Automobile Tamilan

பிஎம்டபிள்யூ G 310R, G 310 GS பைக்குகள் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

இந்தியா பி.எம்.டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் தொடக்கநிலை ஸ்போர்ட்டிவ் பைக் மாடலாக விளங்கும் BMW G 310R மற்றும் BMW G 310 GS  ஆகிய இரு மாடல்களும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டின் 2018 ஆம் ஆண்டின் மத்தியில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

BMW G 310R

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள முதல் தொடக்கநிலை பைக் மாடலாக விளங்குகின்ற பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் வருகை தொடர்ந்த தாமதப்படுத்தி வருவதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அட்வென்ச்சூர் ரக ஜி 310 ஜிஎஸ் பைக் மாடலும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

இந்திய சந்தையில் பிரிமியம் ரக சூப்பர் பைக்குகளை விற்பனை செய்து வருகின்ற பிஎம்டபிள்யூ தற்போது 4 டீலர்களை மட்டுமே நாடு முழுமைக்கும் பெற்று விளங்குகின்றது.  313சிசி எஞ்சின் பெற்றிருக்கின்ற ஜி310 ஆர் பைக் தொடக்கநிலை பிரிமியம் சந்தைக்கு ஏற்ற மாடல் என்பதனால் விற்பனை எண்ணிக்கை கூடுதலாக இருக்கும், எனவே தற்போது உள்ள டீலர்களின் எண்ணிக்கை போதிய அளவில் இல்லாத காரணத்தால் வரும் மாதங்களில் டீலர்களை விரிவுப்படுத்த  பி.எம்.டபிள்யூ மோட்டார்டு திட்டமிட்டுள்ளது.

ஓசூரில் அமைந்துள்ள டிவிஎஸ் மோட்டார்சின் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஜி 310ஆர் சர்வதேச அளவில் ஐரோப்பா நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

பல மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த ஸ்போர்ட்டிவ் தொடக்க நிலை பைக்கில் 34 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 313 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 28Nm பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இதன் அடிப்படையிலே உருவான முழுதும் அலங்கரிக்கப்பட்ட TVS Apache RR 310S அடுத்த ஆண்டு சந்தைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ஜி 310ஆர் பைக்கின் விலை மிக சவாலாக அமையும் என்பதால் இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் ஸ்போர்ட்டிவ் தொடக்கநிலை சந்தையில் சிறப்பான ஆதிக்கத்தை வெளிப்படுத்தும்.

Exit mobile version