ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனம், புதிய 125 டியூக் மாடலை இந்திய சந்தையில் ரூ.1,50,010 (எக்ஸ்ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து கேடிஎம் டீலர்களிடமும் கிடைக்க துவங்கியுள்ளது.
விற்பனையில் கிடைக்கின்ற உயர் ரக கேடிஎம் 1290 சூப்பர் டியூக் R பைக்கின் தோற்ற உந்துதலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய கேடிஎம் 125 டியூக் பைக்கில், 14.5 PS பவர் 9,250rpm-லும், அதிகபட்சமான டார்க் 12 Nm, 8,000rpm-ல் வழங்கும் 125cc லிக்யூடு கூல்டு ஃப்யூவல் இன்ஜெக்ஷன் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
200 டியூக் பைக்கினை போல இரண்டு பிளவு எல்இடி ஹெட்லைட் இணைக்கப்பட்டு, கூர்மையான தோற்றத்தை வெளிப்படுத்தும் பெட்ரோல் டேங்க், டெயில் செக்ஷன் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய 10.5 லிட்டர் டேங்கிற்கு பதிலாக இப்போது 13.5 லிட்டர் டேங்க் உள்ளது. முந்தைய மாடலை போல அல்லாமல் இப்போது ஸ்பிளிட் டைப் trellis சேஸ் கொடுக்கப்பட்டு, சிறப்பான வகையில் ரைடிங் டைனமிக்ஸ் மேம்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மாடலில் WP யூஎஸ்டி ஃபோர்க் முன்புறத்திலும், பின்புறத்தில் WP மோனோ ஷாக் சஸ்பென்ஷன் இணைக்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
முன்பாக விற்பனை செய்யப்பட்ட மாடலை விட புதிய 2021 கேடிஎம் 125 டியூக் விலை ரூ.8,000 வரை உயர்த்தப்பட்டு, ரூ.1,50,010 (எக்ஸ்ஷோரூம் டெல்லி) ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் ஆரஞ்ச், செராமிக் வெள்ளை என இரு நிறங்களை கொண்டுள்ளது. இந்த பைக்கிற்கு சவாலாக யமஹா எம்டி-15 பைக் ரூ.10,000 வரை விலை குறைவாக கிடைக்கின்றது.
web title – 2021 KTM Duke 125 Launched