Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ.39,100 வரை ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயர்ந்தது

by automobiletamilan
June 2, 2023
in பைக் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

ampere-primus-side

கிரீவ்ஸ் மொபைலிட்டி நிறுவனத்தின் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களான பிரைமஸ், மேக்னஸ் EX, ஜீல் EX என மூன்றின் விலையும் உநர்த்தப்பட்டுள்ளது. ஆம்பியர் பிரைமஸ் விலை அதிகபட்சமாக ரூ.31,900 உயர்த்தப்பட்டு இப்பொழுது ₹ 1,49,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் phased manufacturing programme (PMP) திட்டத்தின் மூலம் மோசடியில் சிக்கிய ஆம்பியர் எலக்ட்ரிக் 124 கோடியை வட்டியுடன் செலுத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஹீரோ எலக்ட்ரிக், ஓகினவா ஆட்டோடெக் போல ஆம்பியர் நிறுவனமும் FAME-II மானியத் திட்டத்தில் இருந்து முழுவதுமாக பதிவு நீக்கம் செய்யப்படுவதை எதிர்கொண்டுள்ளது.  எனவே, ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான விலை உயர்வை அறிவித்துள்ளது.

Ampere Escooter Price hiked

தொடக்க நிலை ஜீல் EX, முன்பு ரூ.75,000 விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.20,900 விலை உயர்த்தப்பட்டு இப்பொழுது ரூ.95,900 ஆக உள்ளது. அடுத்து, மேக்னஸ் EX, மாடல் ரூ.83,900 ஆக இருந்த நிலையில் ரூ.21,000 அதிகரிக்கப்பட்டு ரூ.1.05 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, ஆம்பியர் ப்ரைமஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1.10 லட்சமாக இருந்தது, ஆனால் இப்போது ரூ.1.49 லட்சமாக இருக்கும். இது முன்பை விட ரூ. 39,100 விலை உயர்ந்துள்ளது.

ampere electric scooter

அதிகவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக விளங்குகின்ற பிரைமஸ் மாடலின் அதிகபட்ச வேகம் 77Km/h மற்றும் முழுமையான சிங்கிள் சார்ஜில் 107 Km பயணிக்கலாம் என சான்றிதழ் வழங்கப்பட்டுளது. 12 அங்குல வீல் பெற்று இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் உடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்குவதுடன் நேவிகேஷன் அசிஸ்ட் வழங்குகின்றது.

Ampere Primus – ₹ 1,49,000

Ampere Magnus EX – ₹ 1,05,000

Ampere Zeal EX – ₹ 95,900

மேலும் படிங்க – ஏதெர், ஓலா, ஐக்யூப், விடா விலை உயர்வு

Tags: Ampere Magnus EXAmpere PrimusAmpere Zeal EXElectric Scooter
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan