பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ ஆட்டோ ஷோவில் ரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ட்ரீம் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் ஆஃப்-ரோடு சாலைகளுக்கு ஏற்ற கான்செப்ட் மாடலாக டஸ்ட்டர் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ட
ரெனோ டிசைன் லத்தின் அமெரிக்க பிரிவினால் வடிவமைக்கப்பட்டுள்ள டஸ்ட்டர் எக்ஸ்ட்ரீம் கான்செப்ட் மாடலில் ஆல் வீல் டிரைவ் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டு 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் எத்தனால் கொண்டு இயங்கும் 143 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
கிரே வண்ணத்தில் ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள துனைகருவிகளை கொண்டுள்ள இந்த மாடல் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் ரக மாடலாகவும் விளங்கும் வகையில் 4 வீல் டிரைவ் ஆப்ஷனை நிரந்தர அம்சமாக பெற்று விளங்குகின்றது. இன்டிரியரில் கருப்பு வண்ணத்திலான டேஸ்போர்டுடன் சிவப்பு வண்ண அசென்ட்ஸ் பெற்று எக்ஸ்டீரீம் என எழுதப்பட்டுள்ளது. மேலும் மூன்று ஸ்போக் கொண்ட பல்வேறு பயன்களை அளிக்கும் ஸ்டீயரிங் வீலில் 4WD என்றும் எழுதப்பட்டுள்ளது.
எந்த சாலையிலும் பயணிக்கும் வகையிலான சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் ஸ்போர்ட்டிவ் அம்சங்களை கொண்டதாக ரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ட்ரீம் விளங்குகின்றது.