Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2017 சுசுகி GSX-R1000, GSX-R1000R பைக்குகள் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
May 4, 2017
in பைக் செய்திகள்

இந்தியாவில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக 2017 சுசுகி GSX-R1000 மற்றும் சுசுகி GSX-R1000R பைக்குகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.  இரு மாடல்களும் முழுவதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது.

2017 சுசுகி GSX-R1000

  • 2017 சுசுகி GSX-R1000 ஸ்போர்ட்ஸ் பைக் விலை ரூ. 19 லட்சம்.
  • 2017 சுசுகி GSX-R1000R ஸ்போர்ட்ஸ் பைக் விலை ரூ. 22 லட்சம்
  • இரு மாடல்களும் சிபியூ முறையில் விற்பனைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது.

கிங் ஆப் ஸ்போர்ட்ஸ் பைக் என சுசுகி நிறுவனத்தால் அழைக்கப்படுகின்ற இந்த சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்கின் 6 வது தலைமுறை மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச அளவில் 1 மில்லியன் GSX-R பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இரு பைக்குகளிலும் 202 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1000சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் அதிகபட்சமாக 117.60 என்எம் ஆகும். இதில் சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்து செல்ல 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

GSX-R1000 பைக்கில் 6 விதமான கோணங்களில் பைக்கை கட்டுப்படுத்தும் ஐஎம்யூ, 10 விதமான மோஷன் டிராக்ஷ்ன் கன்ட்ரோல் மோட் போன்றவற்றுடன் ஏபிஎஸ் , எல்இடி முகப்பு விளக்கு ,எல்இடி டெயில் விளக்கு போன்றவற்றை பெற்றுள்ளது.

பல்வேறு நவீன தலைமுறை வசதிகளை பெற்றுள்ள இரு சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்கிலும் GSX-R1000 மாடலை விட GSX-R1000R பைக்கில் கூடுதலாக ஃபிரீ சஸ்பென்ஷன் , லேன்ச் கன்ட்ரோல் , பை- டைரக்ஷனல் குயீக் ஷிஃப்டர், கார்னிங் ஏபிஎஸ் , எல்இடி லைட் போசிஷன் போன்றவற்றை கொண்டுள்ளது.

2017 சுசூகி GSX-R1000 பைக்கில் நீலம் மற்றும் மெட்டாலிக் கருப்பு என இரு நிறங்களில்  கிடைக்கும். இதேபோன்று GSX-R1000R பைக்கிலும் நீலம் மற்றும் ஸ்பார்கிள் பிளாக் என இரு நிறங்களில் கிடைக்கும்.

  • 2017 சுசுகி GSX-R1000 ஸ்போர்ட்ஸ் பைக் விலை ரூ. 19 லட்சம்.
  • 2017 சுசுகி GSX-R1000R ஸ்போர்ட்ஸ் பைக் விலை ரூ. 22 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி )

 

Tags: GSX-R1000Suzuki
Previous Post

ரெனோ டஸ்ட்டர் பெட்ரோல் விற்பனைக்கு வந்தது

Next Post

ஜாவா 350 OHC பைக் விற்பனைக்கு வெளியானது

Next Post

ஜாவா 350 OHC பைக் விற்பனைக்கு வெளியானது

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version