வருகின்ற ஜனவரி 8ந் தேதி தொடங்க உள்ள டெட்ராய்ட் ஆட்டோ ஷோ 2017 கண்காட்சியில் ஆடி க்யூ8 கான்செப்ட் இ-டிரான் மாடலை காட்சிப்படுத்த உள்ளதை உறுதிசெய்யும் வகையில் Q8 டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
வருகின்ற ஜனவரி 8 ,2017 முதல் ஜனவரி 22 , 2017 வரை வட அமெரிக்காவில் நடைபெற உள்ள டெட்ராய்ட் ஆட்டோ ஷோ( North American International Auto Show) வாகன கண்காட்சி அரங்கில் எண்ணற்ற புதிய கான்செப்ட் மாடல்கள் மற்றும் உற்பத்தி நிலை கார்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
ஆடி Q8 டிசைன்
ஆடி நிறுவனத்தின் டாப் க்யூ ரக மாடலாக வரவுள்ள க்யூ8 அதாவது விற்பனையில் உள்ள ஆடி க்யூ7 எஸ்யூவி காருக்கு மேலாக நிலைநிறுத்தப்பட உள்ள க்யூ8 மாடலானது மின்சாரத்தில் இயங்கும் மாடலாக விளங்கும். மிகவும் சக்திவாய்ந்த மின் ஆற்றல் மற்றும் அதிக தொலைவு பயணிக்கும் வகையிலான நவீன பேட்டரி அம்சங்களை கொண்டதாக இருக்கும். மேலும் கூடுதலாக ஹைபிரிட் என்ஜின் மற்றும் பெட்ரோல், டீசல் மாடல்களிலும் கிடைக்கும்.
ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MLB பிளாட்பாரத்தின் அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட உள்ள க்யூ8 மாடல் 4 இருக்கைகளுடன் அதிநவீன சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பெற்றதாக விளங்கும். வெளிப்படுத்தப்பட்டுள்ள டீஸர் படத்தில் ஆடி சிங்நேச்சர் கிரிலில் செங்குத்தான கோடுகள் சேர்க்கப்பட்டு எல்இடி முகப்பு விளக்குகள் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் பக்கவாட்டு அமைப்பில் ஸ்டைலிசாக விளங்குகின்றது.