டிவிஎஸ் மோட்டார் கம்பெனி வெளியிட்டுள்ள புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் வசதியுடன் கூடிய வேரியண்ட் மற்றும் ஸ்பெஷல் எடிசன் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது.
சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் ரைடர் 125 மற்றும் ஜூபிடர் 125 என இரு மாடல்களை வெளியிட்டிருந்த நிலையில் ஆர்டிஆர் 160 4வி பைக்கில் சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்களை மட்டும் கொண்டு வந்துள்ளது.
2022 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V
தோற்ற அமைப்பில் முன்புற எல்இடி ஹெட்லைட் சற்று புதுப்பிக்கப்பட்டு அப்பாச்சி RTR 160 4V மாடலில் தொடர்ந்து 17.63PS at 9250rpm மற்றும் 14.73Nm at 7250rpm வெளிப்படுத்தும் 159.7cc சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பெஷல் எடிஷன் மாடல் உட்பட அனைத்து வேரியண்டிலும் அர்பன், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங் மோடினை பெற்றுள்ளது. டாப் மற்றும் ஸ்பெஷல் வேரியண்டில் கியர் ஷிப்ட் இன்டிகேட்டர் மற்றும் பின்புறத்தில் ரேடியல் டயர் உடன் டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் கன்சோலும் இடம்பெற்றுள்ளது. ஆர்டிஆர் 160 4 வி எஸ்பி மாடலை பொறுத்தவரை, சிவப்பு அலாய் வீல்கள், புதிய இருக்கை முறை மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்களை கொண்ட பிரத்யேக மேட் பிளாக் நிறத்தைப் பெறுகிறது.
2022 TVS Apache RTR 4V price
Variant | Price |
---|---|
2022 TVS Apache RTR 160 4V Drum | Rs. 1,15,265/- |
2022 TVS Apache RTR 160 4V Single Disc | Rs. 1,17,350/- |
2022 TVS Apache RTR 160 4V Dual Disc | Rs. 1,20,050/- |
2022 TVS Apache RTR 160 4V Special Edition | Rs. 1,21,372/- |