சமீபத்தில் வெளியான மீட்டியோரில் இடம்பெற்றிருந்த டிரிப்பர் நேவிகேஷன் பெற்ற 2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் சாலை சோதனை ஓட்ட படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது.
தோற்ற அமைப்பில் பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லாமல், தற்போது விற்பனையில் கிடைக்கின்ற ஹிமாலயனின் பல்வேறு அம்சங்களில் எந்த மாற்றங்களும் இல்லாமல், கூடுதலான சில நிறங்களை மட்டும் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
ஹிமாலயன் பைக்
ஹிமாலயனில் உள்ள 23.5 ஹெச்பி பவர் மற்றும் டார்க் 32 என்எம் வெளிப்படுத்தும் 411 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
தற்போது வெளியான மீட்டியோர் 350 பைக்கில் உள்ள கூகுள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் கொண்ட ஸ்மார்ட்போன் மூலம் ப்ளூடுத் வாயிலாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியுடன் வழங்கப்பட உள்ள டிரிப்பர் நேவிகேஷன் கொண்டிருக்கும். தற்போது உள்ள ஹிமாலயன் கிளஸ்ட்டரில் கூடுதலாக இதற்கான ஸ்லால்ட் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ள மாடலில் இந்த நேவிகேஷன் இடம்பெற்றிருக்கின்றது.
அட்வென்ச்சர் ஸ்டைல் பெற்ற என்பீல்ட் ஹிமாலயன் பைக் மிக சிறப்பான திறனை பெற்ற மாடலாக இந்திய சந்தையில் விளங்குகின்றது.
பட உதவி – gaadiwaadi