சுஸூகி ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் எஸ்எஃப் என இரு பைக் மாடல்களிலும் சிறப்பு வண்ணத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஸ்பெஷல் எடிசனை சுஸூகி மோட்டார்சைக்கிள் வெளியிட்டுள்ளது.
150சிசி சந்தை பிரிவில் சிறந்து விளங்கும் ஜிக்ஸர் பைக்கில் ஜிக்ஸர் நேக்ட் வகையிலும் ஜிக்ஸர் SF முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாகவும் கிடைக்கின்றது. ஜிக்ஸர் எஸ்பி என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு பதிப்பில் மேட் கிரே பெயின்ட் வண்ணத்துடன் பாடி கிராஃபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு எடிசன் ரியர் டிஸ்க் பிரேக் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். சிறப்பு எடிசனில் சேர்க்கப்பட்டுள்ள மேட் கிரே வண்ணத்துடன் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு மெரூன் வண்ணத்திலான இருக்கைகளுடன் சிறப்பான தோற்றத்தினை பெற்று விளங்குகின்றது.
14.6 பிஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 155சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 14 என்எம் ஆகும். இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. சுஸூகி ஈகோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ள இரு பைக்குகளின் மைலேஜ் லிட்டருக்கு 50 கிமீ வரை கிடைக்கும். ஜிக்ஸர் பைக்குகளில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரினை பெற்று விளங்குகின்றது. முன்பக்க டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் கிடைக்கின்றது.
இந்திய இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ள ஜிக்ஸர் ஸ்டீரிட் பைக்குகள் சிறப்பான செயல்திறன் மற்றும் ஸ்டைலிங் போன்ற அம்சங்களில் சிறப்பான ஆளுமையை பெற்றுள்ளதாக சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரிவின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சுசூகி ஜிக்ஸர் விலை ரூ. 80,726
சுசூகி ஜிக்ஸர் SF ரூ. 88,857
( அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்த சுசூகி ஜிக்ஸர் SF FI ( FI- Fuel Injected) மாடல் விரைவில் டெலிவரிக்கு தயாராகின்றது.
[foogallery id=”9807″]