ஜாவா மோட்டார்சைக்கிள் பிராண்டில் வெளிவந்துள்ள 42 மாடலின் வெர்ஷன் 2.1 பதிப்பில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் மற்றும் இன்ஜின் மேம்படுத்தப்பட்டு தற்போது பவர் 0.8 ஹெச்பி வரை உயர்த்தப்பட்டுள்ளது.
டிசைன் மாற்றங்கள்
புதிய ஜாவா 42 வெர்ஷன் 2.1 மாடலில் தொடர்ந்து ரெட்ரோ டிசைனை கொண்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்று பார் என்டில் மிரர் கொடுக்கப்பட்டுள்ளது. வயர் ஸ்போக்டு வீலுக்கு மாற்றாக ஸ்போர்ட்டிவான அலாய் வீல் உட்பட பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்கள் சிறிய அளவில் இணைக்கப்பட்டுள்ளது. ஹெட்லைடில் கிரில், சிறிய ஃபிளை ஸ்கீரின், 42 பேட்ஜ் பெற்ற ரேசிங் ஸ்டீரிப் டேங்க் மேல் இணைக்கப்பட்டுள்ளது.
ட்யூப்லெஸ் டயருடன் பல்வேறு சிறிய மாற்றங்கள் மட்டும் பெற்றுள்ள ஜாவா ஃபார்ட்டி டூ பைக்கின் முந்தைய மாடலும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது. முன்பாக ஜாவா 42 மாடலை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆக்செரீஸ்களும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது.
புதிய நிறங்கள்
பல்வேறு இடங்களில் கருமை நிறம் மற்றும் க்ரோம் ஃபினீஷ் செய்யப்பட்ட பாகங்களை ஜாவா கொடுத்துள்ளது. புதிய மாடலில் ஆல் ஸ்டார் கருப்பு, சிரஸ் வெள்ளை மற்றும் ஓரியன் சிவப்பு என மூன்று நிறங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
இன்ஜின் மேம்பாடு
முந்தைய மாடலை விட சிறப்பான வகையில் இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய ஜாவா 42 பைக்கில் 293 சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27.3 bhp பவரையும், 27 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து இரண்டு புகைப்போக்கிகளை பெற்றுள்ள ஃபார்ட்டி டூ மாடலின் எடை முந்தைய மாடலை விட 1 கிலோ வரை குறைந்துள்ளது. கேட்டலைட்டிக் கன்வெர்ட்டர் நீக்கப்பட்டு, கேட்கான் பொருத்தப்பட்டுள்ளதால், தற்போது 171 கிலோகிராம் எடை மட்டுமே உள்ளது.
மற்றவை
மற்றபடி ஜாவா 42 மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறத்திலும், பின்புறத்தில் இரட்டை ஸ்பீரிங் பெற்ற ஷாக் அப்சார்பர், தட்டையான இருக்கை அமைப்பினை கொண்டுள்ளது. பிரேக்கிங் அமைப்பினை பொறுத்தவரை தொடர்ந்து டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது.
விலை
ஜாவா 42 பைக்கின் விலை ரூ.1.84 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 ஆகியவை உள்ளது.