ஏதெர் எனர்ஜி நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது 450X , 450X (2.9kwh) மற்றும் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அதிகபட்சமாக ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்குவதுடன் கூடுதலாக கார்ப்பரேட் சலுகை, சிறப்பு இஎம்ஐ திட்டம் ஆகியவற்றை நவம்பர் 15 ஆம் தேதி வரை வழங்குகின்றது.
பெட்ரோல் ஸ்கூட்டரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் மின்சார ஸ்கூட்டர் மாடல்களை வாங்கினால் அதிகபட்சமாக ரூ. 40,000 வரை தள்ளுபடி கிடைக்கும். உங்கள் பெட்ரோல் இருசக்கர வாகனத்தின் வயது, நிபந்தனை மற்றும் அசல் கொள்முதல் விலை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.
Ather 450 Escooter Festive Offers
ரூ.40,000 சலுகையை தவிர, பண்டிகை முன்னிட்டு ஏதெர் 450X புரோ பேக் மாடலை வாங்குபவர்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி, கார்ப்பரேட் சலுகையாக ரூ.1,500. மறுபுறம், 450X வகைகளும், அதே கார்ப்பரேட் திட்டத்தைப் பெறுகின்றன. கடைசியாக, 24 மாத இ.எம்.ஐ திட்டத்தில் 5.99 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகின்றது. இந்த பண்டிகை சலுகைகள் அனைத்தும் நவம்பர் 15 வரை செல்லுபடியாகும்.
Ather 450S – ₹ 1,29,949
Ather 450X 2.9 Kwh – ₹ 1,37,950
Ather 450X 3.7 Kwh – ₹ 1,44,871
(ஏதெர் விலை பட்டியல்)
மேலும் படிக்க – ஓலா பார்த் இவி ஃபெஸ்ட் தள்ளுபடி