இந்திய சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2017 சுசூகி லெட்ஸ் மற்றும் ஹயாத் EP பைக் மாடல்களை பிஎஸ் 4 எஞ்சினுடன் அறிமுகம் செய்துள்ளது. வேறு எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை.
2017 சுசூகி லெட்ஸ்
- வருகின்ற ஏப்ரல் 1 முதல் பாரத் ஸ்டேஜ் 4 மாசு விதி அமலுக்கு வருகின்றது.
- ஜிக்ஸர் ,ஆக்செஸ் மாடல்களை தொடர்ந்து லெட்ஸ் மற்றும் ஹயத் மாடலிலும் பிஎஸ் 4 எஞ்சின் சேர்க்கப்பட்டுள்ளது.
- அனைத்து தயாரிப்பாளர்களும் தங்களுடைய மாடல்களை பிஎஸ் 4க்கு மாற்றி வருகின்றனர்
புதிய சுசுகி ஹயாத் EP பைக் பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 112.8சிசி 4 ஸ்ட்ரோக் பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதுடன், 9.3 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது.
புதிய சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர் மாடலில் 112சிசி பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8.4 பிஹச்பி ஆற்றலுடன் 8.8 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது.
விலை விபரம்
- புதிய சுசூகி லெட்ஸ் ஆரம்ப விலை ரூ. 47,272
- புதிய சுசுகி ஹயாத் ஆரம்ப விலை ரூ. 52,754
( ஆரம்ப விலை டெல்லி எக்ஸ் ஷோரூம் )