விற்பனையில் உள்ள ஏதெர் 450S HR அடிப்படையில் 156 கிமீ ரேஞ்ச் வழங்குகிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம்.
450S பேட்டரி மின்சார ஸ்கூட்டரில் 115 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்நேரத்தில் 80-85 கிமீ வரை ரேன்ஜ் வழங்கலாம். பேட்டரி திறன் 2.9 kWh ஆக பெற்ற ஏதெர் 450S டாப் ஸ்பீடு 90Km/hr ஆக இருக்கும்.
Ather 450S HR
விற்பனையில் உள்ள 450 எஸ் மாடலின் மின்சார மோட்டார் மற்றும் வசதிகளை பகிர்ந்து கொள்ளுகின்ற 450S HR ஸ்கூட்டரில் பெரிய 450X டாப் வேரியண்ட் 3.7KWh பேட்டரி பயன்படுத்தப்பட உள்ளது.
450 S மாடலை போலவே, 450S HR மாடலும் அதிகபட்சமாக 5.4kW மற்றும் 22Nm டார்க் வெளிப்படுத்தும். மற்றபடி, சிங்கிள் சார்ஜ் மூலம் அதிகபட்சமாக 156 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நிகழ் நேரத்தில் 125 – 130 கிமீ வரை கிடைக்கலாம்.
விற்பனையில் உள்ள 450எஸ் மாடலை விட 450எஸ் ஹெச்ஆர் ரூ.8,000 வரை கூடுதலாக விலை அமையலாம்.
Ather 450S – ₹ 1,29,949
Ather 450X 2.9 Kwh – ₹ 1,37,950
Ather 450X 3.7 Kwh – ₹ 1,44,871
கூடுதலாக, ஏதெர் 450S 2.9 Kwh புரோ பேக் கட்டணம் ரூ.14,000,