ஃபியட் 124 ஸ்பைடர் கன்வெர்டிபிள் கார் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வந்துள்ள ஃபியட் 124 ஸ்பைடர் காரை பின்னின்ஃபாரினா நிறுவனத்தின் வடிவ தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபியட் 124 ஸ்பைடர்

2016ம் ஆண்டின் மத்தியில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வரவுள்ள ஃபியட் 124 ஸ்பைடர் மாடலை 1966 ஃபியட் 124 ஸ்பைடர் மாடலின் 50வது வருட கொண்டாடத்தை முன்னிட்டு மஸ்டா மியடா ஸ்பைடர் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அபார்த் பிராண்டில் உள்ள 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 160ஹெச்பி ஆற்றல் மற்றும் 241என்எம் டார்க் தரும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

கிளாசிக் தோற்றத்தில் மிக நேரத்தியாக அமைந்துள்ள ஃபியட் 124 ஸ்பைடர் காரில் உள்ள முகப்பு விளக்குகள் சிறப்பாக உள்ளது. அறுங்கோண வடிவ கிரில் பனி விளகுகள் , மிக நீளமான பானெட் போன்றவற்றை பெற்றுள்ளது. பின்புறத்தில் எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது.

உட்புறத்தில் மிக சிறப்பான கட்டுமானத்தை பெற்றுள்ள 124 ஸ்பைடர் காரில் பிரிமியம் சாஃபட் டச் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பினை பெற்றிருக்கும்.

சிவப்பு , வெள்ளை , கருப்பு , கிரே , டார்க் கிரே மற்றும் பரான்ஸ் என 6 வித நிறங்களில் ஃபியட் 124 ஸ்பைடர் வரவுள்ளது.

ஃபியட் 124 ஸ்பைடர் காரில் கிளாசிகா மற்றும் லூசா என இரண்டு வேரியண்டில் வரும் மேலும் விற்பனைக்கு வரும் பொழுது ஃபியட் 124 ஸ்பைடர் காரில் பிரைமா எடிசியோனா லூசா என்ற பெயரில் நீல வண்ணத்தில் சிறப்பு பதிப்பும் வரவுள்ளது. இந்த சிறப்பு பதிப்பில் 124 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

வரும் 2016ம் ஆண்டின் இறுதியில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வரவுள்ள ஃபியட் 124 ஸ்பைடர் இந்தியா வருவதற்க்கான வாய்ப்புகளும் உள்ளது.

Fiat 124 Spider Photo Gallery

Fiat 124 Spider debut at LA Auto Show 2015