Automobile Tamilan

டாட்டா நெக்சான் ஏஎம்டி எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பிரசத்தி பெற்ற டாட்டா நெக்சான் எஸ்யூவி அடிப்படையில் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற பெட்ரோல் மற்றும் டீசல் மாடல் தவிர நெக்சன் ஏரோ மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது.

டாடா நெக்சன் ஏஎம்டி

பிரசத்தி பெற்ற விட்டாரா பிரெஸ்ஸா, ஈக்கோஸ்போர்ட், டியூவி 300 ஆகிய மாடல்களுக்கு எதிராக மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தி வருகின்ற நெக்ஸான் மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றில் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனை செய்யப்படுகின்றது.

டியாகோ மற்றும் டீகோர் போன்ற மாடல்களில் இடம்பெற்றிருந்த அதே ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெவோடார்க் வரிசையில் புத்தம் புதிதாக வரவுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எஞ்சினிலும்  6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. இதே எஞ்சினில் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

 

காட்சிப்படுத்தப்பட்டுள்ள நெக்சன் மாடல் புதிதாக ஆரஞ்சு (Etna Orange) வண்ணத்தை மட்டுமே பெற்று தோற்ற அமைப்பில் வேறு எவ்விதமான மாற்றங்களையும் பெறாமல் அமைந்துள்ளது. இந்த எஸ்யூவி மாடலின் XMA மற்றும் XTA ஆகிய இரு வேரியன்டில் மட்டுமே கிடைக்கப் பெறலாம்.

மேனுவல் வேரியன்ட்டை விட ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விலை அதிகரிக்கப்பட்டு விற்பனைக்கு வர வாய்ப்புள்ள நெக்சன் ஏஎம்டி அடுத்த சில வாரங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப் பெற வாய்ப்புகள் உள்ளது. இதன் போட்டியாளரான டியூவி 300 , ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களல் ஏஎம்டி இடம்பெற்றுள்ளதால் விரைவில் விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் ஏஎம்டி வர வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version