Categories: Auto Expo 2023

டிவிஎஸ் க்ரியோன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

TVS Creon e scooter unveiledநவீன தலைமுறையினர் விரும்பும் வகையிலான அம்சங்களை பெற்றதாக வரவுள்ள டிவிஎஸ் க்ரியோன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்து காட்சிப்படுத்தியுள்ளது.

டிவிஎஸ் க்ரியோன் ஸ்கூட்டர்

ஸ்மார்டான முறையில் நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையிலான மொபைல் ஆதரவுடன் பல்வேறு அம்சங்களை கொண்டதாக வரவுள்ள இந்த ஸ்கூட்டரில் 3 லித்தியம் ஐயன் பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற 12 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0-60 கிமீ வேகத்தை மணிக்கு எட்டுவதற்கு 5.1 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இதில் இடம்பெற உள்ள பேட்டரி 80 சதவீத சார்ஜிங் ஆவதற்கு அதிகபட்சமாக 60 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும், சிரியோன் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 80 கிமீ தொலைவு வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து டிவிஎஸ் மோட்டார் தயாரிக்க உள்ள க்ரியோன் ஸ்கூட்டரில் இடம்பெற உள்ள தொழிற்நுட்பம் சார்ந்த ஆதரவு நுட்பத்தின் வாயிலாக ஸ்மார்ட் மொபைல்கள் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டதாக விளங்க உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பேட்டரி சார்ஜர், சர்வீஸ் ரிமைன்டர், டாக்கோமீட்டர் ஆகியவற்றுடன், க்ரியோன் ஸ்கூட்டருக்கு வழங்கப்பட உள்ள ஆப் வாயிலாக ரீஜெனேர்ட்டிவ் பிரேக்கிங், பார்க்கிங் அசிஸ்ட், ஜிபிஎஸ் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டதாக விளங்க உள்ளது.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெர்ஃபாமென்ஸ் ஸ்கூட்டரில் இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வந்துள்ளது.

இதைத் தவிர டி.வி.எஸ் ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை என்டார்க் 125, டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர், அப்பாச்சி  RTR 200 Fi எத்தனால் ஆகிய மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது.

Share
Published by
MR.Durai

Recent Posts

செப்டம்பர் 16ல் புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310R அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…

1 day ago

சென்னையில் ஃபோர்டு கார்களை தயாரிக்க ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி..?

அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…

1 day ago

செப்டம்பர் 16ல் கியா கார்னிவல் முன்பதிவு துவங்குகின்றது

வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…

1 day ago

மீண்டும் HF டான் பைக்கை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…

1 day ago

புதிய கார்பன் ஃபைபர் பேட்டர்னில் 2024 யமஹா R15M விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…

2 days ago

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…

2 days ago