ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 என இரு மாடல்களிலும் ஐந்து புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டு, பல்வேறு கஸ்டமைஸ் வசதிகளை வழங்கும் Make it Yours (MiY) வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள மெக்கானிக்கல் வசதிகள் மற்றும் இன்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. 650 சிசி என்ஜின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
இன்டர்செப்டார் 650 பைக்கில் புதிதாக ஒற்றை நிறத்தில் கேனியன் ரெட் மற்றும் வென்ச்சுரா ப்ளூ., டூயல் டோன் ஆப்ஷனில் டவுன்டவுன் டிராக், மற்றும் சன்செட் ஸ்ட்ரிப் மற்றும் மார்க் 2 என்ற புதிய குரோம் வேரியண்ட் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய நிறங்களான ஆரஞ்சு க்ரூஸ் மற்றும் பேக்கர் எக்ஸ்பிரஸ் கிடைக்கின்றது. இந்த பைக்குகளின் ஒற்றை நிற மாடல்களில் கருப்பு நிற வீல் மற்றும் மட்கார்டு உள்ளது.
கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கில் புதிதாக ஒற்றை வண்ணத்தில் ராக்கர் ரெட் மற்றும் பிரிட்டிஷ் ரேசிங் கிரீன்.., டக்ஸ் டீலக்ஸ் மற்றும் வென்ச்சுரா ஸ்ட்ராம், மிஸ்டர் க்ளீன் என்ற புதிய வேரியன்ட் கிடைக்கின்றது.
Variant | Price |
---|---|
2021 Interceptor 650 Single Tone | ரூ. 2,75,467 |
2021 Interceptor 650 Dual Tone | ரூ. 2,83,593 |
2021 Interceptor 650 Chrome | ரூ. 2,97,133 |
2021 Continental GT 650 Single Tone | ரூ. 2,91,701 |
2021 Continental GT 650 Dual Tone | ரூ. 2,99,830 |
2021 Continental GT 650 Chrome | ரூ. 3,13,367 |
(எக்ஸ்ஷோரூம்)