்ந்து பெற்று வருகின்றன. மாருதி சுசூகி இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளாரக விளங்கும் மாருதி சுசூகி நிறுவனம் பிப்ரவரி மாத முடிவில் 120,599 கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 2016ல் 108,115 கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் 11.7 சதவீத கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளது. பிப்ரவரி 2017ல் இவற்றில் முக்கியமான மாடல்களாக ஆல்ட்டோ 800 ,…
மேம்படுத்தப்பட்ட பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு இன்ஜினுடன் கூடுதல் வசதிகள் மற்றும் ஏஹெச்ஒ போன்றவற்றுடன் ஹோண்டா ஆக்டிவா 4G ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது. உலகில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்ற தானியங்கி ஸ்கூட்டர் மாடலாக ஆக்டிவா விளங்குகின்றது. ஆக்டிவா 4G 2000ம் ஆண்டு முதல் சந்தையில் உள்ள ஆக்டிவா மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக ஆதரவுடன் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக சந்தையில் கொடிகட்டி பறக்கின்றது. ஒட்டுமொத்த இந்திய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் சந்தையில் 58 சதவீத பங்களிப்பினை ஆக்டிவா கொண்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோண்டா ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டுள்ள வசதிகளின் விபரம் இதோ…! புதிய தோற்றத்தை வழங்கும் முன்பக்க பாடிகவர் நிறங்கள் – மேட் சில்வர் மெட்டாலிக் மற்றும் மேட் கிரே மெட்டாலிக் ரீடிராக்டெபிள் ஃபிரென்ட் ஹூக் மற்றும் மொபைல் சார்ஜர் சாக்கெட் ஏஹெச்ஒ எனப்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் வசதி பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு விதிமுறைக்கு ஏற்ற 110சிசி என்ஜின் ஹோண்டாவின்…
இந்திய சந்தையில் முதல் ஆட்டோமொபைல் நிறுவனமாக சீனாவின் SAIC மோட்டார்கார்ப் நிறுவனத்தின் எம்ஜி மோட்டார் இந்தியா என்ற பெயரில் கார்களை விற்பனை செய்ய எஸ்ஏஐசி திட்டமிட்டுள்ளது. எம்ஜி மோட்டார் செவர்லே மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீனாவின் பார்டன்ர் நிறுவனமாக செயல்படுகின்ற SAIC நிறுவனத்தின் அங்கமாக உள்ள இங்கிலாந்தின் MG மோட்டார்ஸ் பெயரில் கார்களை விற்பனை செய்ய எஸ்ஏஐசி திட்டமிட்டுள்ளது. இதற்காக குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஜிஎம் செவர்லே நிறுவனத்தின் ஹலால் தொழிற்சாலையை கையகப்படுத்த உள்ளது. இதற்கான ஒப்புதலை சிசிஐ (Competition Commission of India) அமைப்பு வழங்கியுள்ளது. தொழிலாளர் பிரச்சனையால் குஜராத் மாநிலத்தில் அமைந்திருந்த செவர்லே ஹலால் ஆலையை கடந்த வருடத்தில் மூடியது. ஊதியம் தொடர்பான பிரச்சனையில் குஜராத் ஆலையை மூடிவிட்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள தனது மற்றொருஆலைக்கு அனைத்து தயாரிப்புகள் மற்றும் சில தொழிலாளர்களையும் மாற்றிவிட்டது. அதனை தொடர்ந்து ஜிஎம் நிறுவனம் அறிவித்திருந்த இந்திய சந்தைக்கான முதலீடு திட்டங்களை அனைத்தும் நிறுத்தி வைப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து…