Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

சீனாவிலிருந்து 15,022 கிமீ கடந்து பிராங்பேர்ட் பயணித்த ஏஐவேஸ் U5 எலக்ட்ரிக் கார்

by automobiletamilan
September 12, 2019
in Auto Show

 aiways-u5-guinness-world

சீனாவைச் சேர்ந்த ஏஐவேஸ் (AIWAYS) எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் புதிய U5 எலக்ட்ரிக் காரின் முன்மாதிரி மாடல் சீனாவிலிருந்து 53 நாட்களில் 12 நாடுகளின் வழியாக 15,022 கிலோமீட்டரை (9,334 மைல்) கடந்த பிராங்பேர்ட் மோட்டார் ஷோ அரங்கிற்கு சென்றடைந்துள்ளது. இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏஐவேஸ் நிறுவனம் மிக நீண்ட தொலைவு பயணித்த எலக்ட்ரிக் வாகனம்  (“longest journey by an electric vehicle (prototype)) என்ற பெருமையை பதிவு செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

சீனாவின் சாங்சி மாகாணத்தில் அமைந்துள்ள சிய்யான் என்ற இடத்திலிருந்து கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி பயணத்தை தொடங்கிய இரண்டு யூ5 எலக்ட்ரிக் கார்கள், பழங்கால பட்டுப்பாதையை பின்பற்றி 12 நாடுகளின் வழியாக பல்வேறு காலநிலைகள், சாலை நிலைமைகள் மற்றும் குறைந்த சார்ஜிங் உள்கட்டமைப்புகளை எதிர்கொண்டு இந்த கார்கள் சோதிக்கப்பட்டு 53 நாட்கள் பயனத்தை இந்நிறுவனத்தின் டிரைவ் குழு மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளது.

முன்மாதிரிகள் சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, பின்லாந்து, நோர்வே, சுவீடன், டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து வழியாக பயணித்துள்ளது. வழியில் உள்ள, சீன கோபி பாலைவனம், கசாக் ஸ்டெப்பி மற்றும் தெற்கு யூரல் மலைகள், கடக்க கடினமாக உள்ள இடங்கள் மற்றும் போதுமான மின்சார சார்ஜிங் வசதி இல்லாத இடங்களில் கான்வே மூலம் கடந்துள்ளது.  மேலும் சில இடங்களில் குறைந்த மின்னழுத்தத்தின் காரணமாக இரவு முழுவதும் சார்ஜிங் செய்து பயணித்துள்ளனர்.

 aiways-u5

U5  எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலில் 140 kW (188 HP) பவரை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 315 Nm ஆகும். முன்புற வீல் டிரைவ் பெற்ற இந்த காரின் சிங்கிள் சார்ஜ் மூலம் அதிகபட்சமாக 460 கிமீ பயணிக்கலாம். இந்த காரில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் டெக் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 2020 முதல் ஐரோப்பாவில் விற்பனைக்கு கிடைக்கலாம்

மேலும், சமீபத்தில் மினி கூப்பர் SE எலக்ட்ரிக் 400 கிமீ பயணித்து முனீச்சிலிருந்து பிராங்பேர்ட் வந்தடைந்தது.

Tags: AIwaysAiways U5 EVElectricFrankfurt Motor Show
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version