பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வி அணிவரிசையில் புதிய 125சிசி பைக் டிசம்பர் மாத தொடக்க வாரத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஜாஜ் வி12 பைக் விலை ரூ. 56,200 ஆகும்.
அலுவல்ரீதியாக அடுத்த சில நாட்களில் புதிய V12 பைக் பற்றி விபரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வி15 பைக்கின் கீழாக டிஸ்கவர் 125 பைக்கிற்கு இடையில் நிலைநிறுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட பைக் மாடல் வி15 என அழைக்கப்படுவதனால் வரவுள்ள பைக்கில் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்பதனால் வி12 என அழைக்கப்படலாம்.
11 ஹெச்பி ஆற்றல் வெளிப்படுத்தும் 125 DTS-i எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதன் டார்க் 10.8 நியூட்டன் மீட்டர் இருக்கும். வடிவமைப்பினை பொருத்தவரை விற்பனையில் உள்ள வி15 பைக்கின் தோற்றத்திலே அதே போன்ற பேட்ஜ் ,வண்ணங்கள் மற்றும்கூடுதலாக புதிய வண்ணங்களை பெற்று விளங்கலாம்.
பஜாஜ் வி15 பைக் பெட்ரோல் டேங்க் ஐஎன்எஸ் விக்ராந்த போர்கப்பலின் மெட்டல் பாகத்தால் உருவாக்கப்பட்டிருப்பதை போலவே இதன் பெட்ரோல் டேங்கும் அதே பாகத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வி15 பைக்கின் மாடலை சுமார் ரூ.6000 குறைவாக பஜாஜ் வி12 விலை ரூ.56,200 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி ) இருக்கலாம்.
கடந்த பிப்ரவரி 1,2016யில் விற்பனைக்கு வந்த வி15 இதுவரை 2லட்சம் பைக்குகளை விற்பனை செய்துள்ளது.மேலும் இந்தியாவின் 7 மாநிலங்களில் 150சிசி பிரிவு சந்தையில் முன்னனி இடத்தை வகிக்கின்றது.